வெள்ளி, 2 அக்டோபர், 2026

சேலம் ஆத்தூர் வருவாய் வட்டாட்சியர் கோடிக்கணக்கான பண மோசடி குறித்து முத்தரப்பு பேச்சு வார்த்தை. சூரமங்கலம் ஆர்டிஓ அலுவலகத்தில் கலந்து கொள்ள வந்த சமூக ஆர்வலர் டாக்டர் செந்தில்குமாருக்கு கொலை மிரட்டல். ஆட்கள் பற்றாக்குறை என்று அலைக்கழித்த சேலம் மாநகர காவல் துறை.

சேலம், 
S.K. சுரேஷ் பாபு. 

சேலம் ஆத்தூர் வருவாய் வட்டாட்சியர் கோடிக்கணக்கான பண மோசடி குறித்து முத்தரப்பு பேச்சு வார்த்தை. சூரமங்கலம் ஆர்டிஓ அலுவலகத்தில் கலந்து கொள்ள வந்த சமூக ஆர்வலர் டாக்டர் செந்தில்குமாருக்கு கொலை மிரட்டல். ஆட்கள் பற்றாக்குறை என்று அலைக்கழித்த சேலம் மாநகர காவல் துறை. 

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், சிங்கீபுரம் கிராம நிர்வாக அலுவலர் மீது சுமத்தப்பட்டுள்ள நில உரிமை மாற்ற மோசடி மற்றும் பல கோடி ரூபாய் முறைகேடு புகார்கள் குறித்தும், இது தொடர்பாக நடவடிக்கை கோரியும் சேலத்தை சேர்ந்த சிறந்த சமூக சேவகரும் அமித்ஷா இளைஞர் படை அணியின் மாநில துணை தலைவர் டாக்டர் செந்தில்குமார் புகார் மனு தொடர்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வதற்காக சேலம் சூரமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அந்த மனுவில், சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், சிங்கீபுரம் கிராமத்தில் 1926-ஆம் ஆண்டு முதல் அசல் ஆவணங்களோ, நில அளவை பதிவேடுகளோ அல்லது UDR நில அளவை விவரங்களோ இல்லை. இத்தகைய சூழலில், போலியான இணையவழிப் பட்டா (online patta) என்பது, விவசாயிகளிடமிருந்து லஞ்சம் பெறுவதற்காக அவர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு மாயை ஆகும். கல்லங்குத்து நிலங்கள், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள்,  இலங்கை அகதிகள் முகாம் நிலங்கள் மற்றும்  பெருமாள் மலைப் பகுதியைச் சுற்றியுள்ள இடங்கள் போன்ற நிலங்கள் தனிநபர்களுக்குப் பட்டாவாக வழங்கப்பட்டுள்ளன. 
எனவே, மேற்கூறிய கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமி அவர்களைப் பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன் இன்று குறிப்பிட்டு இருந்த அந்த மனுவில் இன்று நடைபெற உள்ள முத்தரப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்று சேலம் அஸ்தம்பட்டி தண்ணீர் டேங்க் அருகே வந்து கொண்டிருந்த சமூக சேவகர் டாக்டர் செந்தில்குமாரை வழிமறித்த இரு சக்கர  வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் கொடுப்பது தொடர்பாக டாக்டர் செந்தில்குமார் சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தை அணுகியபோது அங்கு இருந்து அதிகாரிகள் இங்கே போதுமான ஆட்கள் பணியில் இல்லை என்பதால் அவரது புகார் மீது எந்த விதமான நடவடிக்கை எடுக்காமல் திருப்பி அனுப்பியது சேலத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: