S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாவட்டம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பொதுமக்களிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பெயரைப் பயன்படுத்தி வீடு மற்றும் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, கோடிக்கணக்கான ரூபாயைச் சுருட்டிய இளங்கோவன் மற்றும் சரவணன் ஆகியோர் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க அமித்ஷா இளைஞர் படையணி புகார் மனு.
சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியை சார்ந்தவர் டாக்டர் செந்தில்குமார். இவர் அமித்ஷா இளைஞர் படையணியின் மாநில துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் புகார் மனு கொடுப்பதற்காக சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அந்த புகார் மனுவில், தான் ஒரு சமூக ஆர்வலர். எனது உறவினரான திருஞானசம்பத் என்பவரை, '3 ரோடு' பகுதியில் உள்ள 'கியாகர்' நிறுவனத்தில் பணிபுரியும் சரவணன் என்பவர், மார்ச் 2023 முதல் ஏமாற்றி வருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நிதியிலிருந்து வீடு மற்றும் நிலம் வாங்கித் தருவதாகப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, கடந்த 3 ஆண்டுகளாக அவரிடமிருந்து மொத்தம் 2,00,000 ரூபாயைப் பெற்று மோசடி செய்துள்ளார். கடந்த மாதம், 20.09.2026 அன்று, எனது உறவினர் திருஞானசம்பத் '3 ரோடு' கியாகர் நிறுவனத்திற்குச் சென்று சரவணனிடம் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, அவர் அக்டோபர் 15, 2026 அன்று பணத்தைத் தருவதாகக் கூறினார்.
ஆனால், 13.10.2026 அன்று, சரவணன் எனது உறவினர் திருஞானசம்பத்தை அழைத்து, மேலும் பத்து நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார்.அவர் பணத்தைத் தருவதாகக் கூறினார். அதற்கான காரணத்தைக் கேட்டபோது, தணிக்கையாளர் இளங்கோவன் (சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா) தன்னிடம் அவ்வாறு கூறியதாகத் தெரிவித்தார். எனவே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பெயரைப் பயன்படுத்தி, வீடுகள் மற்றும் நிலங்களை வாங்கித் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் பல கோடி ரூபாயைத் மோசடி செய்த தணிக்கையாளர் இளங்கோவன் (சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா) மற்றும் சரவணன் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், எனது சகோதரர் திருஞானசம்பத் அவர்களுக்குச் சேர வேண்டிய ரூ. 2,00,000/- தொகையை மீட்டுத் தர வேண்டும் என்றும், மேலும் இவர்களிடம் ஏமாந்து பணத்தை இழந்த பிற பொதுமக்களின் பணத்தையும் மீட்டுத் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட இருவர் மீதும் சேலம் மாநகர காவல் துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் விரைவில் தமிழக முதல்வரையும் மத்திய உள்துறை அமைச்சர் அவர்களையும் சந்தித்து முறையிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



0 coment rios: