உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் 466வது கந்தூரி விழா தொடங்குவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
நாகை மாவட்டத்திலுள்ள நாகூரில் இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான நாகூர் ஆண்டவர் ஹஜ்ரத் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தர்கா அமைந்துள்ளது.
இந்நிலையில், 466வது கந்தூரி விழா வருகின்ற 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
பெருவிழாவிற்காக நாகூர் தர்கா முழுவதும் வண்ணம் பூசப்பட்டு பல லட்சம் ரூபாய் செலவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.நாகூர் தர்கா நிர்வாக அறங்காவலர் சையது காமில் சாகிப் தலைமையில் தர்கா நிர்வாகிகள் கந்தூரி விழாவிற்கான அனைத்து ஏற்பாடும் செய்து வருகின்றனர்.
இதனால் நாகூர் தர்கா புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது.
கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நாகையிலிருந்து வருகின்ற ஜனவரி 2ம் தேதி நடைபெற உள்ளது.
Nagore லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Nagore லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி