திங்கள், 9 டிசம்பர், 2024
புதன், 28 பிப்ரவரி, 2024
தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல்: ஆடியோ - வீடியோவில் உண்மையில்லை...!
🚨POLICE CHECK🚨
🔍 தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் வீடியோ உண்மையில்லை...
தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் என பரப்பப்படும் இந்த வீடியோக்கள் உண்மையில்லை தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு குழு அறிவிப்பு
தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் என பரப்பப்படும் இந்த வீடியோக்களை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என 'உண்மை சரிபார்ப்புக் குழு' வீடியோ வெளியிட்டுள்ளது
மேலும் தவறான தகவல்களைப் பரப்புவது குற்றச் செயலாகும் எனவும் கேட்டுகொள்கின்றது.
தற்போது வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ ஒன்று குழந்தைகளை கடத்தி உறுப்புகளை விற்கின்றார்கள் என சில வீடியோக்களின் தொகுப்பை ஒன்றினைத்து பரப்பி வருகின்றார்கள்
ஆனால் அந்த வீடியோக்கள் பல்வேறு காலகட்டத்தில் பல நாட்டில் இருந்தும் வெளிமாநிலங்களில் விபத்துகளின் நடந்த சில வீடியோக்கள் ஆகும்.
எனவே யாரும் அதனை நம்பவேண்டாம் என தமிழக அரசின் உண்மை சரிபார்க்கும் குழு வீடியோ வெளியிட்டுள்ளது.
🔍 தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு குழு அறிவிப்பு.
மேலும் இது சம்மந்தமாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்.. சமீப காலமாக சில நபர்கள். குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருவதை காண முடிகிறது.
இதுபோன்ற காணொலிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டுமென்ற பிரதான எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் பரப்பப்பட்டு வருகின்றன என்பதினை சென்னை பெருநகர காவல் உறுதிபட தெரிவித்து கொள்கிறது.
இதுபோன்ற போலியான செய்திகளை கேட்டோ, காணொலிகளை பார்த்தோ பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ, பதற்றமடையவோ தேவையில்லை என்று சென்னை பெருநகர காவல் துறை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. பொதுமக்களுக்கு இதுசம்பந்தமாக ஏதாவது சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் சென்னை பெருநகர காவல் துறை உதவி எண் 100 அல்லது 112 கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்புவோர் உடனடியாக இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மீறினால் அத்தகையோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல் துறை எச்சரிக்கிறது.
செவ்வாய், 16 ஜனவரி, 2024
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | ஸபா நியூஸ் தமிழ் நேரலை #Live https://www.youtube.com/live/FxT1ndxn-yk?si=ZSB1VbzTh1nBedoA
புதன், 20 டிசம்பர், 2023
அமைச்சர் பதவியை இழக்கிறார் பொன்முடி?: அடுத்த மூவ் என்ன?
BREAKING NEWS | சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை - 50 லட்சம் ரூபாய் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
புதன், 13 டிசம்பர், 2023
கீழ்பவானி கால்வாயில் கான்க்ரீட் திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடைபயணம் : ஆட்சியரிடம் மனு
செவ்வாய், 12 டிசம்பர், 2023
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா..! நலத்திட்ட உதவிகள் வழங்கி நலத்திட்ட நாளாக கொண்டாடிய ரசிகர்கள்...!
இன்றைய தினம் எங்களுக்கு இரட்டடிப்பு மகிழ்ச்சியை தலைவர் தந்துள்ளார் என உற்சாக மிகுதியுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினி ரசிகர்கள்..!
ஞாயிறு, 3 டிசம்பர், 2023
சூறாவளி காற்றோடு இரவு வரை கன மழை நீடிக்கும்.! சென்னை மக்களுக்கு ஷாக் கொடுத்த வானிலை ஆய்வு மையம்
சனி, 4 நவம்பர், 2023
சிக்னல் கேப்பில் தத்ரூப மௌன நாடகம் - சாலையில் பயணிப்போரின் கவனத்தை ஈர்த்த கீதாஞ்சலி பள்ளி மாணவ மாணவிகள் ...!
சிக்னல் கேப்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவ மாணவிகளின் தத்ரூப மௌன நாடகம் - சாலையில் பயணிப்போர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது ..!
செவ்வாய், 17 அக்டோபர், 2023
ஈரோடு மாவட்டத்தில் லியோ பட காட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்த ஆட்சியர்..!
அக்டோபர் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை, லியோ திரைப்படத்திற்கு ஒரு நாளுக்கு 5 காட்சிகள் மட்டும் திரையிட வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ...
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் "லியோ" திரைப்படத்திற்கான ஒரு சிறப்புக் காட்சியை அக்டோபர் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை (அதாவது ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) தொடக்க காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சியாக காலை 1.30 மணியளவில் முடிவடையும் வகையில் திரையிடப்பட வேண்டும்.
தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) விதிகள், 1957 விதிகளின்படி 14ஏ படிவம் "சி" உரிமத்தின் நிபந்தனையின்படி புதிய திரைப்படம் வெளியிடும் நிகழ்ச்சியின் போது, திரையரங்க உரிமையாளர்கள் முறையான போக்குவரத்து மற்றும் பார்க்கிங் வசதி செய்ய வேண்டும். திரையரங்குகளில் கூடுதல் காட்சி நடத்தப்படும் நேர்வில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
திரைப்படம் காண்போரின் போக்குவரத்து உள்வருதல், வெளியேறுதல் வாகனம் நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும் இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும். அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக நுழைவுக்கட்டணங்கள், வாகன நிறுத்தக்கட்டணம் வசூலிக்கக்கூடாது. திரையரங்குகள், மேற்படி விதிமுறைகளை மீறினால் தொலைபேசி எண் 0424-2260211 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு, 15 அக்டோபர், 2023
ஈரோடு ஆசனூர் சாலையில் சண்டையிட்ட காட்டுப் பன்றிகள்..!
சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் காட்டுப் பன்றிகள் சண்டையிட்ட காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என். பாளையம், கடம்பூர், தலமலை, விளாமுண்டி, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரஹள்ளி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. 1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, மான், செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன.
இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இச்சாலையில், ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் சோதனைச்சாவடி பகுதியில் வனப்பகுதியில் இருந்து உணவுக்காக வெளியே வரும் காட்டுப்பன்றிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில், நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டுப் பன்றிகள் காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே நடமாடியது. பின்னர், இரண்டு காட்டுப் பன்றிகளும் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது. இக்காட்சியானது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெள்ளி, 29 செப்டம்பர், 2023
🛑🅱️REAKING NEWS | வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை - பாலியல் வன்கொடுமை வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என சென்னை உயர் நீதிமன்றம் உறுதி
வெள்ளி, 7 ஜூலை, 2023
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் 1,000/- எப்படி விண்ணப்பிக்கலாம் ஆதார் குடும்ப அட்டை இல்லை என்றால் How to apply for magalir urimai thogai 1000 scheme
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் 1,000/- எப்படி விண்ணப்பிக்கலாம் ஆதார் குடும்ப அட்டை இல்லை என்றால் எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும்..!
தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000/- ரூபாய் வழங்க திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள் 15 ஆம் தேதி முதல் மிகப் பிரமாண்டமாக தொடங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இதற்கான விண்ணப்பபடிவங்கள் எப்படி பெறப்படும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பை திரு. மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு உதவும் வகையில் மாதம் தோறும் 1,000/- ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
திமுக ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
எதிர்க்கட்சிகளும் கூட இது குறித்து பல்வேறு வகையான கேள்விகளை தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.
இந்த சூழலில் தான் இந்த ஆண்டு பட்ஜெட்டில் மகளிர் 1,000/- ரூபாய் என்பது வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகள் இருக்கிறது இந்த சூழலில் மாவட்ட ஆட்சியர்களுடன் நடந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல் ஸ்டாலின்.
பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000/- ரூபாய் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது என்றும்.
அப்போது முதல் மாத குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000/- ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார் இதற்கு முத்தமிழ் அறிஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும்.
இந்த திட்டத்திற்கு கடந்த பட்ஜெட்டில் 7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் இன்று இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஒவ்வொரு துறையின் பங்களிப்பு குறித்தும் மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்புகள் குறித்தும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய கால கணக்கெடுப்புக்குள் இதற்கான அனைத்து பணிகளும் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் இத்தனை பெரிய திட்டம் கொண்டுவரப்படுகிறது இதுவே முதல் முறை இதை சிறப்பாக செயல்படுத்த மாவட்ட தலைவர்கள் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த திட்டம் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15ஆம் தேதி செயல்படுத்தப்படுகிறது.
அதற்கு இன்னும் சில மாதங்களை இருப்பதால் இப்போது வேகமாக செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் குறித்த தகவல்கள்
1.5 கோடி விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம் விண்ணப்பங்களை பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.
ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கவும் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் சாலைகளில் குடியிருப்போர்,பழங்குடியினர்,தூய்மை பணியாளர்கள், ஆதரவற்றோர்,இதில் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும்.
இவர்களிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, இல்லை என்றாலும் அதை பெறுவதற்கு இந்த திட்டம் கிடைக்கவும் உதவி செய்ய வேண்டும்.
தலைமை செயலாளர் தலைமையில் மாநில அளவில் இந்த திட்டத்தை கண்காணித்து ஒருங்கிணைக்க ஏற்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு குழு இதற்கான பணிகளை செய்யும்.
இதன் மூலம் மாநிலத்தில் இருக்கும் பெண்களின் நிதி நிலை மாறும் என அவர் தெரிவித்தார்.
இந்த திட்டம் சுமார் 1 கோடி மக்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படும் என்பது உண்மையான விஷயம் இந்த திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு எப்படி பணம் வழங்கப்படும்.
வங்கிக் கணக்கு மூலமாகவா அல்லது நேரடியாக வழங்கப்படும் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை.
எப்பொழுது ரேஷன் கடைகளில் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்பது குறித்தும் வெளியிடப்படவில்லை.
வியாழன், 6 ஏப்ரல், 2023
பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் 90% பத்திரிக்கையாளர்கள் உறுப்பினராக சேர முடியாத நிலை - முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக எம்எல்ஏ கோரிக்கை..!
பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் 90 சதவீத பத்திரிக்கையாளர்கள் உறுப்பினராக சேர முடியாத நிலை இருப்பதாகவும், இதில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கேட்டுக்கொண்டு உள்ளார்.
பத்திரிகையாளர்களுக்கு வீட்டு வரியை ரத்து செய்வதுடன் அவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
வெள்ளி, 31 மார்ச், 2023
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்..!
வியாழன், 23 மார்ச், 2023
எனது தந்தையாரின் இறுதிச் சடங்குகள் குடும்ப நிகழ்வாகவே இருக்க விரும்புகிறோம் - நடிகர் அஜீத்குமார் வேண்டுகோள்
புதன், 22 மார்ச், 2023
தமிழகத்தில் வரும் 24 ம் தேதி முதல் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படும் என அரசு தலைமை ஹாஜி தெரிவித்து உள்ளார்.
செவ்வாய், 21 மார்ச், 2023
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை - இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார்
சனி, 18 மார்ச், 2023
பெருந்துறை அருகே தொடர்ச்சியாக நடைபெற்ற குற்றச் சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீசார் உள்பட நால்வர் கைது
பெருந்துறை அருகே தொடர்ச்சியாக நடைபெற்று வந்த குற்றச் செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீசார் உள்பட நால்வரை கைது செய்த காவல்துறையினர்,அவர்களை சிறையில் அடைத்தனர்..!
அதிகரித்த குற்றச் செயல்கள்... தேடுதல் பணியில் தனிப்படை..!
பெருந்துறை - சித்தோடு அவிநாசி பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது அம்பலம் ... 4 பேரிடமிருந்து 6 1/2 சவரன் தங்க நகை, பட்டாகத்தி அறிவாள் உள்ளிட்டகளை பறிமுதல் செய்து போலிசார் விசாரணை...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2021ஆம் ஆண்டு பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது என பெருந்துறை காவல் நிலை தெற்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது
இதனையடுத்து, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் அறிவுறுத்தலின் பேரில், பெருந்துறை ஆய்வாளர் மசுதா பேகம், தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் பெருந்துறையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக செந்தில்குமார் என்ற கார்த்திக் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பல்வேறு குற்றச் செயல்களில் இவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
காவலரின் செல்போனில் செந்தில்குமாரின் எண்.. திடீர் ட்விஸ்ட்..!
பெருந்துறையில் காவலர் ராஜீவ்காந்தி என்பவர் நடத்தி வரும் மளிகை கடையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் தங்கி இருப்பதாக, ஆய்வாளர் மசுதா பேகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜீவ்காந்தியின் செல்போனை போலீசார் சோதனை செய்துள்ளனர்.
இதில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு சிறை சென்ற செந்தில்குமாரை விசாரணை செய்த காவலர்களில் ஒருவரான ராஜீவ்காந்தி, செந்தில்குமாருடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு மாட்டிக் கொள்ளாமல் திருடுவது எப்படி என்று தெரிவித்ததோடு, சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் சந்திக்குமாறும் கூறியுள்ளார். இதற்கிடையில் காவலர் ராஜீவ்காந்தி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
காவலரின் வழிகாட்டுதலில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள்...
இதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில்குமார், காவலர் ராஜீவ்காந்தியை சந்தித்துள்ளார். இதையடுத்து ராஜீவ்காந்தி தனது மளிகை கடையில் செந்தில்குமார், பாலசுப்பிரமணியன், கருப்புசாமி மற்றும் சிலரை தங்கவைத்து பெருந்துறை, பெருமாநல்லூர் மற்றும் சித்தோடு பகுதியில் கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையில் ஈடுபடுவதற்கு முன்பு சிசிடிவி கேமரா இல்லாத பகுதிகள், காவலர்கள் ரோந்து இல்லாத இடங்கள் ஆகியவற்றை அவர்களுக்கு காண்பித்து அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து காவலர் ராஜீவ்காந்தி, பாலசுப்பிரமணியன் மற்றும் கருப்பசாமி ஆகிய மூவரையும் கைது செய்த பெருந்துறை போலீசார், கோபிசெட்டிப்பாளையம் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆறரை பவுன் தங்க நகைகள், கொள்ளைக்கு பயன்படுத்திய கார், 2 பட்டாக்கத்தி அருவாள், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய செல்வகுமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நிலையில், செந்தில்குமாரை தேடி வந்த நிலையில், சித்தோடு காவல்துறையினர் கைது செய்தனர்.