சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் காட்டுப் பன்றிகள் சண்டையிட்ட காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என். பாளையம், கடம்பூர், தலமலை, விளாமுண்டி, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரஹள்ளி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. 1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, மான், செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன.
இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இச்சாலையில், ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் சோதனைச்சாவடி பகுதியில் வனப்பகுதியில் இருந்து உணவுக்காக வெளியே வரும் காட்டுப்பன்றிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில், நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டுப் பன்றிகள் காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே நடமாடியது. பின்னர், இரண்டு காட்டுப் பன்றிகளும் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது. இக்காட்சியானது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
0 coment rios: