செவ்வாய், 17 அக்டோபர், 2023

ஈரோடு மாவட்டத்தில் லியோ பட காட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்த ஆட்சியர்..!


ஒரு நாளுக்கு 5 காட்சிகள் மட்டும் லியோ படம் திரையிட வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்...

அக்டோபர் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை, லியோ திரைப்படத்திற்கு ஒரு நாளுக்கு 5 காட்சிகள் மட்டும் திரையிட வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ...

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் "லியோ" திரைப்படத்திற்கான ஒரு சிறப்புக் காட்சியை அக்டோபர் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை (அதாவது ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) தொடக்க காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சியாக காலை 1.30 மணியளவில் முடிவடையும் வகையில் திரையிடப்பட வேண்டும்.

தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) விதிகள், 1957 விதிகளின்படி 14ஏ படிவம் "சி" உரிமத்தின் நிபந்தனையின்படி புதிய திரைப்படம் வெளியிடும் நிகழ்ச்சியின் போது, திரையரங்க உரிமையாளர்கள் முறையான போக்குவரத்து மற்றும் பார்க்கிங் வசதி செய்ய வேண்டும். திரையரங்குகளில் கூடுதல் காட்சி நடத்தப்படும் நேர்வில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

திரைப்படம் காண்போரின் போக்குவரத்து உள்வருதல், வெளியேறுதல் வாகனம் நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும் இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும். அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக நுழைவுக்கட்டணங்கள், வாகன நிறுத்தக்கட்டணம் வசூலிக்கக்கூடாது. திரையரங்குகள், மேற்படி விதிமுறைகளை மீறினால் தொலைபேசி எண் 0424-2260211 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: