International லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
International லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 மார்ச், 2023

ஐநா அதிரடி! கைலாசாவின் கோரிக்கை நிராகரிப்பு!

ஐநா அதிரடி! கைலாசாவின் கோரிக்கை நிராகரிப்பு!

கைலாசா பிரதிநிதிகள் பேசிய பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐநா சபை அதிரடியாக கருத்தை வெளியிட்டு இருக்கிறது. திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்து கர்நாடக மாநிலத்தில் பிடதியில் ஆசிரமம் அமைத்து புகழ்பெற்ற நித்தியானந்தா தற்போது வெளிநாட்டில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி வருகிறார். இந்த நாட்டுக்கு உலக அங்கீகாரம் தேடி வருகின்றார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி ஜெனிவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான 19-வது மாநாட்டின் 73 வது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கைலாசா நாட்டின் அமெரிக்காவின் பிரதிநிதியாக விஜயபிரியா நித்தியானந்தா பங்கேற்றார். அவர் அந்த கூட்டத்தில் பேசும் போது, நித்தியானந்தா தாய் நாட்டால் வேட்டையாடப்பட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டினார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதை அடுத்து ஐக்கிய நாடுகள் சபையில் தனது அறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும், கருத்து திரிக்கப்பட்டு உள்ளது. இந்து எதிர்ப்பு பிரிவுகளால் சிதைக்கப்படுகிறது என்று விஜயபிரியா நித்தியானந்தா கூறி இருந்தார். நித்தியானந்தா தனது தாய்நாட்டில் சில இந்து எதிர்ப்பு அமைப்புகளால் துன்புறுத்தப்படுகிறார் என்று தான் நான் கூறினேன் என தெளிவுபடுத்த விரும்புகிறேன். அமெரிக்கா கைலாசா, இந்தியாவுக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறது. இந்தியாவை அதன் குரு பீடமாக மதிக்கிறது. எங்கள் கவலை எல்லாம் இந்து எதிர்ப்பு ஒரு விஷயத்தை நோக்கி மட்டுமே வழிநடத்தப்படுகிறது.

திங்கள், 27 பிப்ரவரி, 2023

கொரோனா ஏவ்வாறு பரவியது ? அமெரிக்க ஆய்வில் புதிய தகவல்..!

கொரோனா ஏவ்வாறு பரவியது ? அமெரிக்க ஆய்வில் புதிய தகவல்..!


வாஷிங்டன் : சீனாவின் வூஹானில் உள்ள பரிசோதனை மையத்தில் நடந்த சிறிய விபத்து காரணமாகவே, கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது என அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான சீனாவின் வூஹானில், ௨௦௧௯ நவம்பரில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பரவல் துவங்கியது. உலகெங்கும் மிகப் பெரும் பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக குழப்பமான தகவல்களே வெளியாகி வருகின்றன.

அமெரிக்காவின் தேசிய உளவு அமைப்பு யூ௧ல் வெளியிட்ட ஆய்வறிக்கையில், சீனாவின் வூஹானில் உள்ள பரிசோதனை மையத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவல் துவங்கியிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், எப்படி பரவல் துவங்கியது என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை என, அதில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்க மின்சக்தி அமைப்பு நடத்திய ஆய்வு தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதில், வூஹானில் உள்ள பரிசோதனை மையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாகவே கொரோனா வைரஸ் பரவல் துவங்கியுள்ளது என உறுதிபட கூறப்பட்டுள்ளது.

'அமெரிக்காவில் உள்ள மருத்துவ ஆய்வு பரிசோதனை மையங்கள் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் மின்சக்தி அமைப்பில் மருத்துவ நிபுணர்கள், புலனாய்வு நிபுணர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், இந்த ஆய்வறிக்கை, முழுமையான, உறுதி செய்யப்பட்ட தகவலாக இருக்கும்' என, ஆய்வறிக்கை தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த, 'வால் ஸ்டீர்ட் ஜர்னல்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 24 ஜனவரி, 2023

நெட்ப்ளிக்ஸ் பாஸ்வேர்டை பகிரவும் இனி கட்டணம்! – பயனாளர்கள் அதிர்ச்சி!

நெட்ப்ளிக்ஸ் பாஸ்வேர்டை பகிரவும் இனி கட்டணம்! – பயனாளர்கள் அதிர்ச்சி!

உலகம் முழுவதும் இணைய வளர்ச்சியால் மக்கள் படங்களை தங்கள் செல்போன்களிலேயே பார்த்துக் கொள்ளும் அளவிற்கு ஓடிடி தளங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. அப்படியான ஓடிடி தளங்களில் முன்னிலையில் உள்ளது நெட்ப்ளிக்ஸ்.உலகம் முழுவதும் 223 மில்லியன் சந்தாதாரர்களை நெட்ப்ளிக்ஸ் கொண்டுள்ளது. நெட்ப்ளிக்ஸை சப்ஸ்க்ரைப் செய்துள்ள பலர் தங்களது லாக் இன் பாஸ்வேர்டை தனது நண்பர்களுக்கு பகிர்வதும், ஒரே பாஸ்வேர்டை வைத்து வேறு வேறு நபர்கள் ஓடிடி தளத்தில் படங்கள் பார்ப்பதும் சமீபமாக அதிகமாக உள்ளது. அதை தடுக்கும் வகையிலும் கூடுதல் லாக் இன்னுக்கு கூடுதல் தொகை வசூலிக்கும் விதமாகவும் நெட்ப்ளிக்ஸ் புதிய ஐடியாவை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி நெட்ப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் தங்கள் பாஸ்வேர்டை வேறு நபர்களுக்கு ஷேர் செய்தால் ரூ.250 கட்டணமாக வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆரம்ப கட்டமாக சிலி மற்றும் பெரு நாட்டில் இந்த சோதனை முறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்து ஒவ்வொரு நாடாக அமல்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

நேபாளத்தில் பயணிகள் விமானம் விபத்து : 40 பேர் உயிரிழப்பு.. மீட்பு பணிகள் தீவிரம்..

நேபாளத்தில் பயணிகள் விமானம் விபத்து : 40 பேர் உயிரிழப்பு.. மீட்பு பணிகள் தீவிரம்..

நேபாளத்தில் 72 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற பயணிகள் விமானம் ஓடுதளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதுவரை 40 பேரின்உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

செவ்வாய், 13 டிசம்பர், 2022

ஏவுகணை சோதனை : இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்த சீன கண்காணிப்பு கப்பல்..!

ஏவுகணை சோதனை : இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்த சீன கண்காணிப்பு கப்பல்..!

இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையே ஒரு பனிப்போர் நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் நீண்ட நெடுங்காலமாக நடந்து வருகிறது. வணிகத்தில் உலகின் கிழக்கு பகுதியையும் மேற்கத்திய மாடுகளையும் இணைக்கும் முக்கிய பாலமாக இந்தியபெருங்கடல் இருப்பதால் அதில் ஆதிக்கம் செலுத்துபவர் உலக வர்த்தகத்தில் பெரும் கையாக இருப்பர் என்பது திண்ணம். சில மாதங்களுக்கு முன்னர் இந்திய தனது ஏவுகணைகளை சோதனை செய்யும்போது சீனாவின் ஆராய்ச்சி மற்றும் விண்வெளி கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5, ஆகஸ்ட் மாதம் இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் நிறுத்தப்பட்டிருந்தது . அப்போதே அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் அதே போன்ற சம்பவம் ஒன்று மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

இனிமேல் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் ப்ளூ டிக்! – எலான் மஸ்க் அறிவிப்பு!

இனிமேல் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் ப்ளூ டிக்! – எலான் மஸ்க் அறிவிப்பு!

ட்விட்டரில் ப்ளூடிக் வழங்குவதில் தொடர் சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில் எலான் மஸ்க் மீண்டும் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் ப்ளூடிக் முறைக்கு மாறியுள்ளார். பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதலாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. ட்விட்டரை வாங்கியதும் எலான் மஸ்க் அதிகாரப்பூர்வ ப்ளூடிக் பெறுவதற்கு கட்டணம் விதித்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால் அதேசமயம் பல போலி கணக்குகள் கூட உருவாக்கப்பட்டு ப்ளூடிக் கட்டணம் செலுத்தி பெறப்பட்டதும் சர்ச்சையானது. இதனால் ஒட்டுமொத்தமாக ப்ளூடிக் முறையை எலான் மஸ்க் நிறுத்தி வைத்தார். இந்நிலையில் இன்று முதல் அதிகமான பாலோவர்களை கொண்ட அதிகாரப்பூர்வ கணக்குகள், பிரபலங்களின் கணக்குகளுக்கு மட்டும் ப்ளூடிக் வழங்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு முன்பு இதே முறை கட்டணமின்றி இருந்த நிலையில் தற்போது கட்டணத்துடன் அமலுக்கு வந்துள்ளது.

வியாழன், 24 நவம்பர், 2022

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் – 3 பேர் பலி

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் – 3 பேர் பலி

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடர்ந்த போரானது 9 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், ரஷியா உக்ரைன் மீது ராக்கெட்டுகளை கொண்டு அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து, உக்ரைனின் கீவ் நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ கூறுகையில், தலைநகரின் உட்கட்டமைப்பு ஒன்றின் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதனால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷிய தாக்குதலில் ஏற்பட்ட சேதம் பற்றிய புகைப்படங்களை வெளிவிவகார துணை மந்திரி எமினே ஜெப்பார் டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். அதன்படி, குடியிருப்பு கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. பல நகரங்களில் மின்சாரம் இன்றி துண்டிக்கப்பட்டுள்ளன. கீவ் மற்றும் அருகேயுள்ள மோல்டோவா உள்ளிட்ட பல நகரங்களில் ராக்கெட் தாக்குதலுக்கு பின்னர், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

சனி, 19 நவம்பர், 2022

ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் ஊழியர்கள் – கவலை இல்லை என்று எலான் மஸ்க் அறிவிப்பு

ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் ஊழியர்கள் – கவலை இல்லை என்று எலான் மஸ்க் அறிவிப்பு

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தை கடந்த மாதம் 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கினார். அதன்பிறகு அந்த நிறுவனத்தில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். டுவிட்டரில் சர்வதேச அளவில் 7 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களில் பாதிப்பேரை பணிநீக்கம் செய்தார். டுவிட்டரை லாபநோக்கத்தில் செயல்பட வைக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். வீட்டில் இருந்து பணியாற்றும் கொள்கையில் மாறுதல்களை செய்தார். ஒவ்வொருவரும் அலுவலகத்துக்கு வந்து வாரத்தில் 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். 50 சதவீத பணியாளர்கள் நீக்கப்பட்டதால், எஞ்சிய ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தது. இதற்கிடையே, கடினமாக உழைக்க தயாராக இருப்பவர்கள் மட்டும் நீடிக்குமாறும், மற்றவர்கள் 3 மாத சம்பளத்துடன் விலகிக்கொள்ளுமாறும் கூறிய எலான் மஸ்க், இதுகுறித்து முடிவு எடுக்க நேற்று முன்தினம் மாலை 5 மணி வரை ‘கெடு’ விதித்தார். ‘கெடு’ முடிந்த நிலையில், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் டுவிட்டரில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். கொத்து கொத்தாக விலகி வருகிறார்கள். டுவிட்டரிலேயே ‘குட் பை’ எமோஜிகளை வெளியிட்டு வருகிறார்கள். இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்குக்கு ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு எலான் மஸ்க், ”சிறந்த ஊழியர்கள் பணியில் நீடிக்கிறார்கள். அதனால் நான் பெரிய அளவில் கவலைப்பட மாட்டேன்” என்று பதில் அளித்துள்ளார். டுவிட்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது என்றும் அவர் மற்றொரு பதிவில் தெரிவித்தார். ‘கெடு’ முடிந்தபோது, முக்கியமான ஊழியர்களாக கருதப்பட்ட சிலருடன் எலான் மஸ்க் அவசர ஆலோசனை நடத்தினார். சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் சிலர் நேரடியாகவும், வேறு சிலர் காணொலி காட்சி வழியாகவும் பங்கேற்றனர். அவர்களை தக்கவைக்க முயற்சி நடந்தது. ‘ ‘எப்படி வெற்றி பெறுவது என்று எனக்கு தெரியும். வெற்றி பெற விரும்புகிறவர்கள் மட்டும் என்னுடன் சேருங்கள்” என்றும் எலான் மஸ்க் கூறினார். இதற்கிடையே, உலகம் முழுவதும் ‘டுவிட்டர்’ அலுவலகங்கள் 21-ந் தேதி வரை தற்காலிகமாக மூடப்படும் என்றும் டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

புதன், 14 செப்டம்பர், 2022

ஒரு பூஜ்ஜியம் சேர்க்கப்பட்டதால் வாட்ச்மேன் வீட்டிற்கு ரூ.12 லட்சம் மின் கட்டணம்

ஒரு பூஜ்ஜியம் சேர்க்கப்பட்டதால் வாட்ச்மேன் வீட்டிற்கு ரூ.12 லட்சம் மின் கட்டணம்

புதுச்சேரியில் மின் துறையின் அலட்சியம் காரணமாக வாட்ச்மேன் வீட்டிற்கு 12 லட்ச ரூபாய்க்கு மின் கட்டண பில் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வரும் சரவணன் என்பவரது வீட்டிற்கு 12 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்தது, மின் கட்டணத்தை பார்த்து அதிர்ந்து போன சரவணன், இதுகுறித்து முத்தியால்பேட்டை மின் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டார். அப்போது மீட்டர் ரீடிங்கில் ஒரு பூஜ்ஜியத்தை சேர்த்து தவறாக கணக்கிட்டதாகவும், மேலும் இது சரி செய்து கொடுத்து விடுவோம் என்று கூறி நேற்று ஒருநாள் முழுவதும் சரவணனை மின் துறை அதிகாரிகள் அலைகழித்து விட்டு இன்று வருமாறு தெரிவித்துள்ளனர். இதனால் வேதனையடைந்த சரவணன் வீடு திரும்பினார். தற்போது குறித்து மின் அலுவலக இளநிலை பொறியாளர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

வெள்ளி, 9 செப்டம்பர், 2022

2-ம் எலிசபெத் காலமானார்; 70 ஆண்டுகாலம் ஆட்சி; மக்கள் கண்ணீர் அஞ்சலி

2-ம் எலிசபெத் காலமானார்; 70 ஆண்டுகாலம் ஆட்சி; மக்கள் கண்ணீர் அஞ்சலி

இங்கிலாந்து வரலாற்றில் மிக நீண்ட காலமாக மகாராணியாக இருந்து முடியாட்சி நடத்திய ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 96. ராணி 2-ம் எலிசபெத்தின் இயற்பெயர் எலிசபெத் அலெக்சாண்டிரியா மேரி. 1926 ஏப்ரல் 21-ம் தேதி பிறந்த எலிசபெத் 1952 பிப்ரவரி 6-ம் தேதி இங்கிலாந்து ராணியாக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து, கடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணியாக 2-ம் எலிசபெத் செயல்பட்டு வந்தார். இவர் இங்கிலாந்திற்கு மட்டுமின்றி 14 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி அரசியாகவும் உள்ளார். ராணி 2-ம் எலிசபெத் இங்கிலாந்து பிரதமர் தேர்வில் முக்கிய பங்கு வகித்தார். ஒவ்வொரு முறை இங்கிலாந்திற்கு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும்போது அதில் ராணி 2-ம் எலிசபெத்தின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. ராணி 2-ம் எலிசபெத்தின் கணவரான இளவரசர் பிலிப் கடந்த ஆண்டு உயிரிழந்தார். பிலிப் – எலிசபெத் தம்பதிக்கு 3 மகன்கள் 1 மகள் என 4 பேர் உள்ளனர். ராணி 2-ம் எலிசபெத் நேற்று உயிரிழந்ததையடுத்து அவரது மூத்த மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய அரசராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், மரணமடைந்த ராணி 2-ம் எலிசபெத் இங்கிலாந்தை நீண்ட காலம் ஆட்சி செய்த நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ராணி எலிசபெத் மறைந்ததுமே அவரது 73 வயது மகன் சார்லஸ் மன்னர் ஆனார். அவர் மூன்றாம் சார்லஸ் மன்னர் என அழைக்கப்படுவார். மன்னர் சார்லஸ் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் தனது அன்பிற்குரிய தாய் ராணி எலிசபெத்தின் மரணம் தனக்கும் குடும்பத்தாருக்கும் மிகப் பெரும் சோகம் என்றும் அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ராணி எலிசபெத்தின் உடல் எடின்பர்கில் உள்ள அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும், பின்னர் லண்டன் பக்கிங்காம் அரண்மனை கொண்டு செல்லப்பட்டு 10-வது நாளில் அடக்கம் செய்யப்படும்.

வெள்ளி, 8 ஜூலை, 2022

துப்பாக்கி சூட்டில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு

துப்பாக்கி சூட்டில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு

துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார். அந்நாட்டின் நாரா என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று அதிகாலை துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த ஷின்சோ அபே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 67 வயதான ஷின்சோ அபே ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை கொண்டுள்ளார். முதன்முதலாக 2006ஆம் ஆண்டு பிரதமராக தேர்வான அவர், உடல் நலக்குறைவு காரணமாக ஓராண்டிலேயே பதவி விலகினார்.பின்னர், 2012ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமராக தேர்வான அவர் 2020ஆம் ஆண்டு வரை இப்பதவியில் தொடர்ந்தார். இந்நிலையில்,2020ஆம் கோவிட் பெருந்தொற்று பரவல் ஏற்பட்ட நிலையில், தனது உடல்நிலையை காரணம் காட்டி பதவி விலகினார் ஷின்சோ அபே. ஷின்சோ அபேவின் மரணத்தையடுத்து பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.