Spiritual லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Spiritual லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

பழனி தண்டாயுதபாணி சுவாமி  கோவிலில்  தைப்பூச திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி  கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் விழாவாக நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் இன்றைய தினம் சாமி தரிசனம் செய்ய பழனிக்கு வருகை தந்துள்ளனர். 

பல்வேறு ஊர்களில் உள்ள முருகன் கோவில்களில் இன்றைய தினம் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவும் பழனி முருகன் கோவிலில் கூட்டம் அதிகரித்துள்ளது. 

பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய வசதியாக மலையடிவாரத்தில் உள்ள குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக பக்தர்களை  அனுப்பி யானை பாதையை அடையவும்,  சுவாமி தரிசனம் முடித்து கீழே இருக்கக்கூடிய பக்தர்களை படிப்பாதை வழியாக அனுப்பி வைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்கவரத்து கழகம் சார்பில் 350 க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும் ,மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்கபடுகிறது.

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.பக்தர்களின் பாதுகாப்பு வசிதிக்காக 3000 போலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

செவ்வாய், 17 ஜனவரி, 2023

சனி பெயர்ச்சி பலனையொட்டி வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு முரளிதர சுவாமிஜி தலைமையில் மஹா சிறப்பு யாகம்

சனி பெயர்ச்சி பலனையொட்டி வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு முரளிதர சுவாமிஜி தலைமையில் மஹா சிறப்பு யாகம்

சனி பெயர்ச்சி பலனையொட்டி வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு முரளிதர சுவாமிஜி தலைமையில் மஹா சிறப்பு யாகம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்யா பீடத்தில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் கடந்த 2020 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி விழாவின் போது சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார், தற்போது இந்த ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் சனி பெயர்ச்சி பலனையொட்டி வாலாஜாபேட்டை அடுத்த கீழ் புதுப்பேட்டை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு முரளிதர சுவாமிஜி தலைமையில் பல்வேறு மூலிகைகள் அடங்கிய பூஜை பொருட்களைக் கொண்டு மஹா சிறப்பு யாகம் சனீஸ்வரர் பகவானுக்கு முன்பாக வளர்க்கப்பட்டு கோவிலின் உள்ளே இருக்கும் ஜெயமங்கள சனீஸ்வரர் மற்றும் தங்க பாதாள சனீஸ்வர பகவானுக்கு பால் தயிர் இளநீர் விபூதி மஞ்சள் குங்குமம் சந்தனம் ஆகிய வாசனை திரவியங்களை கொண்டு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மஹா தீபாரதனை காட்டப்பட்டது‌. மேலும் இந்த சனிப்பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சனீஸ்வரரை மனம் இறங்கி வழிபட்டுச் சென்றனர்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

ஆங்கில புத்தாண்யொட்டி விடியற்காலை முதலே ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம்..!

ஆங்கில புத்தாண்யொட்டி விடியற்காலை முதலே ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம்..!

ஆங்கில புத்தாண்டு 2023 பிறந்ததை முன்னிட்டு புதுச்சேரியின் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது, குறிப்பாக மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று தங்க கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார், இந்நிலையில் மணக்குள விநாயகரை வழிபட ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விடிய காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்கேற்ப கோயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்புகள் வைக்கப்பட்டு மக்கள் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அதே போல் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது, மேலும் ஏராளமான பக்தர்கள் இன்று சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்களுக்கு வருவார்கள் எனபதால் மணக்குள விநாயகர் கோயில் மட்டுமின்றி பல்வேறு கோயில்களில் போலீசார் நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

வெள்ளி, 16 டிசம்பர், 2022

சபரிமலையில் குவியும் பக்தர்கள் ! 28 நாட்களில் கொழித்த வருமானம்

சபரிமலையில் குவியும் பக்தர்கள் ! 28 நாட்களில் கொழித்த வருமானம்

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதும் அதேநேரத்தில், வருமானமும் குவிந்து வருகிறது கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதும் அதேநேரத்தில், வருமானமும் குவிந்து வருகிறது சபரிமலையில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக கடந்த கார்த்திகை 1ம் தேதி நடை திறக்கப்பட்டது. இதுவரை கடந்த 28 நாட்களில் பக்தர்கள் கூட்டம் தினசரி 90ஆயிரத்துக்கும் மேல் குவிந்து வருகிறார்கள். இதனால் நிலக்கல் பகுதியில் 5.கி.மீ தொலைவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காட்டுப்பகுதியில் பக்தர்கள் தங்கள் வாகனங்களில் உணவு, குடிநீர் இன்றி 10 மணநேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சாமி தரினம் செய்ய நீண்டநேரம் வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் சூழல் இருக்கிறது. திருவிதாங்கூர் தேவஸம்போர்டு தலைவர் கே.ஆனந்தகோபன் கூறுகையில் “ இளவுங்கால் வனப்பகுதியில், மரக்கூட்டம் முதல் சன்னிதானம் வரை பக்தர்களுக்கு இலவசமாக குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்க தன்னார்வலர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். சபரிமலையில் உள்ள புனிதமான 18 படிகளிலும் நிமிடத்துக்கு 65 பக்தர்கள் ஏறி வருகிறார்கள். இந்த படிக்கட்டுகளில் அனுபவம் மிகுந்த போலீஸாரை பணிக்கு அமர்த்துமாறு அரசிடம் கேட்டுள்ளோம். தினசரி 90ஆயிரம் பேருக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது, பக்தர்கள் வசதிக்காக பூஜைகள் நிறுத்தப்படாமல் நடக்கிறது. சிறுகுழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்ட பக்தர்களை பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்யவும் வழி வகுக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசலில் இவர்கள் சிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் புக்கிங் தவிர நேரடியாக டிக்கெட் பெறுதலிலும் 10ஆயிரம் பக்தர்களுக்கு தினசரி டிக்கெட் தரப்படுகிறது. நிலக்கல் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 7 ஆயிரம் வாகனங்கள் வரை நிறுத்தப்படுகிறது. இதை 12ஆயிரமாக அதிகரி்த்துள்ளோம். கொரோனாவுக்கு முன் பெரும்பாலான பக்தர்கள் அரசுப் பேருந்துகளில்தான் வந்தார்கள், இப்போது காரில் வருகிறார்கள். அவர்களின் வாகனங்களை நிறுத்த தனி வசதி செய்யப்பட்டுள்ளது. ” எனத் தெரிவித்தார் இதையடுத்து, பக்தர்கள் வசதிக்காக, சாமி தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனிடையே பக்கர்தள் வருகையால், கடந்த 28 நாட்களில், சபரிமலை தேவஸம்போர்டுக்கு வருமானம் ரூ.148 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவலில் சீசன் முழுவதும் ரூ.151 கோடிதான் தேவஸம்போர்டுக்கு கிடைத்தது. ஆனால், இந்த ஆண்டுசீசன் தொடங்கி 28 நாட்களிலேயே ரூ.148 கோடியை வருமானம் எட்டியுள்ளது. இந்த சீசன் 2023, ஜனவரி 21ம்தேதிதான் முடிகிறது. இன்னும் ஏறக்குறைய ஒரு மாதத்துக்கு மேல் நாட்கள் இருப்பதால் இந்த ஆண்டு சபரிமலை சீசனில் திருவிதாங்கூர் தேவஸம்போர்டுக்கு வருமானம், ரூ.200 கோடிக்கு மேல் அதிகரிக்கும் எனத் தெரிகிறது கொரோனாவுக்கு முன்பு, பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் பெண்கள் சபரிமலை செல்ல முயன்றனர். இதனால், ஏற்பட்ட சலசலப்பு, பிரச்சினையால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கனிசமாகக் குறைந்து வருவாய் பாதிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா பரவல் ஏற்பட்டு, வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்குப்பின் சபரிமலையில் பக்தர்கள் கூட்டமும் அலைமோதுகிகிறது. திருவிதாங்கூர் தேவஸம்போர்டுக்கு வருமானமும் குவிந்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் ரூ.277.96 கோடி, 2018ல் ரூ.179 கோடி, 2019ல் ரூ.269 கோடி, 2020ம் ஆண்டில் ரூ.21.17 கோடி, 2021ம் ஆண்டில் ரூ.151 கோடி, 2022ம் ஆண்டில் இதுவரை ரூ.148 கோடி வருமானம் திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு கிடைத்துள்ளது

புதன், 14 டிசம்பர், 2022

புத்தாண்டில் பணக் கஷ்டம் தொடராமல் இருக்க இதைச் செய்யுங்க போதும்..!!

புத்தாண்டில் பணக் கஷ்டம் தொடராமல் இருக்க இதைச் செய்யுங்க போதும்..!!

2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த 5 பொருட்களை உங்கள் வீட்டின் வையுங்கள். அப்போது தான் புத்தாண்டில் பணம் ஒரு பிரச்னையாக இருக்காது.
விரைவில் 2022-ம் ஆண்டு விடைபெறவுள்ளது. வரும் 2023-ம் ஆண்டு மங்களகரமானதாக இருக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்தாண்டு இறுதிக்குள் குறிப்பிட்ட பொருட்களை, உங்களுடைய வீட்டுக்கு கொண்டு வரும்போது பல்வேறு நல்ல நகர்வுகள் ஏற்படும். டிசம்பர் மாதம் வந்துவிட்டது. ஜோதிட சாஸ்திரத்தில் இந்தாண்டு பல மக்களுக்கு நன்மையை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. எனினும் சிலருக்கு நேரம் சரியில்லாத காரணத்தால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்திருக்கக்கூடும். அதனால் அவர்களுடைய பொருளாதார நிலைமை, மனநிலைமை மற்றும் உடல்நலம் ஆகியவை பாதிக்கப்பட்டு இருக்கலாம். வரும் புத்தாண்டில் இதேநிலை தொடராமல் இருக்கும் பொருட்டு, சில சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. இதற்காக 2020-ம் ஆண்டுக்குள் வீட்டுக்கு சில சிறப்பு பொருட்களை கொண்டு வருவதன் மூலம், வரும் ஆண்டு உங்களுக்கு வளமையை வழங்கும். கோமதி சக்ரா வாஸ்து சாஸ்திரத்தின் படி கோமதி சக்கரம், ஸ்ரீ ஹரி விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தின் சிறிய வடிவமாக கருதப்படுகிறது. இச்சக்கரம் கொண்ட வீட்டில் லட்சுமி தேவி வசிக்கிறாள் என்பது ஐதீகம். இது மகிழ்ச்சி, செழிப்பு, ஆரோக்கியம், செல்வம் மற்றும் தீய விளைவுகளிலிருந்து முழு குடும்பத்தையும் பாதுகாக்கிறது. கோமதி சக்கரத்தை கொண்டு வந்த பிறகு, அதை வணங்கி, வாழ்நாள் முழுவதும் ஆசீர்வதிக்க செல்வம் நிறைந்த இடத்தில் வைப்பது மிகவும் முக்கியம். தட்சிணாவர்த்தி சங்கு கடலில் இருந்து தோன்றிய 14 ரத்தினங்களில் ஒன்று தட்சிணாவர்த்தி சங்கு. . அதை வாங்கி வந்து, ஒரு நல்ல நாளில் வழிபாடு நடத்தி, ஒரு சிவப்பு துணியில் போர்த்தி ஒரு பெட்டகத்தில் வைக்க வேண்டும். நீங்கள் காசு வைக்கும் இடத்தில் சங்கை வைப்பதும் உங்களுக்கு நல்ல பலனை தரும். இதன்மூலம் வீட்டின் உரிமையாளருக்கு அதிர்ஷ்டம் வந்து சேருகிறது. தட்சிணாவர்த்தி சங்குள்ள வீட்டில் கிரஹ தோஷம் நீங்குகிறது. இதன்மூலம் அந்த வீட்டுக்குள் லட்சுமி தேவி வசிக்க தொடங்குகிறாள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. மூன்று நாணயங்கள் சில சீன பொருட்களை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுபோன்ற பொருட்களில் ஒன்றுதான் சிவப்பு நாடாவில் கட்டப்பட்ட மூன்று நாணயங்கள். இது சீனாவின் சாஸ்திரப்படி நிதி செழிப்பின் சின்னமாக வரையறுக்கப்படுகிறது. வீட்டின் பிரதான வாசலில் அவற்றைத் தொங்கவிடுவது எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் என்று சீனர்கள் நம்புகின்றன. அதை நாமும் நம்முடைய வீட்டு வாசலில் வாங்கி தொங்கவிடலாம் சிரிக்கும் புத்தர் சிரிக்கும் புத்தரின் சிலை இருக்கும் இடமெல்லாம் நேர்மறை கொண்ட ஆற்றல் எப்போதும் இருக்கும் என்று கூறப்படுகிறது. கைகளை உயர்த்திய சிரிக்கும் புத்தரின் சிலை முன்னேற்றத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. மறுபுறம், சாக்கு மூட்டை ஏந்தி வரும் சிரிக்கும் புத்தர் பணப் பிரச்சனைகளில் இருந்து, உங்களை காப்பாற்றுவார். இந்த சிலையை வீட்டின் வடகிழக்கு திசையில் அல்லது கடைகளில் வைக்கலாம். துளசி அன்னை லட்சுமி துளசியில் வாசம் செய்வதாக நம்முடைய சாஸ்திரங்கள் கூறுகின்றன. துளசி செடியை வீட்டில் நட்டு வைப்பதன் மூலம் பணம் செழிக்கும். அதையடுத்து காலையிலும் மாலையிலும் தவறாமல் துளசியை வழிபடுவது நன்மையை தரும். ஒவ்வொரு செயலிலும் வெற்றியைத் தரும். புத்தாண்டில் மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக வீட்டில் துளசி செடியை நடவும்.
14-12-2022 - இன்றைய ராசி பலன் - இன்று வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்..!!

14-12-2022 - இன்றைய ராசி பலன் - இன்று வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்..!!

இன்று குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 இன்று அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5 இன்று வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். வேலை தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சனைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியை தரும். பெண்களுக்கு எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 இன்று வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண் பெற அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9 இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகலாம். குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3 இன்று சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் - நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புக்தி தெளிவு உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 இன்று சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கும். திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தலை தூக்கச் செய்யும். எனவே சாதுரியமாக பேசி எதையும் சமாளிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 இன்று திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். மாணவர்களுக்கு கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும். பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7 இன்று எதிர் பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனை தீரும். கடின உழைப்பால் வளர்ச்சி அடைவீர்கள். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை தரும். எதைப் பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 இன்று ராஜாங்க ரீதியிலான காரியங்கள் கை கொடுக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பணவரத்து திருப்திதரும். வீண்பழி ஏற்படலாம். தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 இன்று தொழில் வியாபாரம் மெத்தனமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை தரும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

செவ்வாய், 13 டிசம்பர், 2022

சபரிமலை தரிசனத்திற்கு 1.07 லட்சம் பக்தர்கள் முன்பதிவு

சபரிமலை தரிசனத்திற்கு 1.07 லட்சம் பக்தர்கள் முன்பதிவு

சபரிமலையில் தரிசனம் செய்வதற்காக இன்று 1,07,260 பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த சீசனின் அதிகபட்ச முன்பதிவு எண்ணிக்கை இதுவாகும். இந்த சீசனில் முன்பதிவு ஒரு லட்சத்தை தாண்டியது இது இரண்டாவது முறையாகும். பக்தர்கள் வருகை அதிகரிப்பை கருத்தில் கொண்டு, தனித்தனியாக போலீஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில், பஹிதம்பாடி வழியாக ஒரு நிமிடத்திற்கு 90 யாத்ரீகர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இம்முறை அது 35 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நெரிசல் அதிகரிக்கிறது. சன்னிதானம் வருபவர்களின் எண்ணிக்கையை 85 ஆயிரமாக குறைக்க வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே சமயம் சபரிமலை பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது தரிசன நேரம் அதிகாலை 3 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் உள்ளது. இது மதியம் 1.30 மணி மற்றும் இரவு 11.30 மணி வரை அதிகரிக்கும். இரவு 11.20 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு நடை மூடப்படுகிறது.

வியாழன், 1 டிசம்பர், 2022

திருவண்ணாமலை தீபத்திருவிழா: பக்தர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு..!

திருவண்ணாமலை தீபத்திருவிழா: பக்தர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு..!

தீபத் திருநாள் அன்று காலை 6 மணி முதல், முதலில் வரும் 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதிக்கப்படுவர் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் கூறியதாவது; "செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு, 2500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும். இந்த அனுமதி சீட்டு, தீபத்திருவிழா அன்று காலை 6 மணிக்கு தொடங்கி முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வரிசை கிரமமாக வழங்கப்படும். மலை ஏற அனுமதி கோரும் பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம். பக்தர்கள், 06.12.2022 அன்று பிற்பகல் 2 மணி வரை மட்டுமே மலை ஏறுவதற்கு அனுமதிக்கப் படுவார்கள். பேகோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது. மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும் போது திரும்ப கொண்டு வர வேண்டும்.

செவ்வாய், 29 நவம்பர், 2022

சபரி மலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது – பம்பை ஆற்றில் குளிக்க கட்டுப்பாடு

சபரி மலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது – பம்பை ஆற்றில் குளிக்க கட்டுப்பாடு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. மண்டல பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 89 ஆயிரம் பக்தர்கள் சபரிமலை செல்ல முன்பதிவு செய்திருந்தனர். இதில் 80 ஆயிரம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை சன்னிதானம் சென்ற பக்தர்கள் காலை 10 மணிக்குத்தான் சாமி தரிசனம் செய்தனர். இதன்மூலம் 18-ம் படி ஏற பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதுபோல நெய்யபிஷேகம் செய்வதற்கும், பிரசாதம் வாங்கவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சபரிமலை செல்லும் பக்தர்கள் பம்பையில் புனித நீராடுவது வழக்கம். பம்பை ஆற்றில் குளித்தால் பக்தர்களின் பாவம் நீங்குவதாக ஐதீகம். இதனால் சபரிமலை செல்லும் பக்தர்கள் அனைவரும் பம்பையில் நீராடிவிட்டுதான் செல்வார்கள். இவ்வாறு பம்பையில் குளிக்கும் பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் விட்டு செல்வது வழக்கம். இதனால் ஆறு மாசடைந்து வந்தது. எனவே பக்தர்கள் ஆற்றில் ஆடைகளை வீசி எறிவது தற்போது தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் சபரிமலையில் குளிக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பம்பையில் பக்தர்கள் குளிக்கும் பகுதியில் 6 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாயில்கள் வழியாக மட்டும் தான் பக்தர்கள் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டும். ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தால் இந்த பாதைகள் அடைக்கப்படும். மேலும் இந்த பகுதியில்தான் பக்தர்கள் குளிக்க வேண்டும் எனவும் இங்கு தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் தற்போது ஐயப்பன் கோவில் வருவாயும் அதிகரித்து வருகிறது. 10 நாட்களில் கோவில் வருவாய் சுமார் 52.55 கோடியாக இருந்தது. இதுபோல கேரள போக்குவரத்து கழகமும் கடந்த 10 நாட்களில் மட்டும் 4 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

வியாழன், 5 நவம்பர், 2020

இன்றைய ராசி பலன்கள்: 05-11-2020 யாருக்கு வெற்றி..??

இன்றைய ராசி பலன்கள்: 05-11-2020 யாருக்கு வெற்றி..??

நாள்: சார்வரி வருடம், ஐப்பசி 20 ஆம் நாள், வியாழன் கிழமை (05/10/2020) விரதம்: கரிநாள் திதி: சதுர்த்தி அதிகாலை 03:04 வரை பின்பு பஞ்சமி நட்சத்திரம்: மிருகசீரிஷம் அதிகாலை 03:31 வரை பின்பு திருவாதிரை சந்திராஷ்டமம்: கேட்டை யோகம்: மரணயோகம் சூலம்: தெற்கு பரிகாரம்: தைலம் நல்ல நேரம்: காலை: 10:30 – 11:30 மாலை: 11:30 – 12:00 தவிர்க்க வேண்டிய நேரம்: இராகு: 01:30 – 03:00 PM குளிகை: 09:00 – 10:30 AM எமகண்டம்: 06:00 – 07:30 AM வழிபாடு: முருகரை வழிபட மேன்மை உண்டாகும் ராசி பலன்கள்: மேஷம்: மேஷ ராசிக்காரர்களே! உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டாகும். புது விதமான அனுபவங்கள் கிடைக்கும். எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். பொன், பொருள் வாங்குவதில் ஆர்வம் காண்பீர்கள். பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டாகும். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களே! புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். மனதில் பதற்றமான சூழல் தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் கவனம் வேண்டும். மிதுனம்: மிதுன ராசிக்காரர்களே! வியாபாரத்தில் நிதானம் வேண்டும். உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆலய வழிபாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். கடகம்: கடக ராசிக்காரர்களே! குடும்பத்தில் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களை கற்பீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல் நிலவும். போட்டியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பயணங்களின் போது கவனம் வேண்டும். சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களே! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். துணிச்சலான சில முடிவுகளை எடுப்பீர்கள். உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். திருமண வரம் கைகூடும். எதிர்பாராத சுப செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கன்னி: கன்னி ராசிக்காரர்களே! பணியிடங்களில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். துலாம்: துலாம் ராசிக்காரர்களே! குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். செய்யும் செயல்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களே! உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவி இடையே உறவு மேம்படும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எடுக்கும் முடிவுகளில் நிதானம் வேண்டும். சேமிப்புகள் அதிகரிக்கும். தனுசு: தனுசு ராசிக்காரர்களே! உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டாகும். இட மாற்றங்கள் ஏற்படலாம். புதிய வாடிக்கையாளர்களை அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் மேம்படும். தடைகளைத் தாண்டி திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். மகரம்: மகர ராசிக்காரர்களே! தடைப்பட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். கும்பம்: கும்ப ராசிக்காரர்களே! உங்களின் கருத்துக்களுக்கு ஆதரவு கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே உறவு மேம்படும். பேச்சு சாதுரியத்தின் மூலம் வெற்றி பெறுவீர்கள். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் கவனம் வேண்டும். மீனம்: மீன ராசிக்காரர்களே! உடன்பிறப்புகளால் ஆதாயம் கிடைக்கும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். வேலை தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். Tags: கடகம்