2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த 5 பொருட்களை உங்கள் வீட்டின் வையுங்கள். அப்போது தான் புத்தாண்டில் பணம் ஒரு பிரச்னையாக இருக்காது.
விரைவில் 2022-ம் ஆண்டு விடைபெறவுள்ளது. வரும் 2023-ம் ஆண்டு மங்களகரமானதாக இருக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்தாண்டு இறுதிக்குள் குறிப்பிட்ட பொருட்களை, உங்களுடைய வீட்டுக்கு கொண்டு வரும்போது பல்வேறு நல்ல நகர்வுகள் ஏற்படும். டிசம்பர் மாதம் வந்துவிட்டது. ஜோதிட சாஸ்திரத்தில் இந்தாண்டு பல மக்களுக்கு நன்மையை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. எனினும் சிலருக்கு நேரம் சரியில்லாத காரணத்தால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்திருக்கக்கூடும். அதனால் அவர்களுடைய பொருளாதார நிலைமை, மனநிலைமை மற்றும் உடல்நலம் ஆகியவை பாதிக்கப்பட்டு இருக்கலாம். வரும் புத்தாண்டில் இதேநிலை தொடராமல் இருக்கும் பொருட்டு, சில சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. இதற்காக 2020-ம் ஆண்டுக்குள் வீட்டுக்கு சில சிறப்பு பொருட்களை கொண்டு வருவதன் மூலம், வரும் ஆண்டு உங்களுக்கு வளமையை வழங்கும்.
கோமதி சக்ரா
வாஸ்து சாஸ்திரத்தின் படி கோமதி சக்கரம், ஸ்ரீ ஹரி விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தின் சிறிய வடிவமாக கருதப்படுகிறது. இச்சக்கரம் கொண்ட வீட்டில் லட்சுமி தேவி வசிக்கிறாள் என்பது ஐதீகம். இது மகிழ்ச்சி, செழிப்பு, ஆரோக்கியம், செல்வம் மற்றும் தீய விளைவுகளிலிருந்து முழு குடும்பத்தையும் பாதுகாக்கிறது. கோமதி சக்கரத்தை கொண்டு வந்த பிறகு, அதை வணங்கி, வாழ்நாள் முழுவதும் ஆசீர்வதிக்க செல்வம் நிறைந்த இடத்தில் வைப்பது மிகவும் முக்கியம்.
தட்சிணாவர்த்தி சங்கு
கடலில் இருந்து தோன்றிய 14 ரத்தினங்களில் ஒன்று தட்சிணாவர்த்தி சங்கு. . அதை வாங்கி வந்து, ஒரு நல்ல நாளில் வழிபாடு நடத்தி, ஒரு சிவப்பு துணியில் போர்த்தி ஒரு பெட்டகத்தில் வைக்க வேண்டும். நீங்கள் காசு வைக்கும் இடத்தில் சங்கை வைப்பதும் உங்களுக்கு நல்ல பலனை தரும். இதன்மூலம் வீட்டின் உரிமையாளருக்கு அதிர்ஷ்டம் வந்து சேருகிறது. தட்சிணாவர்த்தி சங்குள்ள வீட்டில் கிரஹ தோஷம் நீங்குகிறது. இதன்மூலம் அந்த வீட்டுக்குள் லட்சுமி தேவி வசிக்க தொடங்குகிறாள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மூன்று நாணயங்கள்
சில சீன பொருட்களை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுபோன்ற பொருட்களில் ஒன்றுதான் சிவப்பு நாடாவில் கட்டப்பட்ட மூன்று நாணயங்கள். இது சீனாவின் சாஸ்திரப்படி நிதி செழிப்பின் சின்னமாக வரையறுக்கப்படுகிறது. வீட்டின் பிரதான வாசலில் அவற்றைத் தொங்கவிடுவது எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் என்று சீனர்கள் நம்புகின்றன. அதை நாமும் நம்முடைய வீட்டு வாசலில் வாங்கி தொங்கவிடலாம்
சிரிக்கும் புத்தர்
சிரிக்கும் புத்தரின் சிலை இருக்கும் இடமெல்லாம் நேர்மறை கொண்ட ஆற்றல் எப்போதும் இருக்கும் என்று கூறப்படுகிறது. கைகளை உயர்த்திய சிரிக்கும் புத்தரின் சிலை முன்னேற்றத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. மறுபுறம், சாக்கு மூட்டை ஏந்தி வரும் சிரிக்கும் புத்தர் பணப் பிரச்சனைகளில் இருந்து, உங்களை காப்பாற்றுவார். இந்த சிலையை வீட்டின் வடகிழக்கு திசையில் அல்லது கடைகளில் வைக்கலாம்.
துளசி
அன்னை லட்சுமி துளசியில் வாசம் செய்வதாக நம்முடைய சாஸ்திரங்கள் கூறுகின்றன. துளசி செடியை வீட்டில் நட்டு வைப்பதன் மூலம் பணம் செழிக்கும். அதையடுத்து காலையிலும் மாலையிலும் தவறாமல் துளசியை வழிபடுவது நன்மையை தரும். ஒவ்வொரு செயலிலும் வெற்றியைத் தரும். புத்தாண்டில் மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக வீட்டில் துளசி செடியை நடவும்.
புதன், 14 டிசம்பர், 2022
Author: shabanewstamil
We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.
0 coment rios: