India லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
India லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 ஜூலை, 2024

பயங்கரவாதம் ஒடுக்க என்ன செய்யலாம்? உளவு பாதுகாப்பு அமைப்புகளுடன் அமித்ஷா ஆலோசனை

பயங்கரவாதம் ஒடுக்க என்ன செய்யலாம்? உளவு பாதுகாப்பு அமைப்புகளுடன் அமித்ஷா ஆலோசனை


பயங்கரவாதம் ஒடுக்க என்ன செய்யலாம்? உளவு பாதுகாப்பு அமைப்புகளுடன் அமித்ஷா ஆலோசனை 

பயங்கரவாதம் முறியடிப்பு நடவடிக்கைக்கான எம்.ஏ.சி., எனப்படும் பன்முகமை மையம், மத்திய உள்துறை அமைச்சகத்தின், உளவுத் துறையின் கீழ் செயல்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் புலனாய்வு தகவல்களை ஒருங்கிணைக்கும் இந்த அமைப்பு,28 இந்திய உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல்களைப் பகிர்ந்து வருகிறது. எம்.ஏ.சி., செயல்பாடுகள் குறித்து, பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளின் தலைவர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டில்லியில் உயர்மட்ட அளவிலான ஆலோசனை நடத்தினார்.


கூட்டத்தில் பேசிய அமித்ஷா, 
பிரதமர் மோடியின் தலைமையின்கீழ் எம்.ஏ .சி.,யின் திறனை மேம்படுத்த, தொழில்நுட்பம் மற்றும் செயல்பாடுகள் சார்ந்து பெரிய அளவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

தேசப்பாதுகாப்பில் மத்திய அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறையை பின்பற்றுமாறு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பாதுகாப்பு அமைப்புகள், புலனாய்வு மற்றும் அமலாக்க அமைப்புகளின் தலைவர்களிடம்  அறிவுறுத்தினார். பயங்கரவாத கட்டமைப்புகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்வோரை வேரறுப்பதில் பாதுகாப்பு அமைப்புகளிடையே நெருங்கிய ஒத்துழைப்பு தேவை என்று வலியுறுத்தினார். இதன் மூலம் தான் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலையை தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் குறித்து பேசிய உள்துறை அமைச்சர், அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும், பன்முகமை மையத்துடனான ஈடுபாட்டை அதிகரித்து, இணைந்து செயல்படும் அமைப்பாக மாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அனைத்து சட்ட அமலாக்க அமைப்புகள், போதைப் பொருள்  ஒழிப்பு முகமைகள், இணையப் பாதுகாப்பு, புலனாய்வு அமைப்புகள், உறுதியான மற்றும் சரியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் தேசப் பாதுகாப்பைப் பொறுத்தவரை, மத்திய அர சின் ஒருங்கிணைந்த அணு குமுறையையே, அனைத்து பாதுகாப்பு முகமைகளும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

புதன், 19 ஏப்ரல், 2023

இந்தியாவில் முதல் முறையாக Water Budget.... கேரளா அரசின் விநோத முயற்சி ... ஆனா ரொம்ப முக்கியம்..!

இந்தியாவில் முதல் முறையாக Water Budget.... கேரளா அரசின் விநோத முயற்சி ... ஆனா ரொம்ப முக்கியம்..!


இந்தியாவில் முதல் முறையாக 'Water Budget'.. கேரளா அரசின் விநோத முயற்சி, ஆனா ரொம்ப முக்கியம்..!

இந்தியாவில் மாநில அரசுகளும், மத்திய அரசும் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்து வருகிறது. மத்திய அரசு ரயில்வே பட்ஜெட்-ஐ பொது பட்ஜெட் உடன் இணைந்துள்ள வேளையில் தமிழ்நாடு அரசு விவசாய துறைக்கு தனி பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்கிறது. இந்த நிலையில் கேரளா அரசு புதிதாக Water Budget என்ற ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

God's Own Country என அழைக்கப்படும் கேரளாவில் ஏராளமான ஆறுகள், ஓடைகள், உப்பங்கழிகள் மற்றும் சிறப்பான மழைப்பொழிவு ஆகியவை அம்மாநிலத்தின் பசுமைக்கு முக்கிய பங்களிக்கின்றன. ஆனாலும் கேரளாவில் இன்னும் பல பகுதிகளில் கோடைகாலம் வந்துவிட்டால் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.

தண்ணீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் முன்பே கேரள அரசு தண்ணீர் பட்ஜெட் உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக கேரள அரசு Water Budget என்ற ஒரு விஷயத்தை கையில் எடுத்துள்ளது, இதன் மூலம் இம்மாநிலத்தில் இருக்கும் 15 தொகுதி பஞ்சாயத்துகளில் உள்ள 94 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய முதல் கட்ட நீர் பட்ஜெட்டின் விவரங்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டு உள்ளார்.

கேரள மாநிலத்தில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதால், நீர் வளத்தை முறையாகப் பயன்படுத்தவும், வீணாவதைத் தடுக்கவும் தண்ணீர் பட்ஜெட் உதவிகரமாக இருக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரள அரசின் இப்புதிய முயற்தியை நீர் வல்லுநர்கள் வரவேற்று உள்ளனர். இது மட்டும் அல்லாமல் விலைமதிப்பற்ற நீர் வளத்தின் தேவை மற்றும் விநியோகத்தை அறிந்து, அதற்கேற்ப பங்கீடு செய்ய இந்த Water Budget உதவும் என்று கூறுகின்றனர். இது தண்ணீர் பற்றாக்குறையின் பிரச்சினை அல்ல, சரியாக நிர்வாகம் செய்யாதது தான் பிரச்சனை என்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற லிம்னாலஜிஸ்ட் மற்றும் SCMS Water Institute இயக்குநரான டாக்டர் சன்னி ஜார்ஜ் கூறியுள்ளார்.

இந்த Water Budget-ன் முதல் பணியாக கேரள அரசு 15 தொகுதி பஞ்சாயத்துகளில் உள்ள 94 கிராம பஞ்சாயத்துகளில், ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உள்ள மழைப்பொழிவு, சதுப்பு நிலங்கள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகள் உட்பட அனைத்து நீர் ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு, மனிதர்கள் மற்றும் விலங்குகள், விவசாயம் மற்றும் தொழில்களின் தேவையையும் கணக்கிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் தேவையை உணர்ந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுவது தான் இந்த வாட்டர் பட்ஜெட்-ன் முக்கிய பணியாகும். இதன் மூலம் தண்ணீர் முறையாக பயன்படுத்துவதை தாண்டி யாரும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படால் இருக்க முடியும். இது பிற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள முடியும்.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

தமிழக முதல் - அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்..!

தமிழக முதல் - அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்..!

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!"என்று தெரிவித்துள்ளார்
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தந்தையை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கி மண்டையை உடைத்த மகன்..!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தந்தையை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கி மண்டையை உடைத்த மகன்..!


தந்தையை - மகன் அடிக்கும் காட்சியை வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூர கள்ளக்காதலி...

ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்தவர் டெல்லி பாபு. இவர் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் பாரத் (வயது 21). சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 39 வயது பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. பாரத் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி கள்ளக்காதலி வீட்டிற்கு சென்று வந்தார். 

இதனை அறிந்த அவரது தந்தை மகனை கடுமையாக கண்டித்தார், இருப்பினும் பாரத் கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்து வந்தார். 

இதனால் ஆத்திரம் அடைந்த டெல்லி பாபு இதுகுறித்து சித்தூர் 2-வது டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் பாரத்தை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து கள்ளக்காதலியுடனான தொடர்பை கைவிடுமாறு கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைத்தனர். 

தன் மீது தந்தை போலீசில் புகார் செய்ததால் அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டிற்கு சென்ற பாரத் தனது கள்ளக்காதலிக்கு வீடியோ கால் செய்தார். 

தன்னை போலீசில் புகார் செய்த தந்தையை அடித்து உதைக்க உள்ளதாகவும் வீடியோ காலில் இருக்குமாறு தெரிவித்துவிட்டு தந்தையை இழுத்து வந்து அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தார். இந்த காட்சிகளை அவரது கள்ளக்காதலி பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தார். 

மேலும் ஆத்திரம் தீராத பாரத் அருகில் இருந்த கட்டையை எடுத்து வந்து தந்தையின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டி வலியால் அலறி துடித்தார். 

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து டெல்லி பாபுவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து டெல்லி பாபு சித்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பாரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதன், 25 ஜனவரி, 2023

சபரிமலை: தேவசம் போர்டுக்கு ரூ.7 கோடி நஷ்டம்

சபரிமலை: தேவசம் போர்டுக்கு ரூ.7 கோடி நஷ்டம்

சபரிமலையில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த ஏலக்காயை கொண்டு தயாரிக்கப்படும் அரவணை பாயாச பிரசாதம் விற்பனைக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு ரூ.7 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, FSSAI அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சபரிமலையில் அரவணை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஏலக்காயில் 14 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஏலக்காயைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அரவணை தொகுப்புகளின் விற்பனையை நிறுத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால், 6,65,159 அரவணை டின்களை தேவசம் போர்டு அப்புறப்படுத்தியது.

செவ்வாய், 24 ஜனவரி, 2023

விமானத்தில் பெண் ஊழியரிடம் தவறான நடந்து கொண்ட பயணிகளிடம் விசாரணை !

விமானத்தில் பெண் ஊழியரிடம் தவறான நடந்து கொண்ட பயணிகளிடம் விசாரணை !

சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்ற நபர், சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மிஸ்ராவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி விமானத்தில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. டெல்லியில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் ஐதராபாத்திற்கு புறப்பட்டது. இதில் ஏறிய ஒரு ஆண் பயணி, விமான பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.இதனால், அங்குள்ள பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. உடனே, பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே, பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட பயணியையும் அவருடன் இருந்தவரையும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி இதுகுறித்து விசாரித்து நடத்தி வருகின்றனர்.
தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஆப்ரேஷன் கமலா மூலம் ஆட்சி அமைப்போம்- பாஜக

தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஆப்ரேஷன் கமலா மூலம் ஆட்சி அமைப்போம்- பாஜக

எங்களுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஆப்ரேஷன் கமலா மூலமாக ஆட்சி அமைப்போம் என பாஜக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி மாவட்டம் கோகாக் தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ரமேஷ் ஜார்கிஹோலி, காங்கிரஸ் கட்சியில் இருந்த போது 2019-ல் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஆட்சியை கவிழ்த்த சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர். பா.ஜ.க ஆட்சியமைத்த போது எடியூரப்பா தலைமையிலான அரசில், நீர்வளத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக வீடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தனது சொந்த தொகுதியில் பாஜக பொதுகூட்டத்தில் பேசும் போது பாஜக கட்சிக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் ஆப்ரேஷன் கமலா மூலமாக நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று அவர் கூறியுள்ளது கர்நாடக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுக்கூட்டத்தில் அவர் பேசும் போது, தான் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு செல்ல இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை என்றும் எக்காரணம் கொண்டும் வரும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்காது ஒரு வேலை தொங்கு சட்டசபை அமைந்தால் ஆப்ரேஷன் கமலா மூலமாக நாங்கள் ஆட்சி அமைப்போம் என்றும் கூறியுள்ளார். ரமேஷ் ஜார்கிஹோலி பேச்சிற்கு பாஜக தலைவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

கூகுளில் இதையெல்லாம் தேடினால் கிரிமினல் குற்றம்: அதிரடி அறிவிப்பு

கூகுளில் இதையெல்லாம் தேடினால் கிரிமினல் குற்றம்: அதிரடி அறிவிப்பு

பொதுவாக கூகுளில் அனைத்து விஷயங்களையும் தேடலாம் என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் அதே நேரத்தில் குண்டு தயாரிப்பது எப்படி என்று தேடினால் சைபர் கிரைம் கண்காணிப்பில் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி குண்டு வெடிப்பு தகவலை திரட்டினாலே அது சிறை தண்டனைக்கு உள்ளாக்கும் குற்றமாகும்   அதே போல் 18 வயதுக்கு குறைவான குழந்தைகளின் ஆபாச படத்தை தேடினால் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை நிச்சயம் உண்டு. மேலும் கிரிமினல் குற்றங்கள் சார்ந்த கேள்விகளை இணையத்தில் கேட்பது கருக்கலைப்பு தொடர்பான தகவலை தேடுவது. காப்புரிமை உள்ள சினிமாக்களை தேடுவது ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

உத்தரபிரதேசத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வேயில் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருபது பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

சனி, 17 டிசம்பர், 2022

உச்ச நீதிமன்றத்திடமே நீதி இல்லையென்றால் மக்கள் எங்கு செல்வார்கள்?மகளிர் ஆணையத் தலைவர் வேதனை

உச்ச நீதிமன்றத்திடமே நீதி இல்லையென்றால் மக்கள் எங்கு செல்வார்கள்?மகளிர் ஆணையத் தலைவர் வேதனை

உச்ச நீதிமன்றத்திடமே நீதி கிடைக்காவிட்டால் மக்கள் எங்கு செல்வார்கள் என்று டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் வேதனை தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்திடமே நீதி கிடைக்காவிட்டால் மக்கள் எங்கு செல்வார்கள் என்று டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் வேதனை தெரிவித்துள்ளார். குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பின் நடந்த கலவரத்தில் ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானு ஒரு கும்பலால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார், அவரின் இரண்டரை வயதுக் குழந்தை உள்ளிட்ட 7 பேரையும் அவர் கண்முன்னே கொலை செய்து அந்த கும்பல் தப்பி ஓடியது. இந்த வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த அவர்களை நன்நடத்தை அடிப்படையிலும், கருணை அடிப்படையிலும் குஜராத் அரசு விடுதலை செய்தது. குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலையாகினர். இந்த 11பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது.  பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் ஷோபா குப்தாவுக்கு உச்ச நீதிமன்றத்தின் துணைப்ப திவாளர் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் “ நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனு மீது கடந்த 13ம் தேதி விவாதிக்கப்பட்டது. அந்தமனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பில்கிஸ் பானு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில் “ பில்கிஸ் பானுவின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. பில்கிஸ் பானு 21வயதாக இருக்கும்போது, கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டார், அவரின் 3வயது குழந்தை உள்பட குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் கொல்லப்பட்டனர்.

வியாழன், 15 டிசம்பர், 2022

அக்னி 5 ரக ஏவுகணை சோதனை வெற்றி... இலக்கை துல்லியமாக தாக்கியதாக தகவல்!!

அக்னி 5 ரக ஏவுகணை சோதனை வெற்றி... இலக்கை துல்லியமாக தாக்கியதாக தகவல்!!

அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை தாக்கும் அக்னி 5 ரக ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளது.  அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை தாக்கும் அக்னி 5 ரக ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளது. அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட அக்னி-5 ஏவுகணையை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) வடிவமைத்துள்ளது. அணு ஆயுதங்களை சுமந்து 5,500 கி.மீ. தொலைவிற்கு சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதையும் படிங்க: நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அரசியல் சாசன திருத்த மசோதா… மக்களவையில் நிறைவேற்றம்!! இந்த ஏவுகணை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவு ஏவு தளத்தில் நேற்று பரிசோதிக்கப்பட்டது. அப்போது திட்டமிட்டபடி குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏவுகனை சோதனை வெற்றியடைந்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை ராணுவ பயன்பாட்டிற்கு பெருமளவு உதவியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதையும் படிங்க: ஜே.இ.இ மெயின் தேர்வு 2023க்கான தேதிகள் வெளியீடு… அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது என்.டி.ஏ!! இந்த சோதனை காரணமாக அப்பகுதியில் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இதுபோல அக்னி ரக ஏவுகனைகள் சோதிக்கப்பட்டுள்ளது. 2013, 2015, 2016, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் இந்த ரக ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசொதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
இந்தியா வந்தது கடைசி ரபேல் விமானம்....

இந்தியா வந்தது கடைசி ரபேல் விமானம்....

பிரான்ஸின் கடைசி ரபேல் போர் விமானம் இந்தியா வந்து சேர்ந்தது பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.56 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து இருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஐந்து விமானங்கள் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தன. விமானங்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவை முறைப்படி இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன. அதன்பின்னர் ஒவ்வொரு தொகுப்பாக விமானங்கள் அனுப்பப்பட்டன. இதுவரை 35 விமானங்கள் வந்து சேர்ந்த நிலையில், இறுதிக்கட்டமாக 36வது ரபேல் விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது. அனைத்து ரபேல் விமானங்களும் வந்து சேர்ந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், இந்திய விமானப்படை தனது டுவிட்டர் பக்கத்தில் "பேக் இஸ் கம்ப்ளீட்" என குறிப்பிட்டுள்ளது. இந்த ரபேல் போர் விமானம் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆயுதம் தயாரிப்பு நிறுவனமான மீட்டோர் நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களான வானிலிருந்தே இலக்கைக் குறிவைத்துத் தாக்குதல், ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்குதல் போன்ற அதிநவீன அம்சங்கள் இந்த விமானத்தில்

செவ்வாய், 13 டிசம்பர், 2022

பல்கலை., வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா… கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!!

பல்கலை., வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா… கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!!

கேரள பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரள அரசுக்கும், அம்மாநில ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதை அடுத்து பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன்பேரில் கேரள பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியை ஆளுநரிடம் இருந்து பறிக்கும் வகையில் நவம்பர் மாதத் தொடக்கத்தில் அவசரச் சட்டம் ஒன்று கேரள அரசால் கொண்டு வரப்பட்டது.