ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரிமான கிருஷ்ணணுண்ணி இன்று சித்தோடு ஐ.ஆர்.டி.டி அரசினர் பொறியல் கல்லூரியில் வாக்கு எண்ணும மையத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணணுண்ணி கூறுகையில் ...
தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது, வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பான அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
அடுத்தது முக்கியமாக வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 2-ந் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்கு மையத்திற்கு 5 அடுத்து பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
துணை ராணுவத்தினர், போலீசார் என 450 பேர் சுழற்சி முறையில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஒரு ஷிட்டில் 150 பேர் வரை பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். வாக்கு எண்ணிக்கை மையம், அதன் சுற்றுவட்டார பகுதியில் என 48 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மின்னணு வாக்கு பதிவு வைக்கப்பட்டுள்ள, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறை, அதன் சுற்று வட்டாரப்பகுதி என அனைத்து பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, இதனை கண்காணிக்கவே ஒரு குழு தனியாக நியமிக்கப்பட்டுள்ளன,
வாக்குப்பதிவின்போது 2 பூத்துகளின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் அவற்றுக்கு பதில் மாற்று எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. இடைத்தேர்தலில் அதிக வாக்குப்பதிவானது நல்ல விஷயம். 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி எங்கள் தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன .மேலும் ராணுவமும் கொடி அணிவகுப்பு நடத்தின. இதன் காரணமாக வாக்குப்பதிவு அதிகரித்து இருக்கலாம். வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும். தொடங்கியதும் தபால் ஓட்டுக்கள் பிரித்து எண்ணப்படும். பின்னர் அரை மணி நேரம் கழித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் பிரித்து எனப்படும்.
இதற்காக இரண்டு அறைகளில் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளன 15 சுற்றுகள் வரை வாக்குகள் எனப்பட்டு அதன் பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும். எந்த நேரத்திற்குள் வாக்கு எண்ணிக்கை முடியும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது.
முடிந்த அளவு குறிப்பிட்ட நேரத்தில் வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.