புதன், 25 ஜனவரி, 2023

பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த பேட்டரி காருக்கு தேசிய அளவில் முதல் பரிசு

பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த பேட்டரி காருக்கு தேசிய அளவில் முதல் பரிசு கிடைத்துள்ளது. சத்தியமங்கலம் எஸ்ஏஇ இந்தியா, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் இணைந்து பெங்களூரில் எலக்ட்ரிக் வாகன கண்டுபிடிப்புக்கான 'ரீவ்' எனும் போட்டியை நடத்தியது. இதில் இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டுபிடிப்பை சமர்ப்பித்தனர். இந்த போட்டியில் பண்ணாரி அம்மன் கல்லூரியைச் சேர்ந்த மனுபேக்சரிங் மற்றும் பேப்ரிக்கேசன் பிரிவைச் சேர்ந்த 25 மாணவர்கள் கலந்து கொண்டு டைனமிக் பேஸ் பிரிவில் வடிவமைக்கப்பட்ட எலக்ட்ரிக் வாகனத்தை சமர்ப்பித்தனர். ஜெனரல்மோட்டார்ஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனத்தை சேர்ந்த நடுவர்கள் பல்வேறு பிரிவுகளில் ஆய்வு செய்தனர். பின் பெங்களூரில் நடைபெற்ற இறுதி போட்டியில் பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த 90 கி.மீ மைலேஜ் தரக்கூடிய ஜியூஸ் என்ற வாகனம் சிறந்த பெஸ்ட் பிரசன்டேசன் அவார்டு மற்றும் ரூபாய் 1.5 லட்சம் பரிசுதொகையுடன் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தது. வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் சேர்மேன் பாலசுப்பிரமனியம், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: