Entertainment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Entertainment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 டிசம்பர், 2023

குறி வச்சா இரை விழனும்.. #வைரலாகும் தலைவர் 170 டீசர்..!

குறி வச்சா இரை விழனும்.. #வைரலாகும் தலைவர் 170 டீசர்..!


#தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

#தலைவர் 170 படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படம் திரைக்கு வந்ததும் இமயமலைக்கு சென்று கோவில்களில் தரிசித்துவிட்டு திரும்பி இருக்கிறார், அடுத்த புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார், இது ரஜினிக்கு 170வது படமாகும், சூர்யாவை வைத்து 'ஜெய்பீம்' படத்தை இயக்கி பிரபலமான ஞானவேல் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்தது, தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது.

இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், தலைவர் 170 படத்தின் தலைப்பை படக்குழு அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், தலைவர் 170 பெயரில் உருவாகி வந்த படத்துக்கு 'வேட்டையன்' என்று படக்குழு பெயரிட்டுள்ளது. மேலும் பட தலைப்புடன் படக்குழு டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

திங்கள், 27 நவம்பர், 2023

பிக்பாஸ் வீட்ல காதல் ஜோடியின் காம களியாட்ட லீலைகள் !! ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்..!!

பிக்பாஸ் வீட்ல காதல் ஜோடியின் காம களியாட்ட லீலைகள் !! ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்..!!


இந்தியாவில் இந்தியில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி முதன்முதலில் நடத்தப்பட்டது. இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியில் இதுவரை 16 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. தற்போது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17-வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தியை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இதில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல் தெலுங்கில் நாகார்ஜுனாவும், கன்னடத்தில் ஜூனியர் என்.டி.ஆரும், மலையாளத்தில் மோகன்லாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆனால் இவர்களுக்கெல்லாம் பிக்பாஸ் ஹோஸ்டிங்கில் சீனியராக இருப்பவர் சல்மான்கான் தான்.

அவர் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17-வது சீசனில் தான் ஒரு அருவருக்கத்தக்க சம்பவம் நடந்துள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் கூட தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினர்.

ஆனால் இந்தி பிக்பாஸில் அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதில் சம்ரத் ஜுரேல், இஷா மல்வியா என்கிற காதல் ஜோடி போட்டியாளராக கலந்துகொண்டுள்ளனர். 

இதில் சம்ரத் ஜுரேல் அடிக்கடி இஷா மல்வியாவிடம் அத்துமீறி வந்துள்ளது. படுக்கையறையில் ஒரே பெட்டில் இருவரும் போர்வையை பொத்திக் கொண்டு செய்த சில்மிஷ வேலைகள் மற்றும் பாத்ரூமில் இஷாவை பலவந்தமாக சம்ரத் முத்தம் கொடுத்தது போன்ற வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் எப்படி ? அனுமதிக்கிறார்கள் என கேள்வி எழுப்பி வருவதோடு, அந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர்.

திங்கள், 13 பிப்ரவரி, 2023

படுக்கை அறையில் தன் செல்லத்தை கட்டிப்பிடித்து காதலர் தின வாழ்த்து சொன்ன நடிகை ராஷ்மிகா - வைரல் வீடியோ

படுக்கை அறையில் தன் செல்லத்தை கட்டிப்பிடித்து காதலர் தின வாழ்த்து சொன்ன நடிகை ராஷ்மிகா - வைரல் வீடியோ


படுக்கை அறையில் தன் செல்லத்தை கட்டிப்பிடித்து - காதலர் தின வாழ்த்து சொன்ன நடிகை ராஷ்மிகா - வைரலாகும் வீடியோ...

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, காதலர் தின வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழில் ராஷ்மிகா நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் அமோக வெற்றி பெற்றது. அப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா, இதனையடுத்து ராஷ்மிகா நடித்த இந்தி திரைப்படமான மிஷன் மஜ்னுவும் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தற்போது காதலர் தின வாழ்த்து சொல்லி பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா. அதில் தனது செல்ல நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடி அதனை கட்டிப்பிடித்தபடி காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ராஷ்மிகா. அந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.


ஞாயிறு, 15 ஜனவரி, 2023

சென்னை திரும்பிய ரஜினி.. ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து !

சென்னை திரும்பிய ரஜினி.. ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து !

சிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. ‘பீஸ்ட்’ படத்திற்கு நெல்சன் இந்த படத்தை இயக்கி வருகிறார். முத்துவேல் பாண்டியன் என்ற ஒய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் மோகன்லால், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவ ராஜ்மோகன், யோகிபாபு. வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்காக அனிரூத் மிரட்டலாக இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு செட் அமைக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள ரமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி மற்றும் மோகன்லால் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பிற்காக கடந்த 7-ஆம் தேதி ரஜினிகாந்த் ஐதராபாத் சென்றார். இந்நிலையில் இந்த படப்பிடிப்பு நிறைவுபெற்று இன்று ரஜினி சென்னை திரும்பியுள்ளார். சென்னை ஏர்போர்ட்டில் வரும்போது ரசிகர்களை சந்தித்த ரஜினி, அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து சொன்னார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 

திங்கள், 19 டிசம்பர், 2022

வாரிசு' படத்தின் மூன்றாவது சிங்கிள் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட தகவல்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

வாரிசு' படத்தின் மூன்றாவது சிங்கிள் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட தகவல்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

'வாரிசு' படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல், ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது
இயக்குனர் வம்சிபைடி பள்ளி இயக்கத்தில், 'தளபதி' விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே 'வாரிசு' படத்தில் இருந்து வெளியான, முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே பாடல் மற்றும் இரண்டாவது சிங்கிள் பாடலான, தீ தளபதி பாடல் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து தற்போது வெளியுள்ள வெளியாகி உள்ள தகவலில், நாளை மாலை 5 மணிக்கு 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது சிங்கிள் பாடலான 'Soul of varisu' என்கிற பாடல் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த பாடலை பிரபல பின்னணி பாடகி சின்னக்குயில் சித்ரா பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகள் எழுதியுள்ளார். டிசம்பர் 24ஆம் தேதி, இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இதுகுறித்து எவ்வித அதிகார பூர்வ தகவல் வெளியாகவில்லை. அதே போல் டீசர் மற்றும் ட்ரெய்லர் குறித்த அறிவிப்புகளுக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், ஷாம், யோகி பாபு, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, சம்யுக்தா, சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் பழனிச்சாமி ஒளிப்பதிவில், பிரவீன் கே எல் இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 14 டிசம்பர், 2022

காந்தாரா சின்ன பட்ஜெட் படமில்லை… இயக்குனர் ரிஷப் ஷெட்டி கருத்து!

காந்தாரா சின்ன பட்ஜெட் படமில்லை… இயக்குனர் ரிஷப் ஷெட்டி கருத்து!

கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ள காந்தாரா திரைப்படம், 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில்தான் உருவாக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு அதிக லாபம் சம்பாதித்த படமாக காந்தாரா அமைந்துள்ளது எனப் பலரும் கூறிவருகின்றனர். ஆனால் காந்தாரா படத்தின் இயக்குனரும், கதாநாயகனுமான ரிஷப் ஷெட்டி “காந்தாரா சின்ன பட்ஜெட் படமில்லை. இதற்கு முன் நான் எடுத்த படம், காந்தாரா பட்ஜெட்டில் 10 சதவீதம் கூட இல்லை. அதனால் காந்தாரா எனக்கு பெரிய பட்ஜெட் படம்தான்” எனக் கூறியுள்ளார்.

செவ்வாய், 13 டிசம்பர், 2022

என்ன நடந்தாலும் தலைவர் தலைவர் தான்: தனுஷ்

என்ன நடந்தாலும் தலைவர் தலைவர் தான்: தனுஷ்

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் தனுஷ். தமிழ் சினிமாவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி. முதலில் வில்லனாக தன் திரைப்பயணத்தை ஆரம்பித்து படிப்படியாக ஹீரோவாக முன்னேறினார் ரஜினி. அதையடுத்து அவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றிபெற தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். பின்பு ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இவரை சூப்பர்ஸ்டாராக கொண்டாட துவங்கினர். இந்நிலையில் தற்போது ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து ரஜினி லைக்கா தயாரிப்பில் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் ஒரு படத்தில் ரஜினி நடிக்கயிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் ரஜினி இன்று தனது 73 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். அவருக்கு திரைத்துறையை சார்ந்தவர்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதைத்டர்ந்து தற்போது நடிகரும் ரஜினியின் முன்னாள் மருமகனுமான தனுஷ் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கின்றார். கடந்த ஜனவரி மாதம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்த நிலையில் தனுஷிற்கும், ரஜினிக்கும் இதன் காரணமாக மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல் வந்தது. ஆனால் அதையெல்லாம் மறந்து தனுஷ் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி தான் எப்போதும் ரஜினியின் ரசிகர் என நிரூபித்துள்ளார். தற்போது தனுஷின் டுவீட் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடிய ஒரே ஒரு பாடலால் சண்டையிட்டுக் கொண்ட இரு இசை ஜாம்பவான்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடிய ஒரே ஒரு பாடலால் சண்டையிட்டுக் கொண்ட இரு இசை ஜாம்பவான்கள்!

திரைத்துறையில் நடிப்பில் மட்டும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வந்த பலர், பின்பு மெல்ல, மெல்ல இசையிலும் தங்களுடைய கவனத்தை திருப்பி இருக்கிறார்கள். ஆனால் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட 80களில் முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள் அப்போது இசையில் தங்களுடைய கவனத்தை செலுத்தாமல் இருந்து வந்தனர்.இதில் தற்போது திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துவரும் நடிகர் விஜய், அவர் நடிப்பதற்கு திரைத்துறையில் நுழைந்த அந்த காலகட்டத்திலேயே தன்னுடைய சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். அதிலும் அவர் பாடிய அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிப்பில் எப்போதும் பிஸியாக இருக்கும் நடிகர் விஜய் தற்போதும் கூட பாடல் பாடுவதை விட்டுவிடவில்லை. அந்த வகையில், கமல்ஹாசன், சிம்பு, விஜய் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் தற்போது தங்களுடைய சொந்த குரலில், திரைப்படங்களில் பாடலை பாடி வருகிறார்கள். ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரையில் திரைப்படத்தில் பாடல் பாடியதில்லை. ஆனால் அவர் இதுவரையில் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் தமிழ் திரைப்படத்தில் பாடியுள்ளார். இன்று வரையில் மக்களிடையே அந்த பாடல் ஒரு நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஸ்டைலாக பேச தெரியும், ஆனால் பாட தெரியாது. அவரை எப்படியாவது பாட வைத்து விட வேண்டும் என்று பலரும் முயற்சித்துள்ளனர். ஆனால் அது நடைபெறவே இல்லை. ஒரு முறை இளையராஜாவிற்காக மட்டுமே சூப்பர் ஸ்டார் ஒரு பாடலை பாடியுள்ளார். இளையராஜா இசையமைத்த மன்னன் திரைப்படத்தில் ரஜினியை பாட வைத்து விட வேண்டும் என்று ஒரு பாடலை பாட வைத்தார்கள். ரஜினி, விஜயசாந்தியுடன் அடிக்குது குளிரு என்ற பாடலை தமிழ் சினிமாவில் முதன்முதலாக தன்னுடைய சொந்த குரலில் பாடி அசத்தினார். இதற்கு சற்றேற குறைய 10 முதல் 15 டேக் வரையில் வாங்கி விட்டாராம். ஒரு வழியாக இதுதான் பர்ஃபெக்ட் என்று இளையராஜா அவர் பாடியதில் சிறந்தது எதுவோ, அதை தேர்ந்தெடுத்து விட்டார். ஆனால் கங்கை அமரன் வந்து ரஜினி பாடியது எதுவுமே சரியில்லை மீண்டும் பாட வையுங்கள் என்று இளையராஜாவிடம் சண்டை பிடித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இளையராஜா தன்னுடைய தம்பியிடம் நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டோம், இருந்ததில் இதுதான் சிறந்தது என்று தெரிவித்துள்ளார். யார் சொல்லியும் கேட்காத கங்கைஅமரன் ரஜினியை மீண்டும் பாட வைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அதுவும் சரியாக அமையவில்லை. இறுதியாக ஏற்கனவே தேர்ந்தெடுத்ததை தான் படத்தில் இணைத்துள்ளார்கள். தலையில் அடித்துக் கொண்டு கங்கை அமரனை திட்டி தீர்த்து விட்டாராம் இளையராஜா. இவ்வளவு பொறுமையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 10 முதல் 15 முறை பொறுமையாக பாடி தன்னுடைய உயர்ந்த பண்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று பலரும் அவரை பாராட்டி உள்ளனர்.

சனி, 10 டிசம்பர், 2022

பீஸ்ட் திரைப்பட வசூலை மிஞ்ச வாரிசு கையில் எடுத்த புதிய ஆயுதம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பீஸ்ட் திரைப்பட வசூலை மிஞ்ச வாரிசு கையில் எடுத்த புதிய ஆயுதம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மிழ் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்து லட்சோப லட்ச ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்திருக்கும் இருபெரும் நட்சத்திரங்கள் விஜயும், அஜித்தும்.திரைத்துறையில் இரு துருவங்களாக இருந்து வருபவர்கள் விஜயும், அஜித்தும் அவர்களைப் போலவே அவர்களுடைய ரசிகர்களும் இரு துருவங்களாகவே செயல்பட்டு வருகின்றன.அந்த வகையில் இருவரின் திரைப்படமும் வெளியாகும் போதெல்லாம் இருவரின் ரசிகர்களிடையே ஒரு பனிப்போர் வெடிக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.ஆனால் இப்படி திரைத்துறையில் இருபெரும் துருவங்களாக திகழ்ந்துவரும் இந்த இருவரின் திரைப்படமும் ஒரே சமயத்தில் வெளியானால் தமிழ் ரசிகர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? நடிகர் விஜயின் நடிப்பில் ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாக இருக்கின்ற வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாட்கள் செல்ல, செல்ல ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது. அதோடு இந்த படத்துடன் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் ஒன்றாக வெளியாக இருப்பதால் படத்தின் வசூல் வேட்டையை எப்படி கையாள்வது என்ற கண்ணோட்டத்தில் பட குழுவினர் மூழ்கியுள்ளனர். இந்த ஆண்டில் அஜித்தின் வலிமை, விஜயின் பீஸ்ட் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையிலும், 100 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. இந்த நிலையில், பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கின்ற துணிவு திரைப்படம் விஜய்யின் வாரிசு திரைப்படத்தை விடவும் அதிகமாக வியாபாரம் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான காரணம் என்னவென்றால் துணிவு திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் திரையரங்கிற்கு விநியோகம் செய்தது தான் என்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 70% திரையரங்குகளில் துணிவு திரைப்படம் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் வாரிசு திரைப்படத்திற்கு திரையரங்கு கிடைப்பது சற்றே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்சமயம் வாரிசு திரைப்படத்தின் வசூலை அதிகரிப்பதற்காக நடிகர் விஜய் ஒரு புதுவித ஆலோசனையை பட குழுவினரிடம் தெரிவித்திருக்கிறார். பீஸ்ட் திரைப்படத்தின் வசூல் 120 கோடி வரையில் தமிழகத்தில் மட்டும் வசூல் செய்யப்பட்ட சூழ்நிலையில், வாரிசு திரைப்படத்தின் வசூலை அதிகரிப்பதற்காக டிக்கெட் விலையை 500 ரூபாய் வரையில் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே டிக்கெட் விலை 120 முதல் 250 ரூபாய் வரையில் திரையரங்கில் வசூலிக்கப்பட்டு வருகின்றது. தற்சமயம் 500 ரூபாய் என்றால் நிச்சயமாக இதன் காரணமாக ரசிகர்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாவார்கள். காலை 1 மணி 4 மணி என்று 2 காட்சிகள் வாரிசு திரைப்படத்தில் ஒளிபரப்பு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், டிக்கெட்டின் விலையை 500 ரூபாய்க்கு ஏற்றி விலையை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அதோடு துணிவு திரைப்படத்தின் வசூலை விடவும் வாரிசு திரைப்படத்தின் வசூல் அதிகரிக்க வேண்டும் என்பதை இதன் நோக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை 500 ரூபாய் கொடுத்து பார்த்தால் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றால் சரிதான். ஆனால் அது தோல்வி அடைந்து விட்டால் அவ்வளவுதான். இருந்தாலும் கூட திரைப்படத்தின் வசூலை அதிகரிக்க ரசிகர்களிடம் டிக்கெட் விலையை ஏற்றி அவர்களுடைய தலையில் கட்டுவது கொஞ்சம் கூட சரியானது அல்ல என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

அஜித்தின் ஏகே 61 படத்திற்கு பெயர் ரெடி? ரசிகர்கள் ஆர்வம்!

அஜித்தின் ஏகே 61 படத்திற்கு பெயர் ரெடி? ரசிகர்கள் ஆர்வம்!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ஏகே 61. இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.நடிகர் அஜித் இந்தியாவில் பல இடங்களுக்கு சுற்றுபயணம் சென்றிருந்தார்.இந்நிலையில் அவர் அவருடைய பைக் ரைட்யை முடித்துகொண்டு இன்று சென்னை திரும்புவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்கப்படவுள்ளது.மேலும் அஜித் ஏகே 61 படத்திற்கு பெயர்கள் பரவி வருகின்றது.அந்த தகவலின் படி இந்த படத்திற்கு துணிவே துணை மற்றும் துணிவு என பெயர் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. Tags: AjithAK61 MovieBike RideDirector H.VinothFansNameShootingThunivuThuniway Sub

செவ்வாய், 12 அக்டோபர், 2021

சமந்தாவுடன் கள்ளத்தொடர்பா!! சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பேட்டி

சமந்தாவுடன் கள்ளத்தொடர்பா!! சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பேட்டி

காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அண்மையில் சமூக வலைத்தளத்தில் அறிவித்தனர். இது தென்னிந்திய திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளரானா பிரீதம் ஜுகல்கர் என்று டோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவியது. இதையடுத்து நடிகை சமந்தா, பிரீதம் ஜுகல்கருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நாகசைதன்யா ரசிகர்கள் பிரீதம் ஜுகல்கரை அவதூறாக திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர். பிரீதம் ஜுகல்கர் இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில், சமந்தாவுக்கும், எனக்கும் தவறான தொடர்பு உள்ளது என்றும், இதனாலேயே சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கும் விவாகரத்து ஏற்பட்டு உள்ளது என்று தவறான தகவலை நாகசைதன்யா ரசிகர்கள் பரப்பி உள்ளனர். சமந்தாவை நான் சகோதரியாகவே பார்க்கிறேன், அவரை சகோதரி என்றே அழைக்கிறேன். எங்களுக்குள் எவ்வித தவறான தொடர்பும் இல்லை என்பது நாகசைதன்யாவுக்கே தெரியும். ஆனாலும் அவர் மெளனமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதனால் நாகசைதன்யா ரசிகர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.மேலும், எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன்” என்றார்.
தன் தலைவரை போலவே தானும் உடல் தானம் செய்த நடிகர் ரோபோ சங்கர்

தன் தலைவரை போலவே தானும் உடல் தானம் செய்த நடிகர் ரோபோ சங்கர்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் ரோபோ ஷங்கர். இவர் சின்னத்திரையில் நடித்து வெள்ளித்திரைக்கு வந்து சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு பெரிய முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்தார். இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் காமெடியனாக நடித்து ஓரளவிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் ஒரு காமெடியனாக மட்டுமில்லாமல் ஒரு சமூக சேவகராகவும் பணியாற்றி வருகிறார். கொரோனா காலத்தில் கொரோனா நோயாளிகளின் முகாமிற்கு சென்று அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்து வந்தார். இவர் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். கமல்ஹாசனின் ஒவ்வொரு பிறந்தநாளிலும் அவரை நேரில் சந்தித்து அவரின் வாழ்த்தைப் பெறுவது ரோபோ சங்கரின் வழக்கம். இந்நிலையில் கமல்ஹாசனின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சித்தொண்டர்கள் இலவச கண் சிகிச்சை முகாமை அகர்வால் கண் மருத்துவமனையில் நடத்தினர். இதில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் கமல்ஹாசனைப் பின்பற்றி தானும் முழு உடல் தானம் செய்தார். வரும் நவம்பர் 7-ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளில் அவரை நேரில் சந்தித்து முழு உடல் தானத்திற்கான சான்றிதழை காண்பிக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.