படுக்கை அறையில் தன் செல்லத்தை கட்டிப்பிடித்து - காதலர் தின வாழ்த்து சொன்ன நடிகை ராஷ்மிகா - வைரலாகும் வீடியோ...
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, காதலர் தின வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழில் ராஷ்மிகா நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் அமோக வெற்றி பெற்றது. அப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா, இதனையடுத்து ராஷ்மிகா நடித்த இந்தி திரைப்படமான மிஷன் மஜ்னுவும் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தற்போது காதலர் தின வாழ்த்து சொல்லி பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா. அதில் தனது செல்ல நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடி அதனை கட்டிப்பிடித்தபடி காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ராஷ்மிகா. அந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
0 coment rios: