பள்ளி சீருடை தயாரிப்பு பணியை எதிர்நோக்கும் விசைத்தறியாளர்கள்..!
பொங்கல் பண்டிகைக்கான அரசின் இலவச வேட்டி-சேலை தயாரிப்பு பணி, நிறைவு பெறும் நிலையில், பள்ளி சீருடை தயாரிப்பு பணியை வழங்க, விசைத்தறியாளர் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில்,தை பொங்கல் பண்டிகையின்போது ஏழை, எளியோருக்கு வழங்க அரசு சார்பில், 6 வண்ணங்களில் இலவச சேலை, வேட்டி தயாரிக்கப்படுகிறது.
மொத்தம் 1.68 கோடி வேட்டி, 1.68 கோடி சேலை தயாரிக்கும் பணி, தமிழகம் முழுவதும் 228 விசைத்தறி சங்கங்களில் 60,000 விசைத்தறிகளில் நடந்து வருகிறது. தற்போது, 90 சதவீத பணி முடிந்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின், அமைப்பு செயலாளர் கந்தவேல் ஸபா நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டியில்...
தற்போதைய நிலையில், 30 லட்சம் வேட்டி, 68 லட்சம் சேலை மட்டுமே தயாரிக்க வேண்டியுள்ளது, இதுவும் 15 நாட்களுக்குள் முடிந்து விடும், அதன் பிறகு விசைத்தறிகளுக்கு வேலை இல்லாத நிலை ஏற்படும்.
எனவே, தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவியர் சீருடை தயாரிப்பு பணியை, முன்னதாகவே திட்டமிட்டு வழங்க வேண்டும், 96 லட்சம் மீட்டர் 'கேஸ்மெட்' துணிகள் மட்டுமே விசைத்தறிக்கு வழங்கப்படும், மீதி 3 கோடி மீட்டர் துணி தானியங்கி தறிகளுக்கு வழங்கப்படுகிறது, +1 +2 மாணவ, மாணவியருக்கான நீல நிற துணிகள் வெளியே ஆர்டர் போட்டு அரசு வாங்குகிறது.
இது போன்றவற்றை தமிழக விசைத்தறிகளுக்கே வழங்கினால், ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலை கிடைக்கும் என கூறினார்.
0 coment rios: