Erode East bypoll லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Erode East bypoll லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையோடு இணைந்து இரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையோடு இணைந்து இரத்ததான முகாம்


நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையோடு இணைந்து இரத்ததான முகாம் ஈரோடு திண்டல் புதுக்காலனிப் பகுதியில் நடைபெற்றது.

அமைப்பின் மாவட்டத் தலைவர் இஸ்மாயில், மாவட்டச் செயலாளர் சாகுல், துணைச்செயலாளர் இஜாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கிளையின் மருத்துவசேவைப் பிரிவு செயலாளர் அஷ்ரப் தலைமை தாங்கினார்.


பெண்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கெடுத்து இரத்த தானம் செய்தனர், பல்வேறு வகையைச் சேர்ந்த 70 யுனிட் இரத்தங்கள் இம்முகாம் மூலமாக அரசு மருத்துவக்கல்லூரிக்கு கிடைத்தது.

நிறைவாக கிளைச் செயலாளர் முஹம்மது யாஸின் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

சனி, 8 ஜூலை, 2023

தி.மு.க பொறியாளர் அணியின் ஈரோடு மாநகர துணை அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்ட தாரிக், அமைச்சர்  சு.முத்துசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தி.மு.க பொறியாளர் அணியின் ஈரோடு மாநகர துணை அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்ட தாரிக், அமைச்சர் சு.முத்துசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர், ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர் சு.முத்துசாமி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் தி.மு.கழக பொறியாளர் அணியின் ஈரோடு மாநகர துணை அமைப்பாளர்  Er. மு. தாரிக்.

தி.மு.கழக பொறியாளர் அணியின் ஈரோடு மாநகர துணை அமைப்பாளராக Er. மு. தாரிக் M.E.,Civil அவர்களை பரித்துரை செய்த, மாண்புமிகு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஞாயிறு, 2 ஜூலை, 2023

பொது சிவில் சட்டம் குறித்து ஆன்லைனில் கருத்து தெரிவிப்பது எப்படி?

பொது சிவில் சட்டம் குறித்து ஆன்லைனில் கருத்து தெரிவிப்பது எப்படி?

பொது சிவில் சட்டம் குறித்து ஆன்லைனில் கருத்து தெரிவிப்பது எப்படி?

பொது சிவில் சட்டம் குறித்து ஆன்லைனில் கருத்து தெரிவிப்பது எப்படி முழு விவரம் uniform civil code.

பொது சிவில் சட்டம் பற்றி தங்களது கருத்துகள், பார்வையை பொதுமக்கள், மத அமைப்புகள் 30 நாட்களுக்குள் membersecretary-Ici@gov.in என்ற மின்னஞ்சலில் சமர்ப்பிக்கலாம் என இந்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது

இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்ள சட்ட செய்தி குறிப்பில்  

Law Commission of India solicits views & ideas of the public and recognized religious organizations about Uniform Civil Code The 22nd Law Commission of India is inter alia examining the Uniform Civil Code, a reference sent by the Ministry of Law & Justice. Initially the 21st Law Commission of India had examined the subject on Uniform Civil Code and solicited the views of all the stakeholders through its appeal along with a questionnaire dated 07.10.2016 and further public appeals/notices dated 19.03.2018, 27.03.2018 and 10.4.2018. Pursuant to the same, overwhelming responses have been received by the Commission.

The 21st Law Commission has issued the consultation paper on "Reforms of Family Law" on 31.08.2018. Since more than three years have been lapsed from the date of issuance of the said Consultation Paper, bearing in mind the relevance and importance of the subject and also the various Court orders on the subject, the 22nd Law Commission of India considered it expedient to deliberate afresh over the

subject.Accordingly, the 22nd Law Commission of India decided again to solicit views and ideas of the public at large and recognized religious organizations about the Uniform Civil Code.

Those who are interested and willing may present their views within a period of 30 days from the date of Notice through "click here" button or by Email at membersecretary-lci[at]gov[dot]in to the Law Commission of India என செய்தி வெளியிட்டுள்ளது.

21வது சட்டக் கமிஷன் UCC தொடர்பான விஷயத்தை மதிப்பாய்வு செய்து, ஜூலை 10, 2016 அன்று ஒரு கேள்வித்தாள் மற்றும் பொது அறிவிப்புகளுடன் அதன் மேல்முறையீடு மூலம் கருத்துக்களையும் கோரியது. 2018 ஆம் ஆண்டு மார்ச் 19, மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 10ல் வந்த பதில்களை கவனத்தில் கொண்டு, 22வது சட்ட ஆணையம் மீண்டும் UCC அங்கீகரிக்கப்பட்ட பற்றி பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளின் கருத்துகளையும் யோசனைகளையும் பெற முடிவு செய்துள்ளது.

அரசியலமைப்பின் 44 வது பிரிவு, மாநில கொள்கையின் வழிகாட்டுதல் கொள்கைகளில் ஒன்றாகும், இது ஒரு சீரான சிவில் குறியீட்டை பரிந்துரைக்கிறது. ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள், அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள், "இங்கே கிளிக் செய்க" என்ற பொத்தான் மூலமாகவோ அல்லது உறுப்பினர் செயலர் - எல்சிஐ[at]gov[dot]ல் உள்ள மின்னஞ்சல் மூலமாகவோ இந்திய சட்ட ஆணையத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டம் என்றால் என்ன?

இந்தியாவில், வெவ்வேறு சமூகங்களில் அவர்களின் மதம், நம்பிக்கை போன்றவற்றின் அடிப்படையில் திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை மற்றும் தத்தெடுப்பு விஷயங்களில் தனித்தனியான சட்டங்கள் உள்ளன. ஆனால் பொது சிவில் சட்டம் இயற்றப்பட்டால், நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் சாதி, மதம், பாலின பாகுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான சட்டம் பின்பற்றப்படும்.

இந்தியாவில் குற்றவியல் நடவடிக்கைக்கான சட்டத்தைப் பொறுத்தவரை, இந்தியா முழுக்க அனைவருக்கும் ஒன்றுதான். அதாவது கொலை, கொள்ளை போன்ற குற்றவியல் சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் ஒரே தண்டனை தான். ஆனால், திருமணம், விவாகரத்து, பரம்பரை, தத்தெடுப்பு போன்ற அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் அனைத்து மதச் சமூகங்களுக்கும் பொருந்தும் படி அவரவர் மதங்களுக்கு பல்வேறு சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.

அதாவது, தனிநபர்களுக்கான சிவில் சட்டம் 

மதங்களுக்கு மதம் மாறுபடும். இப்படி இந்தியாவில் உள்ள, பல்வேறு சிவில் சட்டங்களை நீக்கி, அனைத்து தரப்பினருக்கும் ஒரே சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என பாஜக உள்ளிட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், பல்வேறு மதங்களை உள்ளடக்கிய இந்தியா போன்ற நாட்டில் பொது சிவில் சட்டம் என்பது சரியாக இருக்காது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்திய அரசியலமைப்பின் வழிகாட்டி

நெறிமுறைகளின் கீழ் உள்ள 44வது பிரிவில் "இந்தியா முழுமைக்கும் குடிமக்கள் ஒரே விதமான பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கலாம்" எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டம் குறித்து ஜமா அத்துல் உலமா சபை அறிக்கை:-

கண்ணியமிகு ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட, வட்டார நிர்வாக பெருமக்கள் உள்ளிட்ட அனைத்து ஆலிம் பெருமக்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களிடமிருந்தும் பதிவு செய்யப்பட்ட மத அமைப்புகளிடமிருந்தும் சட்ட ஆணையம் கருத்து கேட்டிருப்பதும் அதை ஒரு மாதத்துக்குள் (14.07.2023) அனுப்ப வேண்டும் தாங்கள் அறிவீர்கள் என கூறியிருப்பதையும், இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு கீழ்காணும் ஐந்து விஷயங்கள் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இவற்றை முழுமையாகவோ இவற்றில் சிலவற்றையோ இதற்குரிய (ONLINE FORM ல் ONLINE FORM LINK இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.)

தகவலை பதிவேற்றம் செய்ய வேண்டிய இடத்தில் டைப் செய்தோ அல்லது PDF ஆகவோ பதிவேற்றம் செய்து அனுப்பவும்.

இது பொதுமக்கள் ஒவ்வொருவரும் அனுப்புவதற்கானது. இதற்கான விழிப்புணர்வை ஒவ்வொரு மஸ்ஜிதின் இமாம் அவர்கள் ஜும்ஆ மற்றும் ஈதுல் அழ்ஹா பெருநாள் ஆகியவற்றில் அறிவிப்பு செய்து மீண்டும் மீண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவை முறையாக நடைபெறுவதை மாவட்ட மற்றும் வட்டார நிர்வாகங்கள் தொடர் அக்கறை எடுத்து உறுதி செய்ய வேண்டும்.

நம்முடைய தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை பதிவு செய்யப்பட்ட அமைப்பு என்ற அடிப்படையில் பொதுச்சிவில் சட்டம் ஏன் தேவையில்லை என்பதை மிகத் தெளிவாக விரிவாக விளக்கி இந்திய சட்ட ஆணையத்திடம் இன்ஷா அல்லாஹ் தனது கருத்தை தெரிவிக்கும்.

NO NEED OF UNIFORM CIVIL CODE FOR SOME OF THE FOLLOWING MAIN REASONS

1. Article 25 Guarantees Right to Freedom of Religious Practice, so practicing personal laws cannot be interferred even by the State.

2. UCC is against the Spirit of the Secular Character of our Constitution.

3. Indian Legal System is based on pluralism and the

application of UCC will result in its complete destruction.

4. The Parliamentary System of India itself is in the model of Unity in Diversity. So, UCC cannot exist in parallel.

5. The Supreme Court of India has time and again upheld the Constitutional Validity of Personal Laws over UCC.

பொது சிவில் சட்டம் குறித்து ஆன்லைனில் கருத்து தெரிவிப்பது எப்படி?

உங்களது மொபைலில் உள்ள ஜிமெயில் ஓபன் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து இ மெயில் அனுப்ப என்பதை செய்து ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.

கிளிக் அடுத்து Subject ல் Regarding UCC என்று டைப் செய்து கொள்ளுங்கள்,

அடுத்து TO என்பதில் சட்ட ஆணையத்தின் ஈமெயில் கொள்ளுங்கள் முகவரியை டைப் செய்து இ மெயில் முகவரி : membersecretary- Ici@gov.in

To address membersecretary- Ici@gov.in

Compose Email பகுதியில் உங்கள் கருத்தை ஆங்கிலத்தில் பதிவிட்டு இறுதியாக உங்கள் பெயர் குறிப்பிட்டு SEND செய்து விடுங்கள் அவ்வளவுதான்.

ஆட்சேபனை கருத்துக்கள் பதிவு செய்ய கடைசி நாள் : 14.07.2023

வெள்ளி, 30 ஜூன், 2023

ஈரோடு வ.உ.சி.பூங்கா ஈத்கா மைதானத்தில் நடந்த பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ..!

ஈரோடு வ.உ.சி.பூங்கா ஈத்கா மைதானத்தில் நடந்த பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ..!


உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இப்ராகிம் அலை-யின் தியாகத்தை போற்றும் வகையில் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை தியாகத்திருநாளாக கொண்டாடுகிறார்கள். அதன்படி ஈரோட்டில் நேற்று பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் பள்ளிவாசல்கள், ஈத்கா மைதானங்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

ஈரோடு வ.உ.சி.பூங்காவில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை பிரமாண்டமாக நடந்தது. ஈரோடு மாவட்ட அரசு தலைமை காஜி முகமது கிபாயத்துல்லா தலைமை தாங்கி தொழுகையை வழிநடத்தினார்.

ஈரோடு மாவட்ட அரசு தலைமை காஜி முகமது கிபாயத்துல்லா பேசுகையில் ...

இறைவன் மனித குலத்துக்கு எத்தனையோ கடமைகளை தந்திருக்கிறார். கட்டளைகளை சொல்லி இருக்கிறார். அந்த கட்டளைகளில் எல்லாம் மிக மிக கனமானதும், கடினமானதும் இப்ராகிம் அலை-க்கு சொன்ன கட்டளையாகும். 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த வரலாற்றை இப்போது கேட்டாலும் சிலிர்ப்பு ஏற்படுகிறது.

இப்ராகிம் அலை இறைவன் மீது வைத்திருந்த பக்திக்கு அளவே இல்லை. ஏக இறைவனை அவர் வணங்கியதற்காகவும், மற்றவர்களை வணங்க சொன்னதற்காகவும் அப்போது இருந்த அக்கிரமக்காரர்கள் வழங்கிய தண்டனையை ஏற்று நெருப்புக்குழிக்குள் இறங்கினார். அவர் நெருப்புக்கு உடலை தாரை வார்க்க துணிந்தாலும் இறைவன் அவரை அதற்கு அனுமதிக்கவில்லை.

இறைவன் உத்தரவு

மனைவியையும், மகனையும் பிரிந்தார். சொந்த நாட்டை துறந்தார். அதாவது ஏக இறைவனாகிய அல்லா தனது ஆத்ம நண்பராக இப்ராகிமை தேர்வு செய்து இருந்தார். ஏக இறைவன் ஒருவருக்கே தனது உள்ளத்தில் இடம் கொடுத்துவேறு யாருக்கும் இடம் கொடுக்காதவர் இப்ராகிம்.

அப்படிப்பட்ட இப்ராகிம், தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று அல்லாவிடம் பிரார்த்தனை செய்தார். அதைப்பார்த்த பலரும், இப்ராகிம் உள்ளத்தில் குழந்தை பாசம் பெரியதாக இடம் பிடித்து விட்டதோ என்ற எண்ணம் மேலிட்டது. ஆனால் அவரது உள்ளம் எப்படிப்பட்டது என்று அல்லாவுக்கு தெரியும். அதை மக்களுக்கு நிரூபிக்க இப்ராகிம், அவரது மகனை அறுக்கும்படி இறைவன் உத்தரவிட்டார். இறைவனுக்கு அடிபணிவதே தன்னுடைய வாழ்வின் நோக்கம் என்பதை வெளிப்படுத்தினார் இப்ராகிம் அலை.

குர்பானி

மகனை பலியாக அறுக்க துணிந்தார். அவர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, மகனை அறுக்க முற்பட்டபோது இறைவன் அதை தடுத்தார். மகனுக்கு பதிலாக ஆடு ஒன்றினை வழங்கினார். அந்த ஆட்டினை அறுத்து இப்ராகிம் அலை குர்பானி கொடுத்தார்.

முஸ்லிம்கள் அனைவரும் இப்ராகிம் அலை-யின் குணத்தை பெற வேண்டும் என்றே நபிகள் நாயகம் குர்பானியை வலியுறுத்தினார். இப்ராகிம் அலையின் அர்ப்பணிப்பின் உச்சம்தான் இறைவனுக்காக மகனையே அறுக்கத்துணிந்தது. அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு ஒவ்வொருவருக்கும் வேண்டும். குர்பானி என்பது காசு பணத்தை செலவழித்து ஆடு அறுப்பது அல்ல. இப்ராகிம் அலை-யின் உணர்வை, நடைமுறை, சுன்னத் ஆகியவற்றை நினைவில் கொண்டு அத்தகைய அர்ப்பணிப்புகளை குறைந்த பட்ச அளவிலாவது நாம் பின்பற்றுவதாகும்.

தியாக உணர்வு

எந்த அளவு தியாக உணர்வு மேலோங்கி இருக்கிறதோ, இந்த அளவே ஒரு சமூகத்தின் நாகரிகம் முதிர்ச்சிஅடைகிறது. தியாக உணர்வு குறைகிறபோது மனித சமூகம் தனது உயரிய மதிப்புகளை இழக்கிறது. சமூக அமைப்பில் வாழும்போது நமது விருப்பங்களை விட அடுத்தவர்களின் விருப்பத்துக்கு நாம் முன்னுரிமை தரவேண்டியது இருக்கும். அந்தநேரங்களில் நாம் தியாக உணர்வை தவறிவிடக்கூடாது. அப்படிப்பட்ட தியாக உணர்வை கடைபிடிக்க இப்ராகிம் அலை-யின் வரலாறும் பக்ரீத் பண்டிகையின் வரலாறும் நம்மை தயார் படுத்தும்.

இந்த நன்னாளில் வேற்றுமைகள் மறந்து ஒற்றுமையோடு, ஓரணியின் கீழ் நின்று இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி செய்வோம். பகையும் வஞ்சகமும் ஒழியட்டும். நீங்கா பிணிகள் நீங்கட்டும். அனைவருக்கும் அன்பும் மகிழ்ச்சியும் பெருகட்டும் என்றார்.

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மைதானத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், அப்துல் ரகுமான் தலைமையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தியாகத் திருநாள் சிறப்பு தொழுகையில்  ஈடுபட்டனர்.

நமது நிருபர் : இப்ராஹிம் - ஈரோடு.

வெள்ளி, 19 மே, 2023

ரொம்ப காலமா குண்டும் குழியுமாக இருக்கிற ரோட்டை போடுங்க பாஸ்..!

ரொம்ப காலமா குண்டும் குழியுமாக இருக்கிற ரோட்டை போடுங்க பாஸ்..!

ரொம்ப காலமா குண்டும் குழியுமாக இருக்கிற ரோட்டை போடுங்க மேடம்..!

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்டு பகுதியான கிருஷ்ணா தியேட்டர் பின்புறம் மோசிக்கிரனார் வீதி.1ல் ரொம்ப காலமாக இப்பகுதி மண் ரோடுகளாகவும், குண்டும் குழியும் ஆகவும் காணப்படுகிறது, 

இது காரணம் இப்பகுதியில் எல் & டி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், புதைவட மின்சார கேபிள் பதிக்கும் பணிகளை மாநகாரட்சி நிர்வாகம் செஞ்சிட்டு இருந்தாங்க...

இப்போ, பாதாள சாக்கடை பணிகள் மட்டும் நடத்துகிட்டு இருக்கு,  ஆகையால் இப்பணிகள் சீக்கரமா முடிச்சி, இப்பகுதியில் தார் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டுமென மாநகர மேயர், துணை மேயர் மற்றும் உதவி ஆணையாளர் உள்ளிட்டவர்களிடம் 40வது வார்டு அன்புதம்பி தலைமையில் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.

சனி, 13 மே, 2023

மசாஜ் சென்டருக்குள் புகுந்து கத்திமுனையில், மசாஜ் செய்யும் கேரள பெண்களிடம் தங்க நகைகளை பறித்த கும்பல் கைது ...!

மசாஜ் சென்டருக்குள் புகுந்து கத்திமுனையில், மசாஜ் செய்யும் கேரள பெண்களிடம் தங்க நகைகளை பறித்த கும்பல் கைது ...!


ஈரோடு மாவட்டம், பவானி அருகே லட்சுமி நகரில் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகை கொள்ளையடித்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது ஒரு பெண் என்பது தெரிய வந்ததை தொடர்ந்து 2 ஸ்கூட்டர் பறிமுதல் 4 பேர் கைது - இருவருக்கு வலைவீச்சு..!

ஈரோடு அருகே உள்ள அக்ரஹாரம் பகுதியைச் சார்ந்தவர் கீர்த்தன் இவர் பவானி காலிங்கராயன் பாளையம் அடுத்துள்ள லட்சுமி நகர் பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். அங்கு 2 பெண்கள் 2 ஆண்கள் தங்கி பணிபுரிந்து வருவதாக தெரிய வருகின்றனர். இதனால் இந்த மசாஜ் சென்டருக்கு தினந்தோறும் ஆண்கள்-பெண்கள் என அதிக அளவில் வந்து மசாஜ் செய்து கொள்கின்றனர்.

இதனைத் தெரிந்து கொண்ட 6 போர் கொண்ட ஒரு கும்பல் இன்று இரவு 8 முப்பது மணி அளவில்  கத்தி மற்றும் கிரிக்கெட் பேட் ஆகியவற்றுடன் திடீரென உள்ளே புகுந்து அங்கு தங்கியிருந்த பெண்களை மிரட்டி பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

மசாஜ் சென்டரை சிசிடிவி மூலம் கண்காணித்துக் கொண்டிருந்த சென்டரின் உரிமையாளர் கீர்த்தன் அதிர்ச்சியுடன் சம்பவம் குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உள்ளே சென்று பார்த்த போது 6 பேர் கொண்ட கும்பல் இருந்ததை கண்டுள்ளனர். 

போலீசார் வந்தவுடன் கும்பலை சார்ந்த 6 பேரும் போலீசாரை கீழே தள்ளி விட்டு வெளியே தப்பி ஓடி உள்ளனர், இதனை  தொடர்ந்து போலீசார்  சுமார் 500 மீட்டர் துரத்தி பொதுமக்கள் உதவியுடன் 2 பேரை துரத்தி பிடித்தனர்,

பிடிபட்ட இருவரையும் சித்தோடு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியதில் ஈரோடு வீரப்பன் சத்திரத்தை சார்ந்த கார்த்தி ( 22), ஈரோடு பெரிய வலசு பகுதியைச் சேர்ந்த  கவுதம் ( 24 ) என்பது தெரியவந்தது, மேலும் இந்த வழக்கில் தப்பிய ஓடிய 4  பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்

இந்நிலையில், காவல் துறையினரின் தொடர் தேடுதல் வேட்டையில், ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த பெருமாள் மலை அருகே உள்ள மங்களகிரி காவிரி ஆற்றின் படித்துறையில் ஒரு இளைஞரும், அவருடன் ஒரு பெண்ணும் தலைமறைவாக இருப்பதாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்து கொண்டிருந்த பவானி கோண வாய்க்கால் இந்திரா நகர் பகுதி சார்ந்த தேவிகா ஸ்ரீ மற்றும் அவருடன் 17 வயது இளைஞர் ஒருவரும் இருந்துள்ளனர்,  

அவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இருவரையும் பிடித்து சித்தோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மசாஜ் சென்டரில் உள்ளே புகுந்து கொள்ளையடிப்பதற்கு மூளையாக செயல்பட்டவர் தேவிகா ஸ்ரீ என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அவர் மெகந்தி ஆர்டிஸ்ட் ஆக உள்ளதாகவும் , போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்தை நடத்த முடியவில்லை என்பதால் தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மசாஜ் சென்டரில் புகுந்து கொள்ளை அடிக்க திட்டமிட்டது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து கைது செய்த பட்ட இருவரிடமிருந்து இரண்டு ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் பலமுறை மசாஜ் சென்டருக்கு சென்று வந்ததாகவும் அங்கு அழகிகளை வைத்து மசாஜ் செய்து வருவதால் கடையின் உரிமையாளர் காவல்துறையில் புகார் அளிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவு குற்றவாளிகளாக இருந்து வரும் பிரவீன் மற்றும் தட்கர் பிரபு என  இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

மக்கள் நெருக்கமாக உள்ள பவானி லட்சுமி நகர் பகுதியில் இரவு  நேரத்தில் கும்பலாக உள்ளே புகுந்து மசாஜ் சென்டரில் வேலை செய்த பெண்ணிடம் இருந்து முக்கால் பவுன் மதிப்பிலான தங்கச் செயின் மற்றும் பணம் பறித்துக் கொண்டு சென்றது லட்சுமி நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

வீரப்பன் கூட்டாளி மீசைக்கார மாதையன் உயிரிழந்தார்..!

வீரப்பன் கூட்டாளி மீசைக்கார மாதையன் உயிரிழந்தார்..!

வீரப்பன் கூட்டாளி மீசைக்கார மாதையன் (வயது 73) உயிரிழந்தார்...

வீரப்பன் கூட்டாளிகளில் முக்கியமானவர், இவருடைய குடும்பத்துக்கும், வீரப்பன் குடும்பத்துக்கும் பங்காளி உறவு.  மீசை மாதையன் குடும்பமே வீரப்பனுக்கு விசுவாசமாக இருந்துள்ளது. இவரது தம்பி  சாமிநாதன், முனியன், சுண்டா வெள்ளையன், மகன் மாதேஷ் ஆகியோர்  வீரப்பன் சந்தனமரம் வியாபாரம் செய்த நேரத்தில் அவருடைய குழுவிலிருந்துள்ளனர்.

பிறகு, போலீஸ் தேடுதலுக்குப் பயந்து காட்டுக்குள்ளேயே தலைமறைவாக இருந்தனர். இதில், சாமிநாதன் மட்டும் 1991-இல் DCF ஸ்ரீநிவாஸ் அவர்களிடம் சரணடைந்து விடுகிறார்.

1993-இல், முனியன், சுண்டா வெள்ளையன் இருவரும் போலீசாரிடம் சரணடைந்த பின் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.

1998 மீசைக்கார மாதையனின் மகன் மாதேஷ் சத்தியமங்கலம் காட்டில் உள்ள புளியங்கோம்பை என்ற ஊரில் தமிழ்நாடு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் மோகன் நவாஷால் சுட்டுக்கொல்லப்படுகிறார்.

1993- இல் வீரப்பன் குழுவிலிருந்து செங்கப்பாடிக்கு தப்பி வந்த மீசை மாதையன் கர்நாடக போலீசில் சரணடைகிறார். அவர்மீது நான்கு தடா வழக்குகள் பதியப்படுகிறது. விசாரணை முடிவில் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

மேல் முறையீட்டு மனு விசாரணைக்குப் பின்னர், உச்ச நீதிமன்றம், மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகிய நால்வரின் ஆயுள் தண்டனையைத் தூக்கு தண்டனையாக மாற்றுகிறது.

இதை எதிர்த்து ஜனாதிபதிக்குக் கருணை மனு அனுப்பப்பட்டது. அப்போதைய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மனுவைத் தள்ளுபடி செய்கிறார். நால்வருக்கும் தூக்கில்போட நாள் குறிக்கப்பட்டது.

குடியரசுத்தலைவர் மனுவை முறையான காலத்தில் பரிசீலனை செய்து முடிக்கவில்லை என்ற சமூக ஆர்வலர்களின் கடுமையான போராட்டத்தோடு உச்ச நீதி மன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்படுகிறது.

விசாரணைக்குப் பின்னர், குடியரசுத்தலைவர், கருணை மனுவை ஒன்பது ஆண்டுக்காலம் ஆய்வுக்கு உட்படுத்தாமல் வைத்திருந்த காரணத்தினால், இந்த நால்வரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து  தலைமை நீதியரசர் சதாசிவம், ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் தலைமையிலான முதல் அமர்வு  ஒரு சிறப்பான தீர்ப்பை வழங்கினர்.

ஜனவரி 2014 இல் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டாலும், கர்நாடக மாநில அரசும் சிறைத்துறையும் இந்த நால்வரையும் விடுதலை செய்யாமலே சிறையில் வைத்திருந்தனர்.

2018, மே மாதம், சைமன்  என்பவரும், 2022, இல் பிலவேந்திரனும் சிறைக்குள்ளேயே உயிரிழந்தனர்.  2023-பிப்ரவரியில் சிறுநீரகம் பழுதான ஞானபிரகாசம், பரேலில் வெளியே வந்தார்.

 31 ஆண்டுகளாக மைசூர் சிறையிலிருந்த, மீசை மாதையன் கடந்த 11, ஆம் தேதி அதிகாலை உடல்நலம் பாதிக்கப்பட்டு, நினைவிழந்த நிலைக்குச் சென்றார்.

முதல் கட்டமாக மைசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு, பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மீசை மாதையன் இன்று மாலை மூன்று மணிக்கு நினைவு திரும்பாமலே உயிரிழந்தார்.

வீரப்பன் கூட்டாளிகள் என்ற பெயரில் சிறையிலிருந்த கடைசி நபர் இந்த மீசைக்கார மாதையன்.

வியாழன், 6 ஏப்ரல், 2023

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து  வீடு திரும்பினார்

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்


கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மரணமடைந்ததைத் தொடர்ந்து அத்தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் கடந்த மார்ச்-15 ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்  ஈவிகேஎஸ்  இளங்கோவன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இதய ரத்த நாளங்கள் சுருங்கியிருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

சனி, 1 ஏப்ரல், 2023

ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் பாரம்பரியமிக்க முளைப்பாரி திருவிழா கோலாகலம்..!

ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் பாரம்பரியமிக்க முளைப்பாரி திருவிழா கோலாகலம்..!


கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஈரோடு ஸ்ரீ அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கிருஷ்ணம்பாளையம், ஜீவா நகர் பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி முளைப்பாரி எடுத்து வந்து, பக்தி பரவசத்துடன் குலவை சத்தமிட்டு கும்மியடித்து நடனமாடி சிறப்பு  வழிபாடு...!


ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்களாக சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் இந்த ஆண்டுக்கான குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம் 21-ந்தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து கடந்த 25-ந்தேதி இரவு 3 கோவில்களிலும் கம்பங்கள் நடப்பட்டது. இந்த கம்பங்களுக்கு தினந்தோறும் பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வருகிறார்கள். இந்த நிலையில் ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் புனிதநீர் ஊற்றுவதற்காக கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டு சென்றனர். இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

வெகு விமர்சையாக நடைபெற்று வரும் கோவில் திருவிழாவையொட்டி கிருஷ்ணம்பாளையம், ஜீவா நகர் பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி முளைப்பாரி எடுத்து வந்து, பக்தி பரவசத்துடன் குலவை சத்தமிட்டு கும்மியடித்து நடனமாடி சிறப்பு  வழிபாடு மேற்கொண்டனர்,


இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம், காவேரி சாலை, ஆர்.கே.வி சாலை, மணிக்கூண்டு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக 500க்கும் மேற்ப்பட்ட பெண்கள் முளைப்பாரி தலையில் சுமந்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.


இறுதியாக கிருஷ்ணம்பாளையத்தில் துவங்கி இந்த முளைப்பாரி ஊர்வலமானது காரை வாய்க்கால்பகுதியில் அமைந்துள்ள சின்ன மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்த பின்னர் பெண்கள் கொண்டு வந்த  முளைப்பாரிகளை, காளிங்கராயன் வாய்க்காலில்  வாய்க்காலில் மிதக்க விட்டு நீரில் அனுப்பி வைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தமிழர்களின் பாரம்பரிய கலைகளான தீப்பந்தாட்டம், சிலம்பம் உள்ளிட்ட கலைகளுடன் நாட்டுப்புறக் கலைஞர்கள்  அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தியதால் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது..!


வெள்ளி, 10 மார்ச், 2023

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் கொடுக்கப்பட்ட டோக்கனுக்கு ஏதாவது கிடைக்குமா?

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் கொடுக்கப்பட்ட டோக்கனுக்கு ஏதாவது கிடைக்குமா?


தமிழகத்தில் கடந்த 40 நாட்களாக பரவலாக பேசப்பட்ட இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. 

இந்த இடைத்தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், அ.தி.மு.க., நாம் தமிழர், தே.மு.தி.க. மற்றும் சுயேட்சைகள் உள்பட 77 பேர் போட்டியிட்டனர்.இவ்வளவு வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் காங்கிரஸ் - அ.தி.மு.க. வேட்பாளருக்கு இடையே தான் கடுமையான போட்டி நிலவியது. தேர்தல் பிரசார களத்தில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் கடந்த 40 நாட்களாக ஈரோட்டிலேயே தங்கி தேர்தல் பணியாற்றி வந்தனர். இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு கவுரவ பிரச்சனையாக இருந்தது. 

இதே போல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் அவர்களும் கடுமையாக போராடினர். அரசியல் கட்சியினருக்கு அங்கீகாரம் பெறும் தேர்தலாக அமைந்தாலும் இந்த தொகுதி வாக்காளர்களுக்கு ஜாக்பாட்டாகவே மாறியது. தேர்தல் தேதி ஜனவரி மாதம் 18-ந்தேதி அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுத்தாக்கல் முடிந்து கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. 

அன்று முதல் ஈரோடு தொகுதியில் பணமழை கொட்ட தொடங்கியது.பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த அரசியல் கட்சியினர் வீடுகளை வாடகைக்கு எடுத்தும், பண்ணை வீடுகளில் தங்கியும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால் தொகுதி முழுவதும் எக்ஸ்யூவி கார்களின் அணிவகுப்பும் அதிக அளவில் இருந்தது, தொழிலாளர்கள் நிறைந்த இந்த கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் காரணமாக பொதுமக்கள் வேலைக்கு செல்வதை விட்டு விட்டு கடந்த 40 நாட்களாக பிரசாரத்தில் குதித்தனர். தினமும் அவர்கள் பிரசாரத்துக்கு சென்று ரூ.1000 வரை சம்பாதித்தனர். இதனால் மதுகடைகள், ஓட்டல்களில் 500 ரூபாய் நோட்டு, 2000 ரூபாய் நோட்டாகவே இருந்தது. 

இதனால் கடைக்காரர்கள் சில்லரை கொடுக்க முடியாமல் தவித்து வந்தனர், அதோடு இல்லாமல் பிரியாணி, மது, ஓட்டுக்கு பணம், சேலை, லுங்கி, குக்கர், ஸ்மார்ட் வாட்ச், வெள்ளி கொலுசு, வெள்ளி டம்ளர் என ஏராளமான பரிசுபொருட்கள் அரசியல் கட்சியினர் வாரி வழங்கினர். 

இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் மீது அனைவருக்குமே பொறாமை ஏற்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ், நகைச்சுவை வீடியோக்களும் அதிக அளவில் பகிரப்பட்டது. சாதாரணமாக 4 பேர் உள்ள ஒரு குடும்பத்தில் பணம், பரிசு பொருட்கள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பணம், பரிசு பொருட்கள் ஒரு குடும்பத்துக்கு கிடைத்தது. தேர்தல்நேரம் நெருங்க நெருங்க வாக்காளர்கள் இன்னும் ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்து இருந்தனர். அதே போல் வாக்குப்பதிவு அன்றும் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் டோக்கன் விநியோகிக்கப்பட்டது. 

தற்போது தேர்தல் முடிந்து நடத்தை விதிகளும் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் அரசியல் கட்சியினர் கொடுத்த டோக்கனுக்கு ஏதாவது கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் வாக்காளர்கள் காத்து கிடக்கின்றனர். பொதுவாக தேர்தல் நேரத்தில் இரவு நேரங்களில் மட்டுமே வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் அதிக அளவில் விநியோகம் செய்யப்பட்டது. அதே போல் தற்போதும் இரவில் யாராவது பரிசு பொருட்களுடன் வருவார்களா என்று பொதுமக்கள் காத்து கிடக்கின்றனர். தேர்தல் முடிந்து 8 நாட்களாகியும் பெரும்பாலான நிறுவனங்களுக்கு இன்னும் ஏராளமானவர்கள் வேலைக்கு செல்லவில்லை. அரசியல் கட்சியினர் கொடுத்த பணத்தை வைத்து தாராளமாக செலவு செய்து வருகிறார்கள். 

தேர்தல் அலை ஓய்ந்தும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் வசதியாகவே உள்ளனர். தொடந்து பொதுமக்களிடம் பணபுழக்கம் அதிகமாகவே உள்ளது. டோக்கனுக்கு ஏதாவது கிடைக்குமா? என்று தங்கள் பகுதியில் உள்ள அரசியல் கட்சி நிர்வாகிகளை தினமும் கேட்டு வருகிறார்கள்.தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் கிழக்கு தொகுதி மக்கள் அதற்குள் தேர்தல் முடிந்து விட்டதே என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

புதன், 1 மார்ச், 2023

#Breaking news ஈரோடு கிழக்கு தொகுதி... தபால் வாக்குகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை...

#Breaking news ஈரோடு கிழக்கு தொகுதி... தபால் வாக்குகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை...


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது...

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 238 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது. அதன் பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது. மொத்தம் 15 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

16 மேஜைகளில் 15 சுற்றுகளாக எண்ணப்படும் - மாவட்டத் தேர்தல் அதிகாரி பேட்டி

16 மேஜைகளில் 15 சுற்றுகளாக எண்ணப்படும் - மாவட்டத் தேர்தல் அதிகாரி பேட்டி


ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரிமான கிருஷ்ணணுண்ணி இன்று சித்தோடு ஐ.ஆர்.டி.டி அரசினர் பொறியல் கல்லூரியில் வாக்கு எண்ணும மையத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணணுண்ணி கூறுகையில் ...

தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது, வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பான அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
அடுத்தது முக்கியமாக வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 2-ந் தேதி நடைபெற உள்ளது. 

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்கு மையத்திற்கு 5 அடுத்து பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

துணை ராணுவத்தினர், போலீசார் என 450 பேர் சுழற்சி முறையில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஒரு ஷிட்டில் 150 பேர் வரை பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். வாக்கு எண்ணிக்கை மையம், அதன் சுற்றுவட்டார பகுதியில் என 48 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

மின்னணு வாக்கு பதிவு வைக்கப்பட்டுள்ள, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறை, அதன் சுற்று வட்டாரப்பகுதி என அனைத்து பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, இதனை கண்காணிக்கவே ஒரு குழு தனியாக நியமிக்கப்பட்டுள்ளன, 

வாக்குப்பதிவின்போது 2 பூத்துகளின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் அவற்றுக்கு பதில் மாற்று எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. இடைத்தேர்தலில் அதிக வாக்குப்பதிவானது நல்ல விஷயம். 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி எங்கள் தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன .மேலும் ராணுவமும் கொடி அணிவகுப்பு நடத்தின. இதன் காரணமாக வாக்குப்பதிவு அதிகரித்து இருக்கலாம். வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும். தொடங்கியதும் தபால் ஓட்டுக்கள் பிரித்து எண்ணப்படும். பின்னர் அரை மணி நேரம் கழித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் பிரித்து எனப்படும். 

இதற்காக இரண்டு அறைகளில் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளன 15 சுற்றுகள் வரை வாக்குகள் எனப்பட்டு அதன் பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும். எந்த நேரத்திற்குள் வாக்கு எண்ணிக்கை முடியும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. 

முடிந்த அளவு குறிப்பிட்ட நேரத்தில் வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

திங்கள், 27 பிப்ரவரி, 2023

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை 74.79 சதவீத வாக்குகள் பதிவாகயுள்ளதாக ஈரோடு இடைத்தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதில், ஆண்கள் - 82,138, பெண்கள் - 88,037, மூன்றாம் பாலினத்தவர்கள் - 17 பேர் என மொத்தம் 1,70,192 பேர் வாக்களித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, ராஜாஜிபுரம் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று இருந்த 138 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு வாக்களித்தனர் என்றார்.

வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குச்சாவடிகளில் முகவர்கள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு "சீல்" வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்...பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை வரும் மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் - முதல்வர் மு.க ஸ்டாலின்..! https://www.shabanewstamil.com/2023/02/1000_25.html#.Y_zfB0sNaF0.whatsapp

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

துணை ராணுவத்தினர் - தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் - ஈரோடு எஸ்.பி சசிமோகன் பேட்டி

துணை ராணுவத்தினர் - தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் - ஈரோடு எஸ்.பி சசிமோகன் பேட்டி


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியவுடன் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். ஈரோடு சம்பத் நகர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தின் பாதுகாப்பு பணிகளை இன்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் பார்வையிட்டார்.

தொடர்ந்து சசிமோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர 5 கம்பெனி துணை ராணுவத்தினர், 4 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர 5 ஏ.டி.எஸ்.பி.கள், 15 டி.எஸ்.பி.கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 32 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் போலீஸாருடன், கூடுதலாக துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சுற்றி 200 மீட்டருக்குள் அரசியல் கட்சியினர் யாரும் உள்ளே வர அனுமதி இல்லை. 200 மீட்டருக்கு அப்பால் அரசியல் கட்சியினர் இரண்டு சேர் டேபிள் வைத்து அமர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வரும் பொது மக்களுக்கு பூத்சிலீப் வழங்கலாம் ஆனால் அதில் கட்சி சின்னம் எதுவும் இருக்கக் கூடாது. இதை கண்காணிக்கவும் தனியாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

#Breaking news ஈரோடு இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது  - வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

#Breaking news ஈரோடு இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது - வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது


ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக கே.எஸ்.தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்பட பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடத்தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில் மாதிரி வாக்கு பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. வழக்கமாக 6 மணிக்கு மாதிரி வாக்கு பதிவு நடைபெற்றது. 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் முன்னரே மாதிரி வாக்கு பதிவு துவங்கியது. மாதிரி வாக்கு பதிவு முடிவடைந்த பிறகு மின்னனு இயந்திரங்கள் மீண்டும் சரி செய்யப்பட்டு, 7 மணிக்கு வாக்கு பதிவு துவங்கி, வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர் 

இடைத்தேர்தலுக்கு 52 இடங்களில் 238 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் இதில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 பேர் ஆண்களாகவும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பேர் பெண்களாகவும் உள்ளனர்.

இந்த இடைத்தேர்தலில் 1430 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 286 வாக்குப்பதிவு கட்டுப்பாடு கருவிகள், 310 விவிபெட் இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன.
நான்கு மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 2200 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்கு சாவடிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்

வாக்கு சாவடிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்


ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இதனையொட்டி 238 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி இன்று தொடங்கியது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள 2.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க, 52 இடங்களில் 238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடி மையங்களில் 1,206 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர், இது தவிர கூடுதலாக 20 சதவீதம் என்ற அடிப்படையில், 48 வாக்குச் சாவடி கூடுதல் மையங்கள் (ரிசர்வ்) என மொத்தம் 286 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச் சாவடி மையங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலா ஒரு முதன்மை அலுவலர் மற்றும் 3 நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 4 பேர் பணியாற்றுவர்.


அதன்படி, 238 வாக்குச்சாவடி மையங்களுக்கு 286 முதன்மை அலுவலர்கள், மூன்று நிலைகளிலான 858 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளில் பணிபுரிய 62 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இத்தேர்தலில் பயன்படுத்தப்படும் 1,430 வாக்குப்பதிவு எந்திரங்கள் (ஈவிஎம்), வாக்காளர்கள் வாக்களித்ததை உறுதிப்படுத்தும் 310 எந்திரங்கள் (விவிபேட்), 286 கட்டுப்பாட்டு எந்திரங்கள் (கன்ட்ரோல் யூனிட்) அனைத்தும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டது.

சனி, 25 பிப்ரவரி, 2023

பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை வரும் மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் - முதல்வர் மு.க ஸ்டாலின்..!

பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை வரும் மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் - முதல்வர் மு.க ஸ்டாலின்..!


திமுக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ள பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக வரும் மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றார் முதல்வர் மு.க ஸ்டாலின்..!

ஈரோடு கிழக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக வரும் மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு பிரச்சாரம் செய்துவருகிறார். ஈரோடு சம்பத் நகரில் காலை 9 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். தொடர்ந்து பெரியவலசு, பாரதி தியேட்டர் சாலை, பேருந்து நிலையம், மஜித் வீதி வழியாக கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே பேசினார்.


அப்போது அவர், "ஈரோடு கிழக்கு தொகுதியில் நமது அணியின் சார்பில் வெற்றி பெற்று, சிறப்பாக பணிபுரிந்து வந்த திருமகன் ஈவெரா மறைந்த சூழலில், அந்த இடத்தை பூர்த்தி செய்ய, அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தர வேண்டும். திமுகவின் அடித்தளமே ஈரோடுதான். கருணாநிதி பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு.

பொதுத்தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், உங்கள் தொகுதியில் முதல்வர், நான் முதல்வன், பத்திரிகையாளர் நல வாரியம் கலைஞர் எழுதுகோல் விருது, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு, பெரியாரின் பிறந்தநாளை சமூகநிதி நாளாக அறிவிப்பு என பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். 


பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றும் வகையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றியுள்ளது.

நாங்கள் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக, தவறான தகவலைத் தெரிவிக்க விரும்பவில்லை,  இந்த ஆட்சியில் எதையும் செய்யவில்லை என்று கூறும் எதிர்க்கட்சித் தலைவர் படித்துப் பார்க்க வேண்டும் இவையெல்லாம் உண்மையா என சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

திமுக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ள பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ 1000 உரிமைத் தொகையை, நிதிநிலைமை சரியாக இருந்திருந்தால், உடனே வழங்கி இருப்போம், இருப்பினும், மார்ச் மாதம் நிதி நிலை அறிக்கையில், பெண்களுக்கான உரிமைத் தொகை ரூ 1000 எப்போது வழங்கப்படும் என அறிவிக்கவுள்ளோம், என் காலத்திலேயே நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதே என் லட்சியம்,

இந்த ஆட்சி முறையாக நடக்கிறதா என்பதை எடை போடும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. எனவே, வாக்காளர்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும். கடந்த தேர்தலில் திருமகன் ஈவெரா 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்குமளவிற்கு வெற்றி அமைய வேண்டும்" என்று பேசினார்.

இதையும் பாடியுங்கள்...ஈரோடு மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்.. https://www.shabanewstamil.com/2023/02/blog-post_53.html#.Y_nZx7Z-oHM.whatsapp


முன்னதாக, சம்பத் நகர் பிரதான சாலையில் பயணித்தபோது, பிரச்சார வேனில் இருந்து இறங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் சாலையோரம் வரவேற்பு அளித்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து கே.என்.கே. சாலை, மூலப்பட்டறை வழியாக பிராமண பெரிய அக்ரஹாரம் சென்ற முதல்வர், முனிசிபல் காலனியில் பேசும் முதல்வர் ஸ்டாலின், பன்னீர் செல்வம் பூங்கா வழியாக பெரியார் நகர் சென்று தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பேசிய  முழுமையான வீடியோ காட்சிகள்... https://youtu.be/2c9DYRWC_do
வரலாற்றில் மிக மோசமான தேர்தலாக ஈரோடு இடைத் தேர்தல் பதிவாகி உள்ளது - அரசியல் விமர்சகர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டு

வரலாற்றில் மிக மோசமான தேர்தலாக ஈரோடு இடைத் தேர்தல் பதிவாகி உள்ளது - அரசியல் விமர்சகர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டு


ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக திருமகன் ஈவெரா இருந்தார். இவர் கடந்த மாதம் திடீரென காலமானார். இதையடுத்து வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி உள்ளார். அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்து வருகிறார். சமீபத்தில் அருந்ததியர் பற்றி சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.மொத்தம் 77 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது, தற்போது தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்ட உள்ளது. 

இன்று பிரசாரம் முடிவுக்கு வர உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 21 மாத ஆட்சியில் திமுக ஆட்சியின் செயல்பாட்டுக்கு மக்கள் வழங்கும் மதிப்பெண்ணாக இந்த தேர்தல் இருக்கும் என கூறப்படுகிறது.

இதனால் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைக்க திமுக, காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். அதிமுகவில் நிலவிய குழப்பத்துக்கு மத்தியில் இரட்டை இலை சின்னத்தை பெற்ற மகிழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உள்ளது. எப்படியாவது தென்னரசை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அதிமுகவும் திமுகவுக்கு இணையாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

பிரச்சாரம் மட்டுமன்றி, வாக்காளர்களை செமத்தியாக கவனிக்கிறார்கள் திமுகவும், அதிமுகவும்.  வேலைக்கு செல்வதை விட அதிகளவில் வருமானம் வருவதால் மக்கள் பிரசாரத்தை தொழிலாகவே மாற்றிக் கொண்டுள்ளார்கள் முக்கால்வாசி வாக்காளர்கள்.  பிரசாரத்துக்கு செல்லும் பெண்களுக்கு தினமும் குறைந்தது ரூ.750 முதல் ரூ. 1000 வரை கிடைத்து வந்தது.

தேர்தல் பணிமனையில் அமர்ந்து கொண்டால் ரூ.500, பிரியாணி, ஆண்களுக்கு ரூ.500 மற்றும் மதுபாட்டிலும் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் இடைத்தேர்தல் பிரசாரத்தை வாக்காளர்கள் நன்றாகவே கவனிக்கிறார்கள். இது ஒருபக்கம் என்றால், குக்கர், வெள்ளி கால் கொலுசு, வெள்ளி டம்ளர், பட்டுபுடவை மற்றும் பிற பொருட்கள் என கிடைக்கிறது.

பால் குக்கர், காய்கறி வெட்டும் கட்டர், பிளாஸ்டிக் பாக்ஸ் செட், சமையலுக்கான குக்கர், கடா  போன்றவையும் பல்வேறு இடங்களில் கமுக்கமாக வாக்காளர்களுக்கு விநியோகித்து வருகிறார்கள் கரைவேட்டிக்காரர்கள். இதற்கெல்லாம் மேலே ஒரு படி போய் ஸ்மார்ட் வாட்ச் கொடுத்தும் வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்கள்.  20 நாள் பிரசாரம், ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் என ஒவ்வொரு வாக்காளர்களும் சுமார் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை சம்பாதித்து வருகிறார்கள்.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாளே உள்ள சூழலில் இன்னும் பல பரிசுகள் கிடைக்குமா ? என்ற ஏக்கத்தில் வாக்காளர்கள் தொகுதியை சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய முறைகேடுகள் தேர்தல் ஆணையத்துக்கு இதுவரை தெரியாமல் இருக்கிறதா ? என்ற கேள்வியும் எழுகிறது. வரலாற்றில் மிக மோசமான தேர்தலாக ஈரோடு இடைத் தேர்தல் பதிவாகி உள்ளது என்று அரசியல் விமர்சகர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி உள்ளனர்.

இணையும் பாருங்கள்... https://youtu.be/vrWw3UUftHU

புதன், 22 பிப்ரவரி, 2023

தி.மு.க - நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கிடையே கடும் மோதல்.. கல்வீச்சில் 2 தரப்பினருக்கும் மண்டை உடைந்தது.. போலீசாரும் தாக்கப்பட்டதால் பரபரப்பு..!

தி.மு.க - நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கிடையே கடும் மோதல்.. கல்வீச்சில் 2 தரப்பினருக்கும் மண்டை உடைந்தது.. போலீசாரும் தாக்கப்பட்டதால் பரபரப்பு..!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27-ந் தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரம் 25-ந் தேதி மாலை 5 மணிக்கு ஓய்கிறது. இதை முன்னிட்டு அனைத்துக்கட்சி தலைவர்களும் ஈரோட்டில் சூறாவளி பிரசாரத்தை நடத்தி வருகிறார்கள். உச்சகட்ட பரபரப்பை எட்டி இருக்கும் கிழக்கு இடைத்தேர்தலில் நேற்று தி.மு.க. மற்றும் நாம்தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் திடீர் கலவராமாக மாறியதால் பெருமு் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தி.மு.க.வினர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே தேர்தல் பணிமனைகள் வைத்து அந்தந்த பகுதி மக்களிடம் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வும் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையான தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை உழைத்து வருகிறார்கள்.

இங்கு 2 பெரிய கூட்டணிகளுடன் தே.மு.தி.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் போட்டியில் இருக்கிறார்கள். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 77 வேட்பாளர்கள் இந்த போட்டியில் உள்ளனர்.

இதனால் தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரிக்க பல்வேறு வீதிகள் வழியாக சென்று வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக அவர் நேற்று இரவு 7.30 மணி அளவில் வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் அருகே காவிரி ரோடு பகுதியில் சீமான் வந்த வழித்தடத்தில், அவருக்கு முன்பாக கட்சியினரின் வாகனங்கள் அணிவகுத்து வந்தன. அப்போது அங்கு தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள் சிலர் குமு்பலாக நின்று கொண்டிருந்தனர். அவர்கள் நாம்தமிழர் கட்சியினரை பார்த்து எதிர்ப்பு கோஷம் எழுப்பினார்கள். அதற்கு பதிலடியாக நாம் தமிழர் கட்சியினரும் கோஷம் எழுப்பினார்கள். வாகனங்களில் சென்றவர்கள் அங்கேயே இறங்கி, நின்று கொண்டிருந்த தி.மு.க.வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் 2 தரப்பினருக்கும் இடையே கைகலப்பு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் தாக்கியதில் தி.மு.க. தொண்டர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தி.மு.க.வினர் கையில் வைத்திருந்த கட்சிக்கொடி கட்டி இருந்த இரும்பு குழாய்களை வைத்து சரமாரியாக தாக்கத்தொடங்கினார்கள். அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியினரும் தங்கள் கட்சிக்கொடி கட்டி இருந்த கம்பி குழாய்களை எடுத்து வீசினார்கள். இந்த தாக்குதலில் 2 தரப்பை சேர்ந்தவர்களும் மண்டை உடைக்கப்பட்டு காயம் அடைந்தனர். இந்த திடீர் கலவரத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் 2 தரப்பினரையும் சாமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், அதிரடியாக தாக்கிக்கொண்ட 2 தரப்பினரும் சமாதானம் செய்ய வந்த போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கிடையே போலீசார் சம்பவ இடத்தில் குவிந்தனர். போலீசார் அதிகம் பேர் குவிந்ததால் சற்று தாக்குதல் குறைந்தாலும் வாக்குவாதம் தொடர்ந்தது. அப்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 2 தொண்டர்களை தி.மு.க.வினர் இழுத்துச்சென்று விட்டதாகவும், அவர்களை மீட்டுத்தரவும் வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் தி.மு.க.வினர் அப்படி யாரையும் நாங்கள் இழுத்துச்செல்லவில்லை என்று பதில் அளித்தனர், இந்த வாக்குவாதம் மீண்டும் மற்றி மோதல் ஏற்படும் வாய்ப்பு வந்தது.

இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தபோதே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர் மேனகா நவநீதன் ஆகியோர் திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்து கொண்டே வந்தனர். அவர்கள் அங்கு கைகலப்பு நடப்பதை பார்த்துக்கொண்டே, பிரசாரம் செய்து கொண்டு வந்தவர், இங்கே போலீசார் விரைந்து வாருங்கள். தி.மு.க. குண்டர்கள் கலவரம் செய்கிறார்கள். போலீசார் வாகனங்களுக்கு முன்னால் வரவும். அன்பு மக்களே பாருங்கள். இதுதான் திராவிட அரசியல். திராவிட கட்சிகள் செய்த சாதனை. இந்த குண்டர்களை ஏவி, ஒரு தூய அரசியலலை சாக்கடை ஆக்கியது. நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் விவசாயி என்று கலவரத்தை தங்களுக்கு சாதகமாக பிரசாரம் செய்து கொண்டே அந்த பகுதியை கடந்து சென்றனர். இங்கே கலவரம் செய்பவர்களை போலீசார் பார்த்துக்கொள்வார்கள் என்று கூறியபடி பொதுக்கூட்டம் நடந்த பகுதிக்கு சென்றனர்.

இதற்கிடையே தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்பக துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் மற்றும் போலீசார் வந்தனர். அத்துடன் துணை ராணுவப்படையினர், ஆயுதப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதற்கிடையே இந்த கலவரத்தில் மண்டை உடைக்கப்பட்டவர்களை போலீசார் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அதுமட்டுமின்றி, மாவட்ட காவல் துறை ண்காணிப்பாளர் சசிமோகன், 2 தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அதைத்தொடர்ந்து பேசிய தி.மு.க. பொறுப்பாளர் ஒருவர், தேர்திலில் தி.மு.க. வெற்றி 100 சதவீதம் உறுதி செய்து விட்டதால், சீமான் போன்றவர்கள் தேர்தலை நிறுத்த சதி செய்கிறார்கள். இதில் நமது தோழர்கள் காயம் அடைந்து உள்ளனர். ஆனால், தேர்தலை கருத்தில் கொண்டு நாம் அமைதியாக கலைந்து செல்வோம் என்று பேசினார். அதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் அந்த பகுதியில் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் இருந்தனர். பொதுக்கூட்டம் முடிந்ததும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு அரசு ஆஸ்பத்திரி சென்று காயம்பட்ட கட்சியினரை பார்த்து ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

இந்த திடீர் மோதலில் தி.மு.க. கட்சியின் மேட்டுப்பாளையம் நகர செயலாளர் முகமது யூனுஸ்(வயது 56) உள்பட 6பேரும், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சென்னையை சேர்ந்த ரவிக்குமார், புதுக்கோட்டையை சேர்ந்த மதன் (22), விழுப்புரம் மாவட்டம் வளையபட்டு பகுதியை சேர்ந்த முத்துக்குமரன்(40), ஈரோட்டை சேர்ந்த இம்மானுவேல்(31) உள்பட 5 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் பணியாற்றும் திருவண்ணாமலை மாவட்டம் போலூர் பகுதியைசேர்ந்த போலீஸ் பிரபுதேவா(24), வேலூர் மாவட்டம் புத்தூர் பகுதியை சேர்ந்த போலீஸ் அன்புமணி(40), காட்பாடி லத்தேரி பகுதியை சேர்ந்த போலீஸ் நிஷாந்த்குமார் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். தி.மு.க - நாம்தமிழர்கள் தொண்டர்கள் 11 பேரும், போலீசார் 3 பேரும் உயிருக்கு ஆபத்து இன்றி நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த திடீர் கலவரம் ஈரோடு தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திங்கள், 20 பிப்ரவரி, 2023

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..! எப்போது வழங்கப்படும் என முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உதயநிதி..!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..! எப்போது வழங்கப்படும் என முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உதயநிதி..!


ஜெயலலிதாவுக்கோ, உங்களை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவிற்கோ, மக்களுக்கோ நீங்கள் உண்மையாக இல்லை. உங்கள் எஜமானர்கள் மோடி, அமித்ஷாவுக்கு மட்டுமே உண்மையாக இருக்கிறீர்கள் என எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.

எடப்பாடி பழனிசாமி அவர்களே 7 நாட்கள் ஷேவ் பண்ணாம இருந்தா எல்லாருக்கும்தான் மீசை வரும். பெரியார் மண்ணில் நின்று கொண்டு ஆண் பிள்ளையா? என்று கேட்கிறீர்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என பேசியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, உதயநிதி பேசுகையில் அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். கலைஞரின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன்.

கடந்த முறை 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகனை வெற்றி பெறச் செய்தீர்கள். இந்த முறை அவரது தந்தையை 1லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி மீசை வைத்த ஆம்பளயா, வேட்டி கட்டிய ஆண் பிள்ளையா என கேட்டார், 2016ம் ஆண்டு தலைமை செயலகத்தில் சிபிஐ சோதனை செய்தபோது, அவரது வாய்க்கு ஜிப்பாக அவரது மீசை மாறியது. கொடநாடு என்ற பேரைக் கேட்டாலே அவரது மீசை காதுகளை மூடிக்கொள்கிறது. 

தூத்துக்குடியில் அப்பாவிகள் 13 பேரின் கழுத்தை நெரிக்க கயிறாக அவரது மீசை இருந்தது. இரு பெண்களின் கால் செருப்பிற்கு பாலீஸ் போடும் பிரஸ்ஸாக அவரது மீசை இருந்தது. எந்த பயனும் இல்லாத அந்த மீசையைத்தான் தமிழக மக்கள் மழுங்கடித்தனர்.

மேலும் திமுகவின் பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பாக முக்கிய தகவலை வெளியிட்டார். பெண்கள் மனதில் உள்ள கோரிக்கை என்னவென்று எனக்கு தெரியும். குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் எப்போது வழங்கப்படும் என்பது தான்.  பெண்களுக்கான உரிமைத்தொகை அதிகபட்சமாக 5 மாதங்களுக்குள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்துள்ளாதக தெரிவித்தார். 

முழுமையான கிளிக் செய்யவும் ...

https://youtu.be/xka-bX4AOg4