ஈரோடு மாவட்டம், பவானி அருகே லட்சுமி நகரில் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகை கொள்ளையடித்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது ஒரு பெண் என்பது தெரிய வந்ததை தொடர்ந்து 2 ஸ்கூட்டர் பறிமுதல் 4 பேர் கைது - இருவருக்கு வலைவீச்சு..!
ஈரோடு அருகே உள்ள அக்ரஹாரம் பகுதியைச் சார்ந்தவர் கீர்த்தன் இவர் பவானி காலிங்கராயன் பாளையம் அடுத்துள்ள லட்சுமி நகர் பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். அங்கு 2 பெண்கள் 2 ஆண்கள் தங்கி பணிபுரிந்து வருவதாக தெரிய வருகின்றனர். இதனால் இந்த மசாஜ் சென்டருக்கு தினந்தோறும் ஆண்கள்-பெண்கள் என அதிக அளவில் வந்து மசாஜ் செய்து கொள்கின்றனர்.
இதனைத் தெரிந்து கொண்ட 6 போர் கொண்ட ஒரு கும்பல் இன்று இரவு 8 முப்பது மணி அளவில் கத்தி மற்றும் கிரிக்கெட் பேட் ஆகியவற்றுடன் திடீரென உள்ளே புகுந்து அங்கு தங்கியிருந்த பெண்களை மிரட்டி பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
மசாஜ் சென்டரை சிசிடிவி மூலம் கண்காணித்துக் கொண்டிருந்த சென்டரின் உரிமையாளர் கீர்த்தன் அதிர்ச்சியுடன் சம்பவம் குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உள்ளே சென்று பார்த்த போது 6 பேர் கொண்ட கும்பல் இருந்ததை கண்டுள்ளனர்.
போலீசார் வந்தவுடன் கும்பலை சார்ந்த 6 பேரும் போலீசாரை கீழே தள்ளி விட்டு வெளியே தப்பி ஓடி உள்ளனர், இதனை தொடர்ந்து போலீசார் சுமார் 500 மீட்டர் துரத்தி பொதுமக்கள் உதவியுடன் 2 பேரை துரத்தி பிடித்தனர்,
பிடிபட்ட இருவரையும் சித்தோடு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியதில் ஈரோடு வீரப்பன் சத்திரத்தை சார்ந்த கார்த்தி ( 22), ஈரோடு பெரிய வலசு பகுதியைச் சேர்ந்த கவுதம் ( 24 ) என்பது தெரியவந்தது, மேலும் இந்த வழக்கில் தப்பிய ஓடிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்
இந்நிலையில், காவல் துறையினரின் தொடர் தேடுதல் வேட்டையில், ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த பெருமாள் மலை அருகே உள்ள மங்களகிரி காவிரி ஆற்றின் படித்துறையில் ஒரு இளைஞரும், அவருடன் ஒரு பெண்ணும் தலைமறைவாக இருப்பதாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்து கொண்டிருந்த பவானி கோண வாய்க்கால் இந்திரா நகர் பகுதி சார்ந்த தேவிகா ஸ்ரீ மற்றும் அவருடன் 17 வயது இளைஞர் ஒருவரும் இருந்துள்ளனர்,
அவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இருவரையும் பிடித்து சித்தோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மசாஜ் சென்டரில் உள்ளே புகுந்து கொள்ளையடிப்பதற்கு மூளையாக செயல்பட்டவர் தேவிகா ஸ்ரீ என்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அவர் மெகந்தி ஆர்டிஸ்ட் ஆக உள்ளதாகவும் , போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்தை நடத்த முடியவில்லை என்பதால் தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மசாஜ் சென்டரில் புகுந்து கொள்ளை அடிக்க திட்டமிட்டது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து கைது செய்த பட்ட இருவரிடமிருந்து இரண்டு ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பலமுறை மசாஜ் சென்டருக்கு சென்று வந்ததாகவும் அங்கு அழகிகளை வைத்து மசாஜ் செய்து வருவதால் கடையின் உரிமையாளர் காவல்துறையில் புகார் அளிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவு குற்றவாளிகளாக இருந்து வரும் பிரவீன் மற்றும் தட்கர் பிரபு என இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மக்கள் நெருக்கமாக உள்ள பவானி லட்சுமி நகர் பகுதியில் இரவு நேரத்தில் கும்பலாக உள்ளே புகுந்து மசாஜ் சென்டரில் வேலை செய்த பெண்ணிடம் இருந்து முக்கால் பவுன் மதிப்பிலான தங்கச் செயின் மற்றும் பணம் பறித்துக் கொண்டு சென்றது லட்சுமி நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 coment rios: