ஈரோடு மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக ஜவஹர் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆவடி மாநகர காவல் ஆணையராக அருண் நியமனம், திருப்பத்தூர் எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான் நியமனம்
நாமக்கல் எஸ்.பி.யாக ராஜேஷ் கண்ணன், வேலூர் எஸ்.பி.யாக மணிவண்ணன் நியமனம்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழக உள்துறை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை, நாமக்கல், வேலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பணியாற்றி வந்த 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் ஜவஹர் என்பவர் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருக்கும் சசிமோகன், சென்னையில் காலியாக இருந்த க்யூ பிரான்ச் சிஐடி யின் காவல்துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
0 coment rios: