கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஈரோடு ஸ்ரீ அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கிருஷ்ணம்பாளையம், ஜீவா நகர் பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி முளைப்பாரி எடுத்து வந்து, பக்தி பரவசத்துடன் குலவை சத்தமிட்டு கும்மியடித்து நடனமாடி சிறப்பு வழிபாடு...!
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்களாக சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் இந்த ஆண்டுக்கான குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம் 21-ந்தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து கடந்த 25-ந்தேதி இரவு 3 கோவில்களிலும் கம்பங்கள் நடப்பட்டது. இந்த கம்பங்களுக்கு தினந்தோறும் பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வருகிறார்கள். இந்த நிலையில் ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் புனிதநீர் ஊற்றுவதற்காக கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டு சென்றனர். இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
வெகு விமர்சையாக நடைபெற்று வரும் கோவில் திருவிழாவையொட்டி கிருஷ்ணம்பாளையம், ஜீவா நகர் பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி முளைப்பாரி எடுத்து வந்து, பக்தி பரவசத்துடன் குலவை சத்தமிட்டு கும்மியடித்து நடனமாடி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்,
இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம், காவேரி சாலை, ஆர்.கே.வி சாலை, மணிக்கூண்டு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக 500க்கும் மேற்ப்பட்ட பெண்கள் முளைப்பாரி தலையில் சுமந்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இறுதியாக கிருஷ்ணம்பாளையத்தில் துவங்கி இந்த முளைப்பாரி ஊர்வலமானது காரை வாய்க்கால்பகுதியில் அமைந்துள்ள சின்ன மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்த பின்னர் பெண்கள் கொண்டு வந்த முளைப்பாரிகளை, காளிங்கராயன் வாய்க்காலில் வாய்க்காலில் மிதக்க விட்டு நீரில் அனுப்பி வைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளான தீப்பந்தாட்டம், சிலம்பம் உள்ளிட்ட கலைகளுடன் நாட்டுப்புறக் கலைஞர்கள் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தியதால் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது..!
0 coment rios: