கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மரணமடைந்ததைத் தொடர்ந்து அத்தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் கடந்த மார்ச்-15 ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இதய ரத்த நாளங்கள் சுருங்கியிருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
0 coment rios: