நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையோடு இணைந்து இரத்ததான முகாம் ஈரோடு திண்டல் புதுக்காலனிப் பகுதியில் நடைபெற்றது.
அமைப்பின் மாவட்டத் தலைவர் இஸ்மாயில், மாவட்டச் செயலாளர் சாகுல், துணைச்செயலாளர் இஜாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கிளையின் மருத்துவசேவைப் பிரிவு செயலாளர் அஷ்ரப் தலைமை தாங்கினார்.
பெண்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கெடுத்து இரத்த தானம் செய்தனர், பல்வேறு வகையைச் சேர்ந்த 70 யுனிட் இரத்தங்கள் இம்முகாம் மூலமாக அரசு மருத்துவக்கல்லூரிக்கு கிடைத்தது.
நிறைவாக கிளைச் செயலாளர் முஹம்மது யாஸின் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
0 coment rios: