வெள்ளி, 22 செப்டம்பர், 2023

ஈரோடு மாவட்டத்தில் பெட்ரோல் நிலையம் அமைக்க குறைந்த வட்டியில் தாட்கோ கடனுதவி

ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த நபர்களுக்கு, பெட்ரோல் நிலையம் அமைக்க தாட்கோ மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் பெட்ரோல் நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த நபர்களுக்கு தாட்கோ மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்

இத்திட்டத்தில், பயன்பெற www.petrolpumpdealerchayan.in என்ற இணையதளத்தில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண், பெண் அனைவரும் வரும் செப்.27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் முதல் முறையாக கொள்முதல் செய்யும் பெட்ரோல், டீசல் (ஒரு டேங்கர்) தொகையினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு குறைந்த வட்டியில் தாட்கோ மூலமாக கடனாக வழங்கப்படும்.

பாரத் பெட்ரோலியம் லிமிடெட் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாட்கோ தலைமை அலுவலக மாநில திட்ட மேலாளர் (திட்டங்கள்) கைபேசி எண் 73584 89990-ஐ தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட மேலாளர், தாட்கோ, 6-வதுதளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு என்ற முகவரியிலும், 0424-2259453 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: