ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக கே.எஸ்.தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்பட பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடத்தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில் மாதிரி வாக்கு பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. வழக்கமாக 6 மணிக்கு மாதிரி வாக்கு பதிவு நடைபெற்றது. 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் முன்னரே மாதிரி வாக்கு பதிவு துவங்கியது. மாதிரி வாக்கு பதிவு முடிவடைந்த பிறகு மின்னனு இயந்திரங்கள் மீண்டும் சரி செய்யப்பட்டு, 7 மணிக்கு வாக்கு பதிவு துவங்கி, வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்
இடைத்தேர்தலுக்கு 52 இடங்களில் 238 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் இதில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 பேர் ஆண்களாகவும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பேர் பெண்களாகவும் உள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் 1430 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 286 வாக்குப்பதிவு கட்டுப்பாடு கருவிகள், 310 விவிபெட் இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன.
நான்கு மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 2200 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 coment rios: