ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்களித்தார் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
காலை 9 மணி நிலவரப்படி, 10.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 12,679 ஆண் வாக்காளர்கள், 10,294 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 22,973 வாக்காளர்கள் தற்போது வரை வாக்களித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், “ ஸ்டாலினின் நல்லாட்சிக்கு இடைத்தேர்தல் வெற்றி சான்றாக அமையும். ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் 80% பேர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. ராகுல்காந்தியின் தியாக நடைபயணத்துக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இந்த தேர்தல் அமையும். வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.” என்றார்.
0 coment rios: