ஞாயிறு, 11 டிசம்பர், 2022

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடிய ஒரே ஒரு பாடலால் சண்டையிட்டுக் கொண்ட இரு இசை ஜாம்பவான்கள்!

திரைத்துறையில் நடிப்பில் மட்டும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வந்த பலர், பின்பு மெல்ல, மெல்ல இசையிலும் தங்களுடைய கவனத்தை திருப்பி இருக்கிறார்கள். ஆனால் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட 80களில் முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள் அப்போது இசையில் தங்களுடைய கவனத்தை செலுத்தாமல் இருந்து வந்தனர்.இதில் தற்போது திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துவரும் நடிகர் விஜய், அவர் நடிப்பதற்கு திரைத்துறையில் நுழைந்த அந்த காலகட்டத்திலேயே தன்னுடைய சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். அதிலும் அவர் பாடிய அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிப்பில் எப்போதும் பிஸியாக இருக்கும் நடிகர் விஜய் தற்போதும் கூட பாடல் பாடுவதை விட்டுவிடவில்லை. அந்த வகையில், கமல்ஹாசன், சிம்பு, விஜய் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் தற்போது தங்களுடைய சொந்த குரலில், திரைப்படங்களில் பாடலை பாடி வருகிறார்கள். ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரையில் திரைப்படத்தில் பாடல் பாடியதில்லை. ஆனால் அவர் இதுவரையில் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் தமிழ் திரைப்படத்தில் பாடியுள்ளார். இன்று வரையில் மக்களிடையே அந்த பாடல் ஒரு நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஸ்டைலாக பேச தெரியும், ஆனால் பாட தெரியாது. அவரை எப்படியாவது பாட வைத்து விட வேண்டும் என்று பலரும் முயற்சித்துள்ளனர். ஆனால் அது நடைபெறவே இல்லை. ஒரு முறை இளையராஜாவிற்காக மட்டுமே சூப்பர் ஸ்டார் ஒரு பாடலை பாடியுள்ளார். இளையராஜா இசையமைத்த மன்னன் திரைப்படத்தில் ரஜினியை பாட வைத்து விட வேண்டும் என்று ஒரு பாடலை பாட வைத்தார்கள். ரஜினி, விஜயசாந்தியுடன் அடிக்குது குளிரு என்ற பாடலை தமிழ் சினிமாவில் முதன்முதலாக தன்னுடைய சொந்த குரலில் பாடி அசத்தினார். இதற்கு சற்றேற குறைய 10 முதல் 15 டேக் வரையில் வாங்கி விட்டாராம். ஒரு வழியாக இதுதான் பர்ஃபெக்ட் என்று இளையராஜா அவர் பாடியதில் சிறந்தது எதுவோ, அதை தேர்ந்தெடுத்து விட்டார். ஆனால் கங்கை அமரன் வந்து ரஜினி பாடியது எதுவுமே சரியில்லை மீண்டும் பாட வையுங்கள் என்று இளையராஜாவிடம் சண்டை பிடித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இளையராஜா தன்னுடைய தம்பியிடம் நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டோம், இருந்ததில் இதுதான் சிறந்தது என்று தெரிவித்துள்ளார். யார் சொல்லியும் கேட்காத கங்கைஅமரன் ரஜினியை மீண்டும் பாட வைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அதுவும் சரியாக அமையவில்லை. இறுதியாக ஏற்கனவே தேர்ந்தெடுத்ததை தான் படத்தில் இணைத்துள்ளார்கள். தலையில் அடித்துக் கொண்டு கங்கை அமரனை திட்டி தீர்த்து விட்டாராம் இளையராஜா. இவ்வளவு பொறுமையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 10 முதல் 15 முறை பொறுமையாக பாடி தன்னுடைய உயர்ந்த பண்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று பலரும் அவரை பாராட்டி உள்ளனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: