திங்கள், 19 டிசம்பர், 2022

வாரிசு' படத்தின் மூன்றாவது சிங்கிள் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட தகவல்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

'வாரிசு' படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல், ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது
இயக்குனர் வம்சிபைடி பள்ளி இயக்கத்தில், 'தளபதி' விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே 'வாரிசு' படத்தில் இருந்து வெளியான, முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே பாடல் மற்றும் இரண்டாவது சிங்கிள் பாடலான, தீ தளபதி பாடல் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து தற்போது வெளியுள்ள வெளியாகி உள்ள தகவலில், நாளை மாலை 5 மணிக்கு 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது சிங்கிள் பாடலான 'Soul of varisu' என்கிற பாடல் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த பாடலை பிரபல பின்னணி பாடகி சின்னக்குயில் சித்ரா பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகள் எழுதியுள்ளார். டிசம்பர் 24ஆம் தேதி, இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இதுகுறித்து எவ்வித அதிகார பூர்வ தகவல் வெளியாகவில்லை. அதே போல் டீசர் மற்றும் ட்ரெய்லர் குறித்த அறிவிப்புகளுக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், ஷாம், யோகி பாபு, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, சம்யுக்தா, சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் பழனிச்சாமி ஒளிப்பதிவில், பிரவீன் கே எல் இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: