செவ்வாய், 13 டிசம்பர், 2022

என்ன நடந்தாலும் தலைவர் தலைவர் தான்: தனுஷ்

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் தனுஷ். தமிழ் சினிமாவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி. முதலில் வில்லனாக தன் திரைப்பயணத்தை ஆரம்பித்து படிப்படியாக ஹீரோவாக முன்னேறினார் ரஜினி. அதையடுத்து அவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றிபெற தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். பின்பு ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இவரை சூப்பர்ஸ்டாராக கொண்டாட துவங்கினர். இந்நிலையில் தற்போது ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து ரஜினி லைக்கா தயாரிப்பில் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் ஒரு படத்தில் ரஜினி நடிக்கயிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் ரஜினி இன்று தனது 73 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். அவருக்கு திரைத்துறையை சார்ந்தவர்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதைத்டர்ந்து தற்போது நடிகரும் ரஜினியின் முன்னாள் மருமகனுமான தனுஷ் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கின்றார். கடந்த ஜனவரி மாதம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்த நிலையில் தனுஷிற்கும், ரஜினிக்கும் இதன் காரணமாக மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல் வந்தது. ஆனால் அதையெல்லாம் மறந்து தனுஷ் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி தான் எப்போதும் ரஜினியின் ரசிகர் என நிரூபித்துள்ளார். தற்போது தனுஷின் டுவீட் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: