ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த அப்பு ஆறுமுகம் என்பவர், பழுதடைந்த வீட்டை சரி செய்ய வங்கியில் கடன் வாங்கி தருகிறேன் எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பு ஆறுமுகம் தனது நண்பர் எனக்கூறி, ஒலகடம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரை, வங்கியில் கடன் பெற்று தரும் ஏஜெண்டாக பணிபுரிந்து வருவதாக அறிமுகம் செய்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, வங்கியில் கடன் பெற தனக்கு 31 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என, சீனிவாசன் கூறியதையடுத்து முருகன் சீனிவாசனிடம் 31,000 ரூபாய் கொடுத்துள்ளார்.
பின்னர், கடன் பெற்றுத் தர காலதாமதம் செய்து வந்ததைத் தொடர்ந்து, அவரிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு இருவரும் மறுக்கவே, சீனிவாசன் மற்றும் அப்பு ஆறுமுகம் மீது அந்தியூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி, ஆறுமுகத்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தார். இதில் தலைமறைவாய் இருந்து வந்த சீனிவாசனை நேற்று கைது செய்து பவானி நீதிமன்றத்தில், ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மேலும், போலீசார் வேறு யாரிடமாவது அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா என, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
0 coment rios: