ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, ஈரோடு - பெருந்துறை சாலையில் அண்ணா தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு விழா நடந்தது.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தபோதே, அண்ணா தி.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தன்னை வேட்பாளராக தேர்வு செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த கே.எஸ். தென்னரசு கூறியதாவது, அண்ணா தி.மு.க. ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விரிவாக்கம், அரசு மருத்துவமனை மேம்பாலம், அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்வு, கனி ஜவுளிச் சந்தைக்கு புதிய வணிக வளாகம் என பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.
என்னை எளிதில் யாரும் அணுக முடியும். எனது வீட்டில் காவலுக்காக வாட்ச்மேனோ, காவல் நாய் என எதுவும் இல்லை. 24 மணி நேரமும் என்னை தொடர்பு கொள்ள முடியும்.இந்தத் தொகுதி மக்களில் பெரும்பாலானவர்கள் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு, உரிமையாய் பழகி வருகிறேன். இந்தத் தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.
பின்னர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது, எடப்பாடியார் வெற்றி வேட்பாளரை அறிவித்துள்ளார். கடுமையான போட்டி இருந்த காரணத்தினால் தான் வேட்பாளரை அறிவிக்க கால தாமதம் ஆனது. அனைவரிடமும் கலந்து ஆலோசித்து வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி மாதிரி தைரியமானவர் யாரும் இல்லை. திமுக அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு போன்றவற்றை அமல்படுத்தி உள்ளனர். எடப்பாடியாருக்கு முதல் வெற்றி ஈரோடு கிழக்கு தொகுதி தான். ஒற்றுமையாக இருந்து நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கிராமங்களே இல்லாத தொகுதி...
காவிரிக் கரையோர தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி இருக்கிறது. வடமாநிலத்தவர்கள் பெரும்பாலும் எலக்ட்ரானிக் கடை, கார்மெண்ட்ஸ் அதிக அளவில் வைத்துள்ளனர். ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் ஈரோடு கிழக்கு தொகுதி மிக சிறிய பரப்பளவு, குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி கிராமங்கள் இல்லாத தொகுதியாக உள்ளது.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் தொடங்கி மாநகராட்சி பகுதிகுள்ளேயே நிறைவடைகிறது. ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் 37 வார்டுகளை ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளடக்கியுள்ளது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதி வரிசையில் 98-வது எண் தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பின்போது ஈரோடு கிழக்கு தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது
0 coment rios: