ஞாயிறு, 29 ஜனவரி, 2023

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு அலுவலர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்களின் பிள்ளைகளை அரசு பள்ளி - கல்லூரிகளின் தான் படிக்க வேண்டும் என்று சட்ட இயற்றுவோம் என சீமான் பேட்டி...

ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு, பூசாரி சென்னிமலை வீதியில் நாம் தமிழர் கட்சியின் பணிமனையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்தார். தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மகளிர் பாசறை துணை செயலாளர் மேனகா வேட்பாளராக, சீமான் அறிவித்தார். முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்ககளிடம் அளித்த பேட்டியில்... ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வென்றால், மாற்று அரசியலை முன்னெடுப்பதற்கான வாய்ப்பாக இருக்கும். எந்த கட்சியின் வாக்குகளையும் பிரிக்க வேண்டும் என்பதில் என் நோக்கம் இல்லை. வெற்றி பெற்று, நல்ல ஒரு ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பதே நோக்கம். தேர்தல் ஆணையம், பறக்கும் படை போன்றவை, சாலையில் செல்பவர்களை வழிமறித்து பணத்தை பறிமுதல் செய்யுமே தவிர, பணம் பட்டுவாடா செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது. தேர்தல் ஆணையம் என்பதே நாடகம் கம்பெனி தான். ஓட்டுக்கு பணம் கொடுப்பது குற்றம், அப்படி கொடுத்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை என்று சொல்லும் தேர்தல் ஆணையம், இதுவரை ஒருவரையாவது கைது செய்துள்ளதா?. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவத்தை உலக தரத்திற்கு உயர்த்துவோம். அதற்கு சட்டம் இயற்றுவோம். அரசு அலுவலர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்களின் பிள்ளைகளை, அரசு பள்ளி, கல்லூரிகளின் தான் படிக்க வேண்டும் என்று சட்ட இயற்றுவோம். அப்படி செய்தால், கல்வியின் தரம் தானாக உயரும்.
தமிழகத்தில் இப்ப இருக்கிற விமான நிலையங்களிலேயே விமானங்கள் இல்லை. அப்படி இருக்க, 5 ஆயிரம் ஏக்கரில் பரந்தூர் புதிய விமான நிலையம் எதுக்கு. பெருந்துறையில் தமிழர்களை வடமாநிலத்தவர்கள் தாக்குவது ஒன்றும் புதியதல்ல. இதனை இந்த அரசால் தடுக்க முடியாது. நான் வந்தால் மட்டுமே முடியும். தமிழர்களிடம் இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால், மதுக்கடையும், இலவசமும் தான். இதனால், நம் மக்களிடம் உழைக்கும் மனநிலையே போய் விட்டது. 100 நாள் வேலை திட்டம், வேளாண்மை விட்டு, நம்மை வெளியேற்றி விட்டது. இதன் காரணமாக, இங்கிருக்கும் பணிகளுக்கு வடமாநிலத்தவர்கள் வர வேண்டியுள்ளது. பெருந்துறையில் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கை நிறைந்திருப்பதால், அவர்களது தொகுதியாக மாறிவிட்டது. இந்த நிலத்தின் அரசியலை, அதிகாரத்தை தீர்மானிக்கும் சத்தியாக அவர்கள் மாறிவிட்டார்கள். அந்த வடமாநிலத்தவர்கள், திமுக, அதிமுக, காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அவர்கள் பாஜகவிற்கு தான் வாக்களிப்பார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக வென்றால், எம்.எல்.ஏ வின் எண்ணிக்கை கூடுமே தவிர, எந்த மாற்றமும் வராது. நாங்கள் ஜெயித்தால் மட்டுமே ஒரு மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும். எதிர்கட்சியாக இருந்தபோது, ஆசிரியர்கள், செவிலியர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக நின்ற திமுக, தற்போது ஆளும் கட்சியான பின், அதனையெல்லாம் மறந்து விட்டது. இது தான் திராவிட மாடல். நிதி என்பது அரசாங்கத்திடம் இல்லை. அரசை நடத்துபவர்களிடம் தான் இருக்கிறது. கட்சிக்கு நிறைய நிதி இருக்கிறது. மாற்று வருவாயை பெருக்குவதற்கான திட்டங்கள் அரசிடம் இல்லை. சாராயத்தை மட்டுமே நம்பியுள்ளது. அதன் காரணமாக, அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தர முடியவில்லை. ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட எந்த பணியாக இருந்தாலும், ஒப்பந்த முறையில் எடுக்கப்படுகிறது. எங்களிடம் பணம் இல்லை. ஆனால் தேர்தலில் கடுமையாக உழைப்போம் என தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: