ஈரோடு மாவட்டம் பவானி புதிய பேருந்து நிலையத்திலிருந்து செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் ஒலி எழுப்பும் பைப் ஹாரன்கள் பயன்படுத்துவதாகவும், சில தனியார் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு உள்ளே வாராமல் வெளியே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதாகவும் புகார் எழுந்தது.
இதனையடுத்து கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முனுசாமி மற்றும் பவானி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் சித்ரா ஆகியோர் பவானி புதிய பேருந்து நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விதிகளுக்குப் புறம்பாக பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலியெழுப்பும் பைப் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், பவானி புதிய பேருந்து நிலையத்துக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும், போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார் .
இந்த ஆய்வின்போது பவானி நகர்மன்றத் தலைவர் சிந்தூரி இளங்கோவன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
0 coment rios: