அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் விழாவாக நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் இன்றைய தினம் சாமி தரிசனம் செய்ய பழனிக்கு வருகை தந்துள்ளனர்.
பல்வேறு ஊர்களில் உள்ள முருகன் கோவில்களில் இன்றைய தினம் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவும் பழனி முருகன் கோவிலில் கூட்டம் அதிகரித்துள்ளது.
பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய வசதியாக மலையடிவாரத்தில் உள்ள குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக பக்தர்களை அனுப்பி யானை பாதையை அடையவும், சுவாமி தரிசனம் முடித்து கீழே இருக்கக்கூடிய பக்தர்களை படிப்பாதை வழியாக அனுப்பி வைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்கவரத்து கழகம் சார்பில் 350 க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும் ,மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்கபடுகிறது.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.பக்தர்களின் பாதுகாப்பு வசிதிக்காக 3000 போலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.
0 coment rios: