புதன், 14 செப்டம்பர், 2022

ஒரு பூஜ்ஜியம் சேர்க்கப்பட்டதால் வாட்ச்மேன் வீட்டிற்கு ரூ.12 லட்சம் மின் கட்டணம்

புதுச்சேரியில் மின் துறையின் அலட்சியம் காரணமாக வாட்ச்மேன் வீட்டிற்கு 12 லட்ச ரூபாய்க்கு மின் கட்டண பில் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வரும் சரவணன் என்பவரது வீட்டிற்கு 12 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்தது, மின் கட்டணத்தை பார்த்து அதிர்ந்து போன சரவணன், இதுகுறித்து முத்தியால்பேட்டை மின் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டார். அப்போது மீட்டர் ரீடிங்கில் ஒரு பூஜ்ஜியத்தை சேர்த்து தவறாக கணக்கிட்டதாகவும், மேலும் இது சரி செய்து கொடுத்து விடுவோம் என்று கூறி நேற்று ஒருநாள் முழுவதும் சரவணனை மின் துறை அதிகாரிகள் அலைகழித்து விட்டு இன்று வருமாறு தெரிவித்துள்ளனர். இதனால் வேதனையடைந்த சரவணன் வீடு திரும்பினார். தற்போது குறித்து மின் அலுவலக இளநிலை பொறியாளர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: