ஈரோடு மாவட்டத்தில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் அமைந்துள்ள சென்னிமலைய கல்வாரி மலை யாக மாற்றுவோம் என்று கிறிஸ்துவ அமைப்பினர் கூறியதாக இந்து முன்னணி சார்பில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்ற பிரமாண்டமான கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சென்னிமலை பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுசெயலாளர் ஜே எஸ் கிஷோர் குமார் சிறப்புரை ஆற்றினார்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக புலவர் தமிழரசன், விவசாயி தூரன் மஞ்சுநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருங்கத்தொழுவு அருகில் கத்தக்கொடிக்காடு என்ற கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
பசுவபட்டியில் இருந்து வந்து அர்ச்சுனன் (எ) ஜான்பீட்டர் என்பவர் இடம் வாங்கி அரசு அனுமதி பெறாமல் ஜெபக் கூட்டம் நடத்தி வந்ததாகவும்
அக்கூட்டத்திற்கு வெளியூரில் இருந்து ஆட்களை வரவழைத்து மதப்பிரச்சாரம் செய்து வந்ததாக வும் கூறப்படுகிறது.
இப்பிரச்சாரத்தின் போது இந்து தெய்வங்களை இழிவு படுத்தியும், இந்துக்களின் பண்பாடு கலாச்சாரத்தை கொச்சைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
இந்த நிலையில் ஜெப கூட்டம் நடத்தி வந்த ஜான் பீட்டரை இந்து முன்னணி சேர்ந்த சிலர் அடித்து உதித்ததாக கூறப்படுகிறது இது தொடர்பாக மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் இதனைத் தொடர்ந்து சென்னி மலையை கல்வாரியாக மாற்றுவோம் என்று கூறி மதப் பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவ அமைப்புகளை சார்ந்தவர்களை கைது செய்ய வேண்டுமென சென்னிமலை பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி மற்றும் உள்ளூர் பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசு அனுமதி பெறாமல் ஜெபக்கூடம் நடத்திய கிறிஸ்தவர்களை கைது செய்ய வேண்டும் எனவும், இந்து மக்களை இழிவுபடுத்தியவர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எனக்கு வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் செய்தியாளிடம் பேசும் பொழுது, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் ஒரு லட்சம் பேரைத் திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார் .
0 coment rios: