இயற்கை வளமும் சுற்றுச்சூழலும் மனிதகுல வளர்ச்சியின் முக்கியம் | 90ஸ் நாஸ்டால்ஜியா 2024 மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
இயற்கை வளமும் சுற்றுச்சூழலும் மனிதகுல வளர்ச்சியின் முக்கியக் கூறுகள் என்பதில் நம்பிக்கை கொண்ட மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்களின் மனவளப் பயிற்சி மற்றும் சுற்றுச்சூழல் காக்கும் முயற்சி முகாம் - எம்எம்சி 90ஸ் நாஸ்டால்ஜியா 2024 மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
முகாமின் முதல் நாள், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகைபுரிந்த முன்னாள் மாணவர்களுக்கு, மாமல்லபுரத்தின் அடையாளமான சங்கு மாலை அணிவிக்கப்பட்டு, தமிழ்நாட்டின் பாரம்பரிய இசையான பறையிசை வரவேற்பும் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் 1990ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்களின் அணிவகுப்பு ஊர்வலமும், கிராமியக் கலை, மருத்துவர் கனகப்ரியா, கவிதாஃபென் ஆகியோரது தொடக்க விழா நடனங்களும் அரங்கேற்றப்பட்டது. பிறகு, முன்னாள் மாணவர்களின் கருத்து பகிர்வு, மருத்துவர் யு.பி. சீனிவாசன் இசைநிகழ்ச்சி என மனநலம் காக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முகாமின் இரண்டாவது நாள், மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பங்குபெற்ற இசை சிகிச்சை, சிறப்பு பட்டிமன்றம், சிரிப்பு சிகிச்சை, அழிந்து வரும் தோல்பாவைக் கூத்துக் கலையை ஊக்குவிக்கும் ‘நண்பேன்டா’, சாதகப் பறவைகளின் மெல்லிசை ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
முகாமின் மூன்றாவது நாள், அதிகாலையில் மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கு பிரபல யோகா பயிற்றுனர் அபிராமி சிறப்பு யோகா பயிற்சி வழங்கினார். பின்னர் பூமி வெப்பமயமாதலைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைக் காக்கவும் விழிப்புணர்வு மிதிவண்டிப் பேரணி நடத்தி மரக்கன்றுகள் நட்டனர்.
ஐம்பது வயது கடந்த மருத்துவர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள் மற்றும் நிதி நிர்வாகம் குறித்த வல்லுனர்களின் கருத்தரங்கோடு மூன்று நாள்கள் முகாமினை மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் நிறைவு செய்தனர்.
0 coment rios: