சென்னை:
நடிகர் அஜீத்குமாரின் தந்தை சுப்ரமணியம் (84) உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். மறைந்த சுப்பிரமணியத்தின் உடல் இன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், எனது தந்தையாரின் இறுதிச் சடங்குகள் குடும்ப நிகழ்வாகவே இருக்க விரும்புகிறோம் என்று நடிகர் அஜீத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடும்பத்தினருடன் இறுதிச் சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்ய ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 coment rios: