தமிழகத்தில் வரும் 24 ம் தேதி முதல் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படும் என அரசு தலைமை ஹாஜி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி முப்தி காஜி டாக்டர் சலாஹூத்தின் முகம்மது அய்யூப் வெளியி்ட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: இன்று (22 ம் தேதி)சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் ரமலான் பிறை காணப்படவில்லை, 24 ம்தேதி ரமலான் மாத முதல் பிறை என ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து ரம்ஜான் நோன்பு வரும் 24 ம் தேதி முதல் துவங்கும் என தெரிவித்து உள்ளார்.
0 coment rios: