சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவர் எம்எல்ஏ பதவியை இழந்துவிட்டதாக சட்டசபை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேல்முறையீடு செய்து இந்த தீர்ப்புக்கு தடை பெற்றால் மட்டுமே அவர் பதவியில் தொடர முடியும்.
கடந்த 2006-11ல் திமுக ஆட்சியின் போது, உயர்கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக பொன்முடி இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ல் வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த வழக்கில் பொன்முடி, விசாலாட்சி இருவரும் குற்றவாளி என தீர்ப்பளித்தது.
அவர்களுக்கான தண்டனை விபரங்களை நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று (டிச.,21) அறிவித்தார்.
தீர்ப்பின் முழு விவரம்: பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். மேல்முறையீடு செய்வதற்காக இந்த சிறை தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி அறிவித்தார். தண்டனையை குறைக்க வேண்டும் என விசாலாட்சி கோரிக்கை விடுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் 30 நாட்கள் அவகாசம் முடிந்ததும் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். என்றும் உத்தரவிடப்பட்டது.
குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, தற்போது தண்டனையும் அறிவிக்கப்பட்டதால், பொன்முடி திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ பதவியை இழந்துவிட்டதாக என சட்டசபை அதிகாரிகள் அறிவிப்பர். மேல்முறையீடு செய்து குற்றவாளி என்ற தீர்ப்புக்கு தடை பெற்றால் மட்டுமே பதவியில் தொடர முடியும். அதுவரை அவர் பதவியில் இருக்க முடியாது.
பொதுவாக 2 ஆண்டு சிறை என தீர்ப்பளிக்கப்பட்டால், அவர் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்துவிடுவார்.
குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு தடை பெற்றால் மட்டுமே பதவியில் தொடர முடியும்.
தீர்ப்பில் 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால், அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தான் ஜாமின் பெற முடியும்.
இதற்காகவே, இருவருக்கும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் தற்போதைக்கு அவர் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை.
சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#ChennaiHC #MinisterPonmudi #Tirukkoyilur #DVAC
0 coment rios: