செவ்வாய், 12 டிசம்பர், 2023

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா..! நலத்திட்ட உதவிகள் வழங்கி நலத்திட்ட நாளாக கொண்டாடிய ரசிகர்கள்...!


நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா...! முதியவர்களுக்கு உணவளித்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கி நலத்திட்ட நாளாக கொண்டாடிய ரசிகர்கள்...!

Erode Rajinikanth’s Birthday Celebration |ரஜினி ரசிகர்கள் முதியோர்கள் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு உணவளித்தும், ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி நலத்திட்ட நாளாக கொண்டாட்டம்..!

இந்திய சினிமாவில் வசூல் ஜாம்பவனாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த், இன்று ( டிசம்பர் 12 ) தனது 73 - வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார், இவரின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள்  மன்றம் சார்பில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் செய்தும், கோயில்களில் வழிபாடு செய்தும், கேக் வெட்டியும் ரசிகர்கள் ரஜினியின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் ஈரோடு  மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் M. சாம்ராஜ் தலைமையில், சூரம்பட்டி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது, சென்னிமலை சாலையில் உள்ள NL கருணை இல்லத்தில் முதியோர்களுக்கு  உணவு வழங்கி, கேக் வெட்டி, பட்டாசு வெடித்தும் கொண்டாடினர், 


இதனை தொடர்ந்து கொண்டாட்டத்தில், மாநகர செயலாளர் ராஜா(எ) மோகன் ராஜ், 1ஆம் மண்டலம் பட்டா ராம் குமார், மதிவாணன், 4 மண்டல செயலாளர் முத்துகுமார், ஜீவா மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

இன்றைய தினம் எங்களுக்கு இரட்டடிப்பு மகிழ்ச்சியை தலைவர் தந்துள்ளார் என உற்சாக மிகுதியுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினி ரசிகர்கள்..!

கொண்டாட்டங்களை தொடர்ந்து ஸபா நியூஸ் தமிழுக்கு பிரத்யேக  பேட்டியளித்த ரஜினி ரசிகர்கள் ...

தலைவரின் பிறந்த நாளை இன்று நாள் முழுவதும் அதிகாலை முதல் இரவு வரை வெகு விமர்சையாக தீபாவளியைப் போல் கொண்டாடி வருகிறோம், இதனை நலத்திட்ட நாளாகவும் கொண்டாடுகிறோம், அந்த வகையில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக ஏழை, எளியோர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை அளித்து வருவதும், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஆண்டுதோறும் ரத்த தானம் செய்வது, இன்று நாள் முழுவதுமே முதியவர்களுக்கு  உணவளிப்பது உள்ளிட்டவை வழங்கி வருகிறோம்,

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள லால் சலாம் படத்தினையும், 170 படத்தின் டீசர் வெளியாக உள்ள நிலையில், லால் சலாம் திரைப்படத்தையும், 170 படத்தின்  டீசரையும் மிகுந்த உற்சாகத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம், இன்றைய தினம் எங்களுக்கு இரட்டடிப்பு மகிழ்ச்சியை தலைவர் தந்துள்ளார் என உற்சாக மிகுதியுடன் மகிழ்ச்சிபட தெரிவித்த ரசிகர்கள்..!

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: