சனி, 4 நவம்பர், 2023

சிக்னல் கேப்பில் தத்ரூப மௌன நாடகம் - சாலையில் பயணிப்போரின் கவனத்தை ஈர்த்த கீதாஞ்சலி பள்ளி மாணவ மாணவிகள் ...!

சிக்னல் கேப்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவ மாணவிகளின் தத்ரூப மௌன நாடகம் - சாலையில் பயணிப்போர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது ..!

ஈரோடு, திண்டல் கீதாஞ்சலி பள்ளி மாணவ, மாணவியரின் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோட்டின் மையப்பகுதிகளான ஆட்சியர் அலுவலகம், பன்னீர் செல்வம் பூங்கா மற்றும் காளை மாடுசிலை ஆகிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் நடைபெற்றது. 

கீதாஞ்சலி பள்ளியின் முதல்வர்  சுப்புலட்சுமி தலைமை தாங்கி விழிப்புணர்வு மௌன நாடகத்தை தொடங்கி வைத்தார், அப்பொழுது, தங்கள் வருகைக்காக காத்திருப்பவர்கள் முன்னால், மௌன நாடகம் (MIME) மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பறை முழங்க இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் மூன்று பேர் பயணித்து விபத்தில் சிக்கி உயிர் இழக்கும் நிலை, மது போதையில் இருசக்கர வாகனத்தை இயக்கி இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிக்கப்படும் நிலை, இதனால் ஏற்படும் உயிர் சேதம், பொருள் சேதம், பாதிப்பு உள்ளிட்டவைகளை தத்ரூபமாக மௌன நாடகம் மூலம் அரங்கேற்றினர்,  


ஈரோட்டின் மையப்பகுதிகளில் தனியார் பள்ளி மாணவ, மாணவியரின் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு மெளன நாடகம் - ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாகப்படுத்திய மாணவிகள் ...!

மேலும், சாலைவிதிகைளைப் பயன்படுத்தி, சீட்பெல்ட் அணிந்தும், ஹெல்மெட் அணிந்தும் வந்த வாகன ஓட்டுகளுக்கு பூங்கொத்து வழங்கி ஊக்குவித்தனர், விதிகளை மீறியவர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சிறிய வடிவிலான ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன. இதில் 50 தனியார் மாணவ மாணவியர் மற்றும் 20 ஆசிரிய/ஆசிரியைகள் பங்கேற்றனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: