இதைத்தொடர்ந்து சீமான் மீது எஸ்.சி., எஸ். டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 11ம் தேதி ஈரோடு கோர்ட்டில் சீமான் நேரில் ஆஜரானார்.
இந்நிலையில், வழக்கு கடந்த 30ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி மாலதி விசாரணை நடத்தினார். அப்போது சீமான் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வக்கீல் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் இவ்வழக்கு இன்று (நவ.6) மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது சீமான் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி முருகேசன் வழக்கை அடுத்த மாதம் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
0 coment rios: