தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய கோரி பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆன்லைன் விளையாட்டு காரணமாக தமிழகத்தில் சிலர் உயிரிழந்து உள்ளனர்.
தமிழக அரசு சார்பிலும் சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் என்.ஆர் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டவர்களின் சாம்பல்களை தமிழக ஆளுநருக்கு தபால் மூலம் அனுப்பும் போராட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.
ஈரோடு தலைமை தபால் நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தபோதிலும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர் ஜனனி, தனியாக சென்று தைரியமாக ஆளுநருக்கு சாம்பலை அனுப்பி தனது உணர்வை வெளிப்படுத்தினார்...
எனினும் இன்று காளைமாட்டு சிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரகுருபரன் தலைமையில், நிர்வாகிகள் திரண்டு வந்து ஆன்லைன் விளையாட்டு கண்டித்தும் தடை செய்ய போறியும் கோசம் எழுப்பினர். ஆன்லைன் விளையாட்டில் இறந்தவர்களின் சாம்பல்களை ஒரு தபால் கவரில் அள்ளிப்போட்டு, அதனை தபால் மூலம் அனுப்புவதற்காக ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
அப்போது டவுன் டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு வேன் மூலம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
0 coment rios: