தன்பாத்திலிருந்து கேரளா ஆலப்புழா செல்லும் ரெயிலில் 22 கிலோ கஞ்சா சிக்கியது குறித்து என ஈரோடு ரெயில்வே போலீசார் விசாரணை..?
வெளிமாநிலங்களிலிருந்து ஈரோடு வழியாக பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது, இவ்வாறு வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்களில் கஞ்சா கடத்தி வரும் சம்பவமும் அதிகரித்துள்ளது. இதனை கண்காணிக்கவும், தடுக்கவும் ஈரோடு ரெயில்வே போலீசார் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தது, ஈரோடு ரெயில்வே போலீசார், எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒவ்வொரு பெட்டியாக சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது எஸ் - 1 என்ற, முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் 41வது நம்பர் சீட்டு அருகில் ஒரு பை கேட்பாரற்று கிடந்தது. அந்தப் பையை திறந்து சோதனை செய்த போது அதில் 22 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டு ரெயில்வே போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதன் மதிப்பு ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். இதுகுறித்து அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தற்போது யாரும் தங்களுக்கு இது குறித்து தெரியாது என்று கூறிவிட்டனர். இதனை அடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் கஞ்சா பையன் ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
போலீசார் வருவதை கண்டு கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் கஞ்சா பையை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: