மதுரையைச் சேர்ந்த மணமகன் ராகேஷ், மணமகள் தக்ஷினா நடுவானத்தில் இருவருக்கும் நடந்த திருமணத்தில், கொரோனா பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதாக, ‘ஸ்பைஸ்ஜெட்’ விமான நிறுவனத்தின் ஊழியர்கள், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த டாக்டர் ராகேஷ் – தக்ஷினா திருமணம் நேற்று முன்தினம் நடுவானில் விமானத்தில் நடந்தது. நடுவானில் திருமணம் செய்வதற்காக, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானத்தில் முன்பதிவு செய்யப்பட்டது. விமானத்தில் 150-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். கொரோனா விதிமுறைகளை மீறி, அதிகளவு மக்கள் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர். முக கவசம் அணிவது, சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை அவர்கள் மீறியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, மத்திய விமானப் போக்குவரத்துத்துறை விசாரணையை துவக்கியுள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய குடும்பத்தார் மீதும் போலீசில் புகார் கொடுக்கும்படி, விமான நிறுவனத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும்படி, விமான போக்குவரத்து இயக்குனரகமும், மதுரை மாவட்ட நிர்வாகமும் விமான நிறுவனத்திற்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.
செவ்வாய், 25 மே, 2021
Author: shabanewstamil
We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.
0 coment rios: