ஈரோடு புதிய பேருந்து நிலையம் குறித்த கலந்தாலோசனை கூட்டம்; அமைச்சர் முத்துச்சாமி பங்கேற்பு!
ஈரோடு மாவட்டம் சோலாரில் ரூ.63.50 கோடி மதிப்பில் அமைக்கப்படும் புதிய பேருந்து நிலையத்துக்கான கலந்தாலோசனைக் கூட்டம், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் ரூ.63.50 கோடி மதிப்பில் அமைக்கப்படும் புதிய பேருந்து நிலையத்துக்கான கலந்தாலோசனை கூட்டம், இன்று ஈரோடு மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றினர்.
0 coment rios: