சனி, 24 டிசம்பர், 2022

சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததால் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பிரதான வாய்க்காலுக்கு ஆயிரம் கன அடி நீர் திறப்பு...விவசாயிகள் மகிழ்ச்சி .

தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணணுண்ணி நேரில் ஆய்வு செய்து பேட்டி ... பவானிசாகர் அணையின் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 10-ந் தேதி பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு என்ற இடத்தில் கீழ்பவானி கால்வாயின் 59ஆவது மைல் பகுதியில் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பாசனத்திற்காக திறக்கப்பட்ட 1300 கன அடி நீர் விளை நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் தண்ணீர் புகுந்து 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் மூழ்கின. உடனடியாக பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டது. சம்பவ பகுதியை பார்வையிட்ட அமைச்சர் முத்துசாமி சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதன்படி உடைந்த கட்டுமானங்களை அகற்றிவிட்டு புதிய கட்டுமானம் அமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரவு பகலாக ஈடுபட்டனர். கால்வாயின் வலது புறத்தில் இருந்து மழை நீர் இடது புறம் செல்வதற்காக கால்வாயி்ன் அடியில் அமைக்கப்பட்டிருந்த வடிகால் சுரங்க பாலத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாகவே இந்த உடைப்பு ஏற்பட்டது. அந்த கட்டுமானங்களை முழுமையாக இடித்து அகற்றி விட்டு சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. கரையின் இருபுறமும் 50 மீட்டர் நீளத்திற்கு சுவர் எழுப்பப்பட்டது. குழாய் பதித்து கான்கிரீட் அமைக்கப்பட்டது. பொதுப்பணி துறையினர் தொடர்ந்து முகாமிட்டு இரவு பகலாக சீரமிப்பு பணிகளை வேகமாக முடித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று முதல் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை பார்வையிட்ட தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் ...

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: