ஈரோடு தனியார் நிதி நிறுவன ஊழியரை பாஜக எஸ்சி எஸ்டி பிரிவு மாநிலத் துணைத் தலைவர் விநாயகமூர்த்தி தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (58). ய.இவர் பாஜக பட்டியலின.மாநில துணைச் செயலாளராக இருந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவருக்குச் சொந்தமான செருப்பு கடைக்கு வந்த ஈரோடு மரப்பபாலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தன்னுடைய மோட்டார் பைக்கை விநாயகமூர்த்தியிடம் அடமானமாக வைத்து ₹30,000 பணத்தை கடனாக வாங்கியதாக தெரிகிறது.
பணத்தை வாங்கிய நாளில் கடைக்கு முன்பு படுத்திருந்த செந்தில்குமார் காலையில் உயிரிழந்த நிலையில் அங்கு சடலமாக கிடந்தார்.
இந்நிலையில் செந்தில்குமார் அடமானமாக வைத்த மோட்டார் பைக் விநாயகமூர்த்தியின் கடைக்கு முன் நிறுத்தப்பட்டிருந்தது.
இதனை கண்ட சிட்டி பைனான்ஸ் நிறுவனத்தின் பணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விக்னேஷ்குமார் (28) என்பவர் விநாயகமூர்த்தியிடம் சென்று, செந்தில்குமார் நிறுத்தி வைத்துள்ள மோட்டார் பைக்கை தன்னுடைய நிதி நிறுவனத்தில் அடமானமாக வைத்து ரூ.55,000 பெற்றுள்ளதாகவும், செந்தில்குமார் அந்த பணத்தை திருப்பி தராததால் அவருக்கு சொந்தமான மோட்டார் பைக்கை எடுத்து செல்வதாக விநாயகமூர்த்தியிடம் கூறியுள்ளார்.
செந்தில்குமார், தன்னிடம் மோட்டார் பைக்கை வைத்து ரூபாய் 30,000 கடன் வாங்கி உள்ளதால் அதனை திருப்பிக் கொடுத்து விட்டு மோட்டார் பைக்கை எடுத்துச் செல்லுமாறு விநாயகமூர்த்தி கூறியுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, வாக்குவாதம் முற்றியநிலையில் விநாயகமூர்த்தி விக்னேஷ் குமாரை சரமாரியாக தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் காயமடைந்த விக்னேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் விநாயகமூர்த்தி மீது சூரம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதன், 28 டிசம்பர், 2022
Author: shabanewstamil
We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.
0 coment rios: