சனி, 10 டிசம்பர், 2022

உதகையில் சாலை பாதுகாப்பு விழா: வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கிய ஆட்சியர் அம்ரித்!

உதகையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசங்களை ஆட்சியர் அம்ரித் வழங்கினார்.  நீலகிரி மாவட்டம் உதகை சேரிங் கிராஸ் பகுதியில் காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் கலந்து கொண்டு 30 பயனாளிகளுக்கு இலவச தலைக்கவசத்தை வழங்கினார். முன்னதாக சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் அம்ரித் பேசியதாவது - சாலை பாதுகாப்பு வார விழாவின் நோக்கம் வாகன ஓட்டிகள் விபத்தில்லாமல் வாகனத்தை இயக்க வேண்டும் என்பதே. இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும். வாகன ஓட்டிகள் பாதுகாப்பான வேகத்திலும், இரவில் எதிரில் வாகனம் வரும்போது ஓளியை குறைத்தும், சாலை சந்திப்பில் வலது புறத்தில் இருந்து வாகனங்களுக்கு வழிவிட்டு முன் செல்லும் வாகனங்களுக்கு போதிய இடைவெளி விட்டும், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் கவனமாக செல்ல வேண்டும். போக்குவரத்து விதிகளை மதித்து வாகன ஓட்டுவது மிகவும் முக்கியம். வாகனங்கள் இயக்கும் போது, செல்போன் பயன்படுத்தாமலும், நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும்போது விபத்துக்களை தவிர்ப்பது மட்டுமில்லாமல் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத், டேன் டீ பொதுமேலாளர் ஜெயராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, ஏடிஎஸ்பி மோகன் நவாஸ், உதகை ஆர்.டி.ஓ துரைசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: