சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சூரியன் உதய காட்சியை காண குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள்..!
உலக புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான கன்னியாகுமரியில் அதிகாலை மற்றும் மாலையில் கடலில் சூரியன் உதயம் மற்றும் மறையும் இயற்கை நிகழ்வை கண்டு ரசிப்பதற்காகவும் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சவாரி மூலமாக சென்று காண்பதகாகவும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குமரி சுற்றுலா தலத்திற்கு வருகை தருகின்றனர்.
இன்று வார விடுமுறை என்பதால் சூரியன் உதயமாகும் காட்சியை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதலே குமரி கடற்கரை திருவேணி சங்கமத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் சூரியன் உதயமாகும் நிகழ்வை தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
தொடர்ந்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்திற்கு குவிந்தனர்.
இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. தற்போது சபரி மலை சீசன் காலம் என்பதால் அதிக அளவில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
ஞாயிறு, 18 டிசம்பர், 2022
Author: shabanewstamil
We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.
0 coment rios: