செவ்வாய், 13 டிசம்பர், 2022

எச்சரிக்கை! OTP இல்லாமலே வங்கியில் இருந்து ரூ.50 லட்சம் மோசடி!!

உங்கள் போனிற்கு வரும் OTPகளை யாருக்கும் பகிர வேண்டாம் என்ற எச்சரிக்கை அடிக்கடி கேட்டிருப்போம். போன் கால்/எஸ்எம்எஸ்/மின்னஞ்சல் மூலம் OTP கேட்டு மேற்கொள்ளப்படும் ஆன்லைன் மோசடிகள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த, சைபர் கிரைம் அதிகாரிகளால் இவ்வாறு எச்சரிக்கைப்பட்டு வருகிறது. ஆனால், டெல்லியில் தற்போது ஓடிபி இல்லாமலே நூதன முறையில் வங்கி கணக்கில் இருந்த பணத்தை மோசடியாளர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் பாதுகாப்பு சேவை மையத்தின் இயக்குநர் ஒருவருக்கு தான் இப்படியான சம்பம் நடந்துள்ளது. அவருடைய போனிற்கு யாரோ ஒருவர் கால் செய்துள்ளார். ஆனால், போனை எடுத்தால் எதிர்முனையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இவ்வாறு சில மிஸ்டுகால்கள் வந்துள்ளன. பின்னர் சிறிது நேரம் கழித்து, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து 12 லட்சம், 10 லட்சம் என சுமார் 50 லட்சம் ரூபாய் 4 பேரது கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெசேஜ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நிறுவன உரிமையாளர், உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை வேட்டையில் இறங்கிய போலீசார், முதற்கட்டமாக இவருடைய பணம் டெபாசிட் ஆன அந்த 4 பேரை பிடித்துவிட்டனர். அவர்களிடம் விசாரணை செய்தததில், மோசடி கும்பல் இந்த நான்கு பேரை பகடை காயாக பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. மேலும், அந்த 4 பேருக்கும் குறிப்பிட்ட பணத்தை கமிஷனாக வழங்குவதாகவும் மோசடியாளர்கள் கூறியுள்ளனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: